உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வாங்க: ஹிந்து முன்னணி அழைப்பு

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வாங்க: ஹிந்து முன்னணி அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை: முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது, பாதுகாப்பு காரணமாக, ஆங்கிலேய அரசு அதை தடை செய்தது. அதனால், கோவில் முன்புறம் உள்ள துாணில் தீபம் ஏற்றப்பட்டது. அந்த நடைமுறை இதுவரை மாறவில்லை. மலை மீதுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, ஹிந்து முன்னணி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மறைந்த ஹிந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் நடத்திய சட்டப் போராட்டம் இதற்கான தீர்ப்பைப் பெற்றுத் தந்தது. ஆனால், தீர்ப்பு வந்து பல ஆண்டுகளாகியும் கோவில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. வழிபாடு நம் உரிமை; நீதிமன்றமும் சட்டப்படி அதை உறுதி செய்துள்ளது. தீபத்துாணில் தீபம் ஏற்றுவதை கோவில் நிர்வாகம் பின்பற்றாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதை மாற்றும் வகையில், வரும் திருக்கார்த்திகை தினத்தில் திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றி வழிபட, முருக பக்தர்கள், ஆன்மிக குழுவினர், பாத யாத்திரை, காவடி குழுவினர் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

திகழ் ஓவியன்
அக் 31, 2025 17:50

அய்யா, பொறுத்திருங்கள்...அடுத்த முறை, அமர்க்களப்படுத்தி விடுவோம்...


M.Sam
அக் 31, 2025 16:05

திருவண்ணாமலை தவிர வேறு ஏங்கும் மலை மீது தீபம் ஏற்ற கூடாது என்பது சிவசித்தாந்த நெறி. அது எல்லாம் உங்கள மாதிரி காட்டுக்கு ஈஸ்வரனுக்கு புரியாது. ஏதாவது குட்டி கலாட்டா பண்ணி மத கலவரத்தை தூண்டி அதில் குளிர் காயும் கும்பல் தானே நீங்க. உங்களுக்கு வேற என்ன தெரியும்


Barakat Ali
அக் 31, 2025 13:55

ஒரு மதத்தின் வழிபாட்டுத் தலத்தை ஆக்கிரமிப்பது இஸ்லாத்தின் வழிமுறை அல்ல .... அப்படிச் செய்வதும் ஹராம் .....


என்னத்த சொல்ல
அக் 31, 2025 13:16

இதோ வந்துடங்கள்ல..தேர்தல் வந்துடுச்சு.. ஆண்டாண்டு காலமா இந்துக்கள் முறைப்படி எல்லாவற்றையும் அவர்களே செய்துகொள்கிறார்கள். இவர்கள் வந்து அழைப்பு விடவேண்டிய அவசியம் இல்லை. நோக்கம் ஏதாவது பிரச்சனையா கிளப்புவதுதான்னு


திகழ்ஓவியன்
அக் 31, 2025 12:50

எப்ப பாரு ஹிந்து சந்து என்று வேறு வேலை இல்லை, திருச்செந்தூர் லக்ஸ கணக்கில் மக்கள் கூட்டம் அனால் அங்கு வெற்றி DMK தான், ஆகவே இந்த ஹிந்து என்கிற பூச்சாண்டி வேலை விட்டு வேறு வேலை பாரு


T.sthivinayagam
அக் 31, 2025 10:19

தேர்தல் நேர அலப்பறை ஆரம்பித்து விட்டது என்று மக்கள் கூறுகின்றனர்.


pakalavan
அக் 31, 2025 10:17

எங்க


Rama
அக் 31, 2025 10:03

திருப்பரன் குன்றத்தில் மலையில் கார்த்திகை திபம் ஏற்றினால் தான் மதுரை நகரம் அதன் சாபத்தில் இருந்து வெளிவரும். தற்சமயம் உலகில் முதலாவது குப்பை நகரம். தற்குறி மனிதர்கள் அதிகம்.


முதல் தமிழன்
அக் 31, 2025 09:38

உங்க மாதிரி ஆளுங்க சும்மா இருந்தாலே இங்கே பிரச்சினை இல்லை. உள்ளூர்ல பேசி தீர்த்துக்குவாங்க. உங்க மாதிரி ஆளுங்க மத ஜாதி விஷயத்தை ஊதி பெருசாக்கி ஆதாயம் தேடுறீங்க. மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கிரீங்க. சும்மா இருங்க உங்களை மாதிரி செய்யும் எல்லோரையும்தான் சொல்றேன் ஜாதி மத வேறுபாடு காட்டுறவங்கள் சாபக்கேடு.


நிவேதா
அக் 31, 2025 09:25

இறைபக்தியில் நன்று. கண்டிப்பாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். ஆனால், பாஜகவுக்கு ஒட்டு போடமாட்டார்கள். ஏனனில், இங்கு மத அரசியலை விட இந்துக்களிடம் ஜாதி உணர்வையும், கிறிஸ்துவ, இஸ்லாமிய மக்களிடையே மத உணர்வையும் திராவிட கட்சிகள் பதியவைத்துள்ளன