உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: ஊதிய முரண்பாடு நீக்கக் கோரியும், வடகிழக்கு பருவ மழைக்கு முன் சாலைகள் சீரமைப்பு பணிக்கு போதிய நிதி ஒதுக்கக் கோரியும், தமிழக நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் சங்கம் சார்பில், சென்னை கிண்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்க பொதுசெயலர் வீரமணி, துணைத் தலைவர் பாண்டியன், பொருளாளர் தியாகராஜா ஆகியோர் கூறியதாவது: ஆறாவது ஊதியக் குழுவின் ஒருநபர் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஊதிய பரிந்துரைகளை, ஏழாவது ஊதியக் குழுவில் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். பொது மாறுதல் மற்றும் விருப்ப மாறுதல் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sampath
செப் 25, 2026 11:45

திருடார்கள் கூட்டம். ஊதியம் காண்ட்ராக்டர் இடம் இருந்து பிச்சை வாங்க மாட்டுஓம் என்று உறுதி எடுத்த பின் பரிசீலிக்கலாம். மழைக்கு முன் பணம் ஒதுக்க வேண்டும் என்பது ஓநாய் கேட்பது போல உள்ளது


சமீபத்திய செய்தி