உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனிமையில் மனைவி ஆபாச படம் பார்ப்பது கணவரை கொடுமைப்படுத்துவது ஆகாது ஐகோர்ட் அதிரடி

தனிமையில் மனைவி ஆபாச படம் பார்ப்பது கணவரை கொடுமைப்படுத்துவது ஆகாது ஐகோர்ட் அதிரடி

மதுரை: 'தனிமையில் மனைவி ஆபாச படம் பார்ப்பது, கணவரை கொடுமைப்படுத்துவதாக கருத முடியாது. விவாகரத்து கோர அது ஒரு காரணமாக அமையாது' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.ஒரு ஆணும், பெண்ணும் கோவிலில் ஹிந்து முறைப்படி திருமணம் செய்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இருவரும் தனித்தனியாக வாழ்கின்றனர்.இருவரையும் மீண்டும் சேர்ந்து வாழ அனுமதிக்க உத்தரவிடக்கோரி சம்பந்தப்பட்ட குடும்பநல நீதிமன்றத்தில் மனைவி மனுத்தாக்கல் செய்தார்.ஆதார மற்றவைவிவாகரத்து அளிக்க உத்தரவிடக்கோரி, அதே நீதிமன்றத்தில் கணவர் மனு செய்தார். இதை அந்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதற்கு எதிராக உயர்நீதிமன்ற கிளையில் கணவர் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.பூர்ணிமா அமர்வு அளித்த உத்தரவு:மனைவி பால்வினை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் அதிகமாக செலவு செய்வார். போனில் ஆபாச படம் பார்ப்பதில் அடிமையாக இருந்தார். அடிக்கடி சுயஇன்பத்தில் ஈடுபட்டார். வீட்டு வேலைகளை செய்ய மறுத்தார். மாமியாரை மோசமாக நடத்தினார். நீண்ட நேரம் போனில் பேசுவார். இப்படி தன்னை கொடுமைப்படுத்தினார் என, மனுதாரர் தரப்பு தெரிவித்தது.மனைவி பால்வினை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுவது கடுமையான களங்கத்தை ஏற்படுத்துகிறது. இக்குற்றச்சாட்டிற்கு ஆதாரம் தேவை.திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். இக்கால கட்டத்தில், மனைவியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றதற்கான சாட்சிகளாக டாக்டர்கள் யாரும் விசாரிக்கப்படவில்லை. இக்குற்றச்சாட்டை நிரூபிக்க மனுதாரர் தவறிவிட்டார்.மனைவியுடன் சேர்ந்திருந்த பிறகு, தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்ததாக மனுதாரர் கூறியுள்ளார். அதற்கான மருத்துவ அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை. தவறான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுகளால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுவதையும் நிரூபிக்க மனுதாரர் தவறிவிட்டார். ஆபாச படத்தை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமாகாது. சட்டத்தால் தடை செய்யப்பட்டதை பார்ப்பது தண்டனைக்குரிய செயலாகும். குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் பார்ப்பது குற்றம். எந்தவொரு போதையும் மோசமானது; ஆபாச பட போதையும் அது போன்றது தான். இது பார்வையாளரை பாதிக்கும்.நியாயம் இல்லைஇது பெண்களை இழிவாக சித்தரிப்பதால், அதை தார்மீக ரீதியாக நியாயப்படுத்த முடியாது.மனைவியின் செயல், சட்டத்திற்கு புறம்பாகாதவரை, இக்காரணத்திற்காக மனுதாரர் விவாகரத்து கோர முடியாது. மொபைல் போனில் தனியாக ஆபாச படம் பார்க்கும் மனைவியின் செயல் மனுதாரரை கொடுமைப்படுத்துவதாக இருக்காது. இது, அப்படத்தை பார்க்கும் மனைவியின் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.திருமணத்திற்கு பின், ஒரு பெண் வெளியே யாருடனாவது பாலியல் உறவு வைத்துக் கொண்டால், அது விவாகரத்திற்கான காரணமாக அமைகிறது. மனைவி சுய இன்பத்தில் ஈடுபடுவது விவாகரத்திற்கான ஒரு காரணமாக இருக்க முடியாது. ஆண்களிடையே சுய இன்பம் உலகளாவியது என்று ஒப்புக் கொள்ளப்பட்டால், பெண்களின் சுய இன்பத்தை களங்கப்படுத்த முடியாது.இவ்வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மனுதாரரின் மனைவி மறுத்துள்ளார். மனுதாரரின் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அவர்கள் இரண்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை. கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்கிறோம். மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

subramanian
மார் 21, 2025 14:38

திறமை நேர்மை இல்லாத ... தீர்ப்பு கொடுக்க கூடாது.


