உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதி சான்றிதழில் ஹிந்து நீக்கம்; ஹிந்து அமைப்புகள் கண்டனம்

ஜாதி சான்றிதழில் ஹிந்து நீக்கம்; ஹிந்து அமைப்புகள் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தமிழகத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஜாதி சான்றிதழில் மதத்தை குறிக்கும் 'ஹிந்து' என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.பள்ளிகளில் ஜாதி, மதம் கூடாது என வலியுறுத்தப்பட்டாலும் அரசு சலுகைகள், திட்டங்கள் வழங்குவதில் ஜாதி, மதம் பின்பற்றப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லுாரியில் மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் தவிர்க்க முடியாதது.இச்சான்றுகளில் ஹிந்து மறவர், ஹிந்து வேளாளர், ஹிந்து நாடார் என ஜாதிக்கு முன் 'ஹிந்து' என்ற வார்த்தை இடம் பெறும். ஆனால் தற்போது ஆன்லைன் வழியாக பெறப்படும் சான்றிதழ்களில் நேரடியாக ஜாதி பெயர், அது பிற்படுத்தப்பட்ட பிரிவா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவா என மட்டும் குறிப்பிடப்படுகிறது. 'ஹிந்து' என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. இது குழப்பத்துடன் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.ஆசிரியர்கள் கூறியதாவது: கல்வி உதவித் தொகை உள்ளிட்ட அரசு சலுகைகள் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாணவர்கள் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட என எந்த பிரிவை சார்ந்தவர்கள் என்பது தெரிவது அவசியம். குறிப்பாக 'ஹிந்து வன்னியர்' என்பது 'டி.என்.சி.,' பிரிவில் வரும். 'கிறிஸ்தவ வன்னியர்' என்பது 'பி.சி.,' பிரிவில் வரும். மாணவர் 'டி.சி.,'யிலும் ஜாதி பெயர் குறிப்பிடாமல் அந்த இடத்தில் 'ரெபர் டூ ஒரிஜினல் கம்யூனிட்டி சர்டிபிகேட்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜாதி சான்றிதழில் 'ஹிந்து' என்ற வார்த்தையும் இடம் பெறாததால் மாணவர் எந்த பிரிவை சேர்ந்தவர் என தெரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்படுகிறது என்றனர்.

அமைப்புகள் கண்டனம்:

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது: ஆன்லைன் மூலம் பெறப்படும் ஜாதி சான்றிதழில் ஜாதி பிரிவுகளுக்கு முன் இடம் பெறும் 'ஹிந்து' என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இது மிக அபாயகரமான விஷயம். ஒட்டுமொத்தமாக ஹிந்துக்களுடைய உரிமைகளை தட்டிப் பறிப்பதாகும். நிர்வாக ரீதியாக குளறுபடி ஏற்படும். ஹிந்துக்களின் சலுகைகள் பறிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்றார்.ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் கூறுகையில், தி.மு.க., ஆட்சியில் ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்கிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். ஹிந்து மதத்திற்கு உட்பட்ட ஜாதிகள் வேண்டும்; ஆனால் அந்த மதம் வேண்டாமா. ஓட்டுக்களுக்காக பிற மதங்களை துாக்கிப்பிடிக்கும் தி.மு.க., அரசுக்கு, ஹிந்து மதம் மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம். இது கண்டிக்கத்தக்கது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Narasimhan P M
ஜூன் 12, 2025 22:05

Caste certificate is needed only for Hindus.other religions say there is no e in their religion.So


Judicial Journalist Dr Vedha
ஜூன் 11, 2025 17:38

அப்பு....அது ஜாதி சான்றிதழ் ... மதச் சான்றிதழ் அல்ல....வம்பு பண்ண ?


