உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பக்தர்கள் அடுத்தடுத்து இறப்பு ஹிந்து முன்னணி கண்டனம்

பக்தர்கள் அடுத்தடுத்து இறப்பு ஹிந்து முன்னணி கண்டனம்

திருப்பூர்:ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:திருச்செந்துார் கோவிலில் தரிசனத்துக்காக நின்ற பக்தர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்தது வேதனையான சம்பவம். அடிப்படை வசதிகள் இல்லாமல், பக்தர்கள் பல மணி நேரம் காக்க வைக்கப்படுவதே இதற்கு காரணம். இதேபோலவே, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி, மயங்கி விழுந்த ராஜ்தாஸ் என்ற வடமாநில பக்தரும் இறந்திருக்கிறார். சில நாள் முன் திருவண்ணாமலையில் வயதான பெண் ஒருவருக்கு சக்கர நாற்காலியோ, பேட்டரி வாகனம் ஏற்பாடு செய்யாமல் தவிக்க வைத்தனர். பக்தர்கள் அதிகளவில் வருவர் என்று தெரிந்தும், உரிய முன்னேற்பாடு செய்யாத திருச்செந்துார், ராமேஸ்வரம் கோவில் நிர்வாகத்தை ஹிந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