Sampath Kumar
மார் 21, 2025 08:13

இரண்டு பேரும் சேர்ந்து தான் எல்லாம் பண்ண வேண்டும் என்று சொல்லுங்கள் யுவர் ஹானெர்


appusamy
மார் 21, 2025 07:20

இவர்கள் இருவருக்கும் உடல், மனப்பொருத்தம் இல்லை. கோர்ட் இவர்களை பிரித்து வைப்பதே சரி. இதுக்கு மேக் விளக்கம் போட்டால் அந்த நீதிமான்களுக்கும், நமக்கும் வித்தியாசம் இல்லை. இதை இந்த அளவுக்கு கோர்ட் வரை கொண்டு சென்றதே தவறு. விசாரித்து விலாவாரியா விவரித்து தீர்ப்பு சொல்வது அதைவிட அபத்தம்.


Raj
மார் 21, 2025 07:14

ஆபாச படத்தை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமாகாது என்றால் சட்டத்தால் தடை செய்யப்பட்ட படங்கள் எவை எவை. ஐகோர்ட் லிஸ்ட் கொடுக்குமா? என்னய்யா வழக்கு. நீதிமன்றங்கள் எல்லாம் இப்பொழுது சிரிப்பு மன்றம் ஆகி விட்டது.


GMM
மார் 21, 2025 06:57

திருமணத்திற்கும் பின் ஒரு பெண் வெளி நபருடன் உறவு கொண்டால் எந்த இழப்பீடு இல்லாமல், விவாகரத்து வழங்க வேண்டும். காரணம் தவறான முறையால், வாரிசு உருவாகி கணவன், சமூகம் சட்டம் , மரபு ஏமாற்றப்படுகிறது. பெண் விவாகரத்து பெற்று விருப்பம் போல் வாழலாம். பிற காரணங்களை வக்கீல் வழக்கில் வெற்றி பெற நீதிமன்றம் கொண்டு செல்ல வேண்டாம். முக்கிய வழக்குகள் ஏராளம் நிலுவையில் உள்ளன. அதற்கு சட்ட விதி தேடி முடித்து வையுங்கள்.


m.arunachalam
மார் 21, 2025 06:18

கேவலத்தின் எல்லையை நெருங்கிவிட்டோம். பெண்களை மதிக்கும் விதத்திலான எந்த காரணங்களும் அந்த பெண்ணிடம் இல்லை. பண்பாடு, கலாச்சாரம் எங்கே? எந்த ஆணும் இந்த பெண்ணுடன் வாழ முடியாது .


RAAJ68
மார் 21, 2025 04:43

இப்படி ஒரு செய்தி தேவையா. பெண்களை தவறு செய்ய தூண்டும்.


தாமரை மலர்கிறது
மார் 21, 2025 02:37

இந்த மனுஷன் கூட வாழ்வதற்கு பதில், அந்த மனைவி விவாகரத்து செய்துவிட்டு போயிடலாம்.


Appa V
மார் 21, 2025 01:58

இந்த மாதிரி வழக்குகளை கண்ணும் கருத்துமா மிக தீவிரமா விஜாரித்து நியாயம் வழங்குகிறார்கள்


Padmasridharan
மார் 21, 2025 01:46

"ஆண்களிடையே சுய இன்பம் உலகளாவியது என்று ஒப்புக் கொள்ளப்பட்டால், பெண்களின் சுய இன்பத்தை களங்கப்படுத்த முடியாது" Men does not have menstrual cycle but womans egg comes out periodically. How could it be compared