உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்துக்கள் 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி ஹிந்து மக்கள் கட்சி பிரசாரம்

ஹிந்துக்கள் 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி ஹிந்து மக்கள் கட்சி பிரசாரம்

தஞ்சாவூர்: ஹிந்துக்கள், தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்ற பிரசார இயக்கத்தை ஹிந்து மக்கள் கட்சி நேற்று துவங்கியது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று விநாயகர் சிலை பிரதிஷ்டை நடைபெற்றது. மேலும், தேர்தலில், 'ஹிந்துக்கள் நுாறு சதவீதம் ஓட்டளிக்க வேண்டும்' என்ற பிரசாரத்தையும், ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் துவக்கி வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி: ஹிந்து மக்கள் கட்சி சார்பில், தமிழகத்தில் முதன்முறையாக கும்பகோணத்தில், 'விவசாயம் காக்கும் விநாயகர் சிலை' பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்திக்காக, 50,000 சிலைகள் பிரதிஷ்டை செய்ய உள்ளோம். துணை ஜனாதிபதி தேர்தலில், தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில், தி.மு.க., அரசை வீழ்த்தி, பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என விநாயகர் முன் பிரார்த்தனை செய்தோம். தேசிய அளவில் எப்படியோ, அது போலவே தமிழகத்திலும், 'தேசிய ஜனநாயக கூட்டணியா, இண்டி கூட்டணியா' என்ற அரசியல் நிலை தான் உள்ளது. முருகன் மாநாட்டை அமைதியாக, ஒழுக்கமாக நாங்கள் நடத்தியதை பார்த்து, அனைவரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். வரும் 2026 தேர்தலில், ஹிந்துக் களின் கோரிக்கைகளை ஏற்கும் கூட்டணியாக பா.ஜ.,- அ.தி.மு.க., உள்ளது. திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என, நீதிமன்றத்தில் ஹிந்து அறநிலையத்துறை மனு தாக்கல் செய்துள்ளதை கண்டிக்கிறோம். கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற ஹிந்து விழாக்களுக்கு, வாழ்த்து கூட சொல்ல முடியாத, ஹிந்துக்களுக்கு எதிரான முதல்வராக ஸ்டாலின் உள்ளார். இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் நுாறு சதவீதம் ஓட்டளிப்பது போல், ஹிந்துக்களும், கட்டாயமாக, தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என பிரசாரம் செய்ய இருக்கிறோம். அப்போதுதான், ஹிந்து ராஜ்யம் அமையும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

P.Sekaran
ஆக 23, 2025 11:15

இந்து கடவுளை கும்பிடுகிறவர்கள் எல்லோரும் திராவிட மாடல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.கொள்ளையடிப்பவர்கள் மட்டுமே இந்த திராவிட மாடல் கட்சிக்கு ஓட்டுபோட வேண்டும்ஆனால் மக்கள் தேர்தல் சமயத்தில் கொடுக்கும் பணத்திற்கு அடிமைப்பட்டு அவர்களுக்கு போட்டு விடுகின்றனர். இதை எல்லோரும் உணந்து லஞ்சம் வாங்கும் கட்சியனருக்கு ஓட்டளிக்க கூடாது . இந்து பண்டிகைக்கு வாழ்து சொல்லாத கட்சியனருக்கு ஓட்டளிக்க கூடாது


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 23, 2025 11:10

ஹிந்துக்கள் நுாறு சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் அப்படீங்குறது கேட்க நல்லா இருக்கு. நம்ம தேர்தல் கமிஷன் அப்படி நினைக்கலியே. போன பார்லிமென்ட் தேர்தல்ல கோவை ராம் நகர் பகுதியில ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்களோட வோட்டுகள் தேர்தல் அன்னிக்கு காணாம போயிடுச்சே


R.RAMACHANDRAN
ஆக 23, 2025 07:36

மத வெறியர்கள் கைகளில் ஆட்சி கிடைத்தால் என்னாகும் என தமிழக மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.அதே போல யார் ஆட்சிக்கு வந்தாலும் நேர்மையாக ஆட்சி நடத்தாதையும் எண்ணி பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.நாட்டில் மக்களாட்சி என்பது பெயரளவுக்கே உள்ளது என்பதால் அதிகார வர்கம் காட்டாட்சி நடத்துகின்றது.


Mani . V
ஆக 23, 2025 05:39

ஹிந்துக்கள் 100 சதவீதம் திமுக வுக்கு ஓட்டளிக்க வலியுறுத்தி ஹிந்து மக்கள் கட்சி பிரசாரம்.


புதிய வீடியோ