உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு இடத்தில் கட்டப்படும் சர்ச் ஹிந்து மக்கள் கட்சி புகார்

அரசு இடத்தில் கட்டப்படும் சர்ச் ஹிந்து மக்கள் கட்சி புகார்

துாத்துக்குடி: 'அரசு இடத்தில் அனுமதியின்றி சர்ச் கட்டும் பணி துவங்கி உள்ளது. அதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்' என, ஹிந்து மக்கள் கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. துாத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் அருகே அரசுக்கும், காவல் துறைக்கும் சொந்தமான நிலம் உள்ளது. இந்த இடத்தில் பல ஆண்டுகளாக புனித சிந்தா யாத்திரை சர்ச் உள்ளது. அந்த இடத்திற்கு பட்டா ஏதும் கிடையாது. பட்டா வழங்க வேண்டும் என கிறிஸ்தவ அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், அந்த சர்ச்சின் சில இடங்களை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. எந்தவித அனுமதியும் பெறாமல் சர்ச் புதுப்பிக்கப்பட்டு வருவதாக ஹிந்து மக்கள் கட்சியின் மாநில செயலர் வசந்தகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை:

புனித சிந்தா யாத்திரை சர்ச் அமைந்துள்ள இடம் அரசுக்கு சொந்தமானது. நகரில் இதுபோல அரசுக்கு சொந்தமான இடங்களில் இருந்த ஹிந்து கோவில்கள் ஆட்சியாளர்களால் இடிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தவித அனுமதியும் இல்லாமல் சர்ச் கட்டப்பட்டு வருவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். மாவட்ட அமைச்சர் வாய்மொழி உத்தரவாக அனுமதி கொடுத்ததாக, சர்ச் நிர்வாகத்தினர் கூறி வருகின்றனர். கிறிஸ்தவர்கள் என்ற அடிப்படைத் தகுதி இருந்தால் மட்டும் எங்கு வேண்டுமானாலும் சர்ச் கட்டலாமா என ஹிந்து மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசின் அனுமதியுடன் சிந்தா யாத்திரை சர்ச் விரிவாக்கம் செய்யப்பட்டால், கடந்த 4 ஆண்டுகளில் ஹிந்துக்களிடைய கோவில்கள் எங்கெல்லாம் இடிக்கப்பட்டதோ, அந்த இடத்தில் எல்லாம், ஹிந்து கோவில்களை கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

VSMani
செப் 05, 2025 10:03

துாத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் அருகே அரசுக்கும், காவல் துறைக்கும் சொந்தமான நிலம் உள்ளது. இந்த இடத்தில் பல ஆண்டுகளாக புனித சிந்தா யாத்திரை சர்ச் உள்ளது. பல ஆண்டுகளாக சர்ச் உள்ளது. இங்கு கருத்து எழுதுபவர்கள் இந்த சர்ச் ஏதோ இப்போதுதான் திமுக அரசு அனுமதி கொடுத்தது போல் எழுதுகிறார்கள். இது ஏற்புடையது அல்ல.


Ess Emm
செப் 04, 2025 12:23

இந்த கண்றாவி திராவிட அரசியல் இருக்கும் வரை எங்கு வேண்டுமானாலும். பள்ளிவாசல்களை கட்டலாம். தேவாலயங்களை கட்ட அனுமதி தாராலமா எங்கு வேணாலும் ஏன் ஆட்சியர் அலுவகத்திலே கூட கட்டலாம் அனுமதி தேவையில்லை. ஹிந்துக்கள் நீங்கள் கோயில் கட்ட வேண்டுமென்றால் அரசிடம் எல்லாவித அனுமதி பெறவேண்டும். ஆனால் அப்பொழுதும் சான்றிடங்கள் நிராகரிக்க படும். ஹிந்துக்கலாகிய உங்களுக்கு ஓட்டருமை இல்லையென்றால் நாங்கள் என்ன ஸ்ரீவது. இந்த 26 தேர்தலில் மக்களாகிய நாம் நம்முடைய பாலத்தை காண்பிக்கவேண்டும்.