சி ரதி
ஜூன் 11, 2025 14:44

என் அப்பா வாங்கிய சாதி சான்றிதழ் இந்து என்று உள்ளது. ஆனால் நான் தற்பொழுது ஆன்லைனில் வாங்கிய சாதி சான்றிதழ் இந்து என்பது இல்லை .ஏன்?. வரவில்லை.


c.mohanraj raj
ஜூன் 11, 2025 11:50

சாதி இல்லாதவன் செய்த வேலையாக இருக்கும்


PR Makudeswaran
ஜூன் 11, 2025 11:38

நண்பர் டெட்ரா அரசியல் அமைப்பு படித்தேன். ஐடா ஒதுக்கீடு எத்தனை வருடங்களுக்கு குறிப்பிட்டு எழுதி உள்ளதே .அதில் குறிப்பிட்ட வருடங்கள் எப்பவோ கடந்து விட்டதே. இப்பொழுது காலத்திற்கும் இட ஒதுக்கீடா?


S.Subramanian
ஜூன் 11, 2025 10:43

School Transfer Certificate ல் Nationality - Indian எனவும், Religion - Refer Community Certificate என்பதாகத்தான் பதிவு செய்து பள்ளியில் தருகிறார்கள். கவனமாக இந்துக்கள் இல்லையெனில், இந்து மதம் கொஞ்சம் கொஞ்சமாக அழிவு நிலைக்கு தள்ளப்படும் .


Murthy
ஜூன் 11, 2025 10:42

சாதி என்பது குடி என்று மாற்றப்படவேண்டும். ஹிந்து என்பதற்கு பதில் சைவ வைணவ என்று எழுத வேண்டும் .


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 11, 2025 10:25

திமுக அரசு திட்டமிட்டு இந்த வேலையை செய்துள்ளது. அதாவது வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஜாதி வாரி மத வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அந்த கணக்கெடுப்பின் போது கிறிஸ்துவ மதம் மற்றும் முஸ்லிம் மதத்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டி அவர்களை எப்பொழுதும் மத சிறுபான்மை இன மக்களாகவே வைத்து கொண்டு அவர்களுக்கு சிறுபான்மை இன சலுகைகள் தொடர்ந்து கிடைத்திடவே திட்டமிட்டு திமுக இந்த வேலையை இப்போது ஆரம்பித்து உள்ளது. ஆகவே இந்துக்கள் அனைவரும் மதம் ஜாதி வயது பால் இனம் வசிப்பிடம் ஆகியவை சரியாக குறித்துள்ளார்களா என்று சரி பார்த்த பின்பே ஜாதி வாரி மத வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஒப்புதல் தர வேண்டும்.


Sivakumar.T
ஜூன் 12, 2025 07:51

ஹிந்து என்ற வார்த்தை கட்டாயம் ஜாதி செர்டிபிகாடே இல் குறிப்பிடவேண்டும் .


Svs Yaadum oore
ஜூன் 11, 2025 10:17

எந்த மதத்திற்க்கு மாறினாலும் அதே சாதிக்குள்ளே தானே இருக்கிறார்கள் என்று கருத்து.. இங்குள்ள சோற்றுக்கு மதம் மாற்றும் கேவலங்கள் மதம் மாறினால் ஜாதி அப்படியே இருக்கும் என்று சொல்லித்தான் மதம் மாற்றுகிறார்களா ??....அப்ப எல்லா மதத்திலும் ஜாதி இருக்குது என்று சொல்லி மதம் மாற்ற சொல்லு ?....


Natchimuthu Chithiraisamy
ஜூன் 11, 2025 10:13

இந்துக்கள் இந்து நாட்டில் தூங்கிக்கொண்டிருப்பதற்கு இது ஒரு சான்று. அதிக சதவிகிதம் இருக்கும் போதே அடங்கி இருக்கிறாங்க அதிகாரிகளிலும் அதிக சதவிகிதம் இந்து இருக்கிறான் என்ன செய்ய ஆளும் ஆட்சி கிறிஸ்துவம்.எல்லா ரெகார்ட் மாற்றிய பிறகு மலைகளில் இந்து முருகன் கோவிலை தூக்கும் போது மதம் மாற யோசிப்பானுக இந்து பீடைகள்.


சமீபத்திய செய்தி