உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யும் அரசாணைக்கு ஐகோர்ட் தடை

கோவில் சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யும் அரசாணைக்கு ஐகோர்ட் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: கோவில் சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யும் வகையில் வெளியான அரசாணைக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது.சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: கோவில்களுக்கு சொந்தமான பல சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவை நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்பட்டு வருகின்றன. கோவில் சொத்துக்களை பத்திரப் பதிவு செய்யும் வகையில், தமிழக வருவாய்த்துறை, புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பதிவுத்துறையில் பூஜ்ஜியம் மதிப்பில் பதிவேற்றம் செய்ய, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கொண்ட குழு அமைத்து அரசாணை பிறப்பிக்க, அத்துறைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.பட்டா நிலம், மானிய நிலம், ஊழியம் நிலம் என்ற வகைப்பாடுகளில் கோவில் நிலம் உள்ளது. புது அரசாணை மூலம் கோவில் சொத்துக்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஆஜரானார்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. தமிழக வருவாய்த்துறை, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V Venkatachalam
அக் 11, 2025 13:04

பழைய நடைமுறை படி கோவில் டிரஸ்ட் இடம் ஒப்படைக்க வேண்டும். டிரஸ்ட் டில் இருப்பவர்களிடம் தகராறு என்றால் கோர்ட் தீர்த்து வைக்க வேண்டும். இந்த களவாணிகளை துரத்தி அடிக்க அது ஒண்ணுதான் சரியான வழி. தலைமை இடத்தில் ஒரு தெய்வ பக்தி உள்ள மனுஷனை உட்கார வைக்கணும்.


Suppan
அக் 11, 2025 16:58

அந்த டிரஸ்டிகளே திருட்டு திராவிட ஆசாமிகளாக இருந்தால் ? மலை முழுங்கி மஹாதேவன்கள்


Ramona
அக் 11, 2025 09:18

இது நம்ம நாடா ,இல்ல? , ஆஹா உண்மையான மகிழ்ச்சியாக இருக்கு , மிக்க நன்றி.


GMM
அக் 11, 2025 07:38

கோவில் சொத்துகள் மூலவர் பெயரில் மட்டும் தான் இருக்க வேண்டும். இது அறநிலைய துறை கீழ் வராத கோவிலுக்கும் பொருந்த வேண்டும். மக்கள் காணிக்கை கோவிலுக்கு தான் கொடுக்கின்றனர். அரசுக்கு அல்ல. நன்கொடை நிதியை தற்போது utive officers - பெயரில் வசூலிக்கின்றனர்? இதற்கு தடை வேண்டும். கோவில் சொத்துகள் பதிவு நிரந்தர தடை விதிக்க வேண்டும். மத சார்பற்ற மாநில நிர்வாகம் கோவிலை துறையின் கீழ் கொண்டு வந்தது சட்ட, அரசியல் சாசன விரோதம்.


rama adhavan
அக் 11, 2025 07:34

இன்றைய அடி இந்த நீதிமன்றத் தடை ஆணையா? பேஷ், பேஷ்.


முக்கிய வீடியோ