உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்லுாரி முதல்வரை கலாய்த்த உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன்

கல்லுாரி முதல்வரை கலாய்த்த உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: மணப்பாறை அருகே அரசு கல்லுாரி ஆண்டு விழாவில், 'இந்த கல்லுாரியில் இளங்கலை படித்தவர்கள், முதுகலை படிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கல்லுாரி முதல்வர் பேசியதற்கு, உயர் கல்வித்துறை அமைச்சர் கிண்டலாக பதில் சொல்லி கலாய்த்தார். திருச்சி மாவட்டம், பன்னாங்கொம்பில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் மூன்றாம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் மலர்மதி பேசுகையில், ''அரசு கல்லுாரியில் இளங்கலை படிக்கும் மாணவர்கள், இதே கல்லுாரியில் முதுகலை படிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று, கோரிக்கை விடுத்தார். அதன்பின், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேசியதாவது:இந்த கல்லுாரியில் இளங்கலை படித்து முடிப்பவர்களின் பெற்றோர், பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து விடுவோம் என்கின்றனர். அவர்களுக்கு கல்யாணமா; முதுகலை கல்வியா என, இரு அமைச்சர்களும் முடிவெடுங்கள் என்பதை போல, கல்லுாரி முதல்வர் எங்களிடம் பொறுப்பை விட்டுள்ளார். தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைத்திருக்கும் நெருக்கம், நான் அவர் மீது வைத்திருக்கும் பாசம் இவைகளை கூட்டி, கழித்து பார்த்தால், கல்லுாரி முதல்வரின் கோரிக்கை விரைவில் நிறைவேறி விடும் என்றே தோன்றுகிறது.இரு அமைச்சர்களையும் மேடையில் அமர வைத்துக்கொண்டு, கல்லுாரி முதல்வர் வைத்த கோரிக்கை, 'மாட்டிக் கொண்டீர்களா மந்திரிகளா' என்பதை போல உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

M R Radha
ஏப் 01, 2025 22:31

பத்தாம் கிளாஸ் பெயில் உயர் கல்வி.துறை அமைச்சர். கருமம்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 01, 2025 14:34

மாண்புமிகுக்களுக்கு கலாய்க்கத்தான் தெரியும். அவருக்குத் தெரிஞ்சதை கரெக்ட்டா பண்ணியிருக்கார் ....


Ramesh Sargam
ஏப் 01, 2025 11:48

முதலில் அமைச்சர் ஆகுபவர்கள் ஓரளவு படித்திருக்கவேண்டும் என்று ஒரு சட்டம் இயற்றவேண்டும். ஒரு எட்டாம் வகுப்பு படித்த அமைச்சர் ஆன ஒருவர் IAS, IPS, IFS படித்தவர்களை எப்படி மோசமாக நடத்துகிறார்கள், ஏதோ இந்த அமைச்சர்கள் வீட்டு தொழிலாளர்கள்போல.


sankaranarayanan
ஏப் 01, 2025 10:56

பள்ளித்தலைவர் மாணவ மாணவிகளின் மீது உள்ள அக்கறையினால் அதேபபள்ளியில் மேற்படிப்பு தொடர வசதி செய்துதர வேண்டும் என்று நன்கு படித்து பட்டம் பெற்ற முதல்வர் பேசுகிறார் ஏனென்றால் அவருக்குத்தான் தெரியும் கல்வியின் மஹிமை பள்ளி கல்வித்துறை அமைச்சர்கள் எந்த பட்டம் பெற்றார்கள் என்று யாருக்கு தெரியும் அவர்கள் இதுபற்றி பேச வாய்ய்ப்பே இல்லை .


vbs manian
ஏப் 01, 2025 09:07

முதல்வர் உழைத்து படித்து பதவியில் உள்ளார். கல்வியின் முக்கியத்துவம் அறிந்தவர். அவரது அனுபவம் அக்கறை பேசுகிறது. கிண்டல் செய்பவருக்கு என்ன தெரியும். ஐந்து வருட சுகபோகம்.


ஆரூர் ரங்
ஏப் 01, 2025 07:38

எல்லோரையும் உயர்கல்வி படிக்கச் சொல்லுவது அர்த்தமற்றது. பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தி அதுவே 90 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்புக்கு போதும் என்ற நிலை வரவேண்டும்.


Raj
ஏப் 01, 2025 06:52

கல்லூரி முதல்வருக்கு என்ன பேசவேண்டும் என்று தெரியவில்லை, கல்வி தகுதி இல்லாத அமைச்சரும் அப்படி தான்.


முக்கிய வீடியோ