உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு ஹிந்து முன்னணி தலைவர் கண்டனம்

திருப்பரங்குன்றத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு ஹிந்து முன்னணி தலைவர் கண்டனம்

திருப்பூர்:திருப்பரங்குன்றத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ., அப்துல் சமது ஆய்வு செய்ததற்கு, ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில், மணப்பாறை தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., அப்துல் சமது, எஸ்.டி.பி.ஐ., பொறுப்பாளர்களுடன் சென்று ஆய்வு செய்தனர். இது அவரின் தொகுதியும் இல்லை. திருப்பரங்குன்றம் மலை முருகனின் மலை என்பதற்கு தமிழ் இலக்கியங்களில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. மேலும், தமிழ் மன்னர்கள் ஆட்சியில் இருந்த இன்றைய ஆட்சியாளர்கள் வரை நிர்வாக ரீதியான ஆவணங்களும், இது முருகன் வீற்றிருக்கும் புனித மலை என்பதற்கான, ஆவணங்களும் பல உள்ளன.புனிதமான மலை மீது முஸ்லிம்கள் சட்டவிரோதமாக உள்ள சமாதியில் வழிபட சபாநாயகர் அப்பாவு, அப்துல்சமது மனு அளித்தார். அப்போதே முதல்வர் தலையிட்டு கண்டித்திருக்க வேண்டும். ஆனால், முஸ்லிம் அமைப்புகளின் ஒவ்வொரு அமைப்பும் போட்டி போட்டு கொண்டு இதனை பிரச்னையாக்க முயல்கின்றன என்பது வெளிப்படையாக தெரிந்தும், தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது.மதுரை மாநகராட்சி நிர்வாகம், திருப்பரங்குன்றம் பகுதியின் மேம்பாட்டுக்கு உரிய நிதியை அளித்து மேம்படுத்த வேண்டும். தமிழக அரசு உடனடியாக, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதனை தி.மு.க., தொடர நினைத்தால், முருக பக்தர்கள், ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டத்தை ஹிந்து முன்னணி முன்னெடுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை