உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொடைக்கானல், ஊட்டிக்கு செல்ல வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு மக்களுக்கு அல்ல என்கிறது ஐகோர்ட்

கொடைக்கானல், ஊட்டிக்கு செல்ல வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு மக்களுக்கு அல்ல என்கிறது ஐகோர்ட்

சென்னை:'ஊட்டி, கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணியருக்கு, எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை; வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துஉள்ளது.ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களில், எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது தொடர்பாக, சென்னை ஐ.ஐ.டி., மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.இந்த ஆய்வுகள் நிறைவு பெற, கால தாமதமாகும் என்பதால், கோடை விடுமுறையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை, வரும் 7ம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், சிறப்பு அமர்வில் முறையீடு செய்தார்.இதைக் கேட்ட நீதிபதிகள், 'வரும் 8ம் தேதி, மறு ஆய்வு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என்று தெரிவித்தனர். மேலும், 'சுற்றுலா பயணியருக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை; வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை