உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கோவையில் நாளை அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

 கோவையில் நாளை அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

சேலம்: கோவை - ஜோலார்பேட்டை தடத்தில், 'வந்தே பாரத்' ரயில்கள், அதிகபட்சம், 110 கி.மீ., வரை இயக்கப்படுகின்றன. இதை மணிக்கு, 130 கி.மீ., வரை அதிகரிக்க, தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. பணி நிறைவடைந்து, முதல் கட்ட சோதனை ஓட்டம், கடந்த, 15ல் நடத்தப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நாளை நடக்க உள்ளது. காலை, 8:00 முதல் மாலை, 6:00 மணி வரை, கோவை முதல் ஜோலார்பேட்டை வரையான தடத் தில், மக்கள் எச்சரிக்கையாக இருக்க, ரயில்வே சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