Paul Durai Singh. S
செப் 04, 2025 12:14

எந்த மதமாக இருந்தாலும் ஆக்கிரமிப்பு கோவில்களை அரசு உடனே அப்புறப்படுத்த வேண்டும்


Rathna
செப் 04, 2025 11:42

வோட்டு வங்கிக்காக ஒரு தொழிற்சாலையையே துரத்தி விட்டோம். அப்போது தானே நாங்கள் விரும்பும் மக்கள் வோட்டு போட்டு, அந்த நபர் மட்டுமே வெற்றி பெற்ற முடியும். விளம்பர மதத்தில் இது எல்லாம் ஒரு சர்வ சாதாரணம்.


Raghavan
செப் 04, 2025 12:26

இப்போது அவனவன் பாடு திண்டாட்டமாக இருக்கிறது அங்கே. தற்போது அங்குள்ளவர்கள் எல்லோரும் தாங்கள் படுகின்ற கஷ்டத்தை உணர்ந்து மறுபடியும் மூடிய தொழிற்சாலையை திறக்கவேண்டும் என்று போராடுகிறார்கள். தூண்டிவிட்டவனையெல்லாம் இப்போது என்ன செய்வது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் ஜனங்கள் தங்களின் சுயபுத்தியை இழந்துவிட்டனர் அன்றைய தேவைக்கு கொடுப்பதைவாங்கிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கி குண்டுக்கும் பலியாகிறார்கள்.


Ramesh Sargam
செப் 04, 2025 09:55

தீர விசாரித்தால் அந்த சர்ச்சை கட்ட தமிழக அரசே பண உதவியும் செய்வது தெரியவரும். அதுவும் ஹிந்து கோவில் வருமானங்களில் இருந்து.


SRIBALAJIANDCO
செப் 04, 2025 09:21

தமிழ்நாட்டில் அதிகமான கோவில்கள் புறம் போக்கு இடத்தில் தான் உள்ளது , எங்கள் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் கூட அரசு நிலத்தில்தான் உள்ளது


Svs Yaadum oore
செப் 04, 2025 09:53

ஆனால் மேய்ப்பர் ஆலயம் மட்டும் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த அவனுங்க சொந்தமாக உழைத்து சம்பாதித்த பணத்தில் இடம் வாங்கி கட்டியதா ....


crap
செப் 04, 2025 10:27

வருவாய் ஆவணங்களை பரிசீலித்தால், கோவில்கள் உள்ள இடங்கள் அனைத்தும் 1947 க்கு அப்புறம் அரசு கையகப்படுத்தியதும், அதன் பின் அங்கிருந்த கோவில்களுக்கு பட்டா வழங்காமல் விட்டு விட்டதும் தெரியவரும். அரசு நிலம் என்று ஒன்று தனியாக இல்லை. ஏற்கனவே இருந்த நிலங்களை அரசு ஏற்படுத்தப் பட்டதும் அதன் கைக்கு வந்தது.


ஆரூர் ரங்
செப் 04, 2025 12:06

அந்த இடங்களின் பரப்பளவு அரசே ஆக்கிரமித்துள்ள ஹிந்து ஆலய நிலங்களை விட மிகக் குறைவுதான். ஆலய நிலத்தில் அறங்காவலர்கள் அனுமதியின்றி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகமே கூட கட்டியுள்ளனர்.


பேசும் தமிழன்
செப் 04, 2025 07:35

அட நீங்க வேற... எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்.. ஏற்கெனவே ஒரு பாதிரியார்... இந்த ஆட்சி நாங்கள் போட்ட பிச்சை என்று எகத்தாளம் பேசினார்.... அவர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் ???


தியாகு
செப் 04, 2025 07:23

தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை இளிச்சவாய இந்து உடன்பிறப்புகள் மற்றும் அவர்கள் குடும்ப ஓட்டுக்கள் இருக்கும் வரையில் கட்டுமர திருட்டு திமுக என்ற கட்சிக்கு அழிவே கிடையாது. விளங்கிடும் இளிச்சவாய இந்துக்களின் எதிர்காலம்.


GMM
செப் 04, 2025 07:22

நாடு முழுவதும் சர்ச், மசூதிகள் அமைக்க மத்திய அரசு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். நில பதிவு மாநில கட்டுபாட்டில் கூடாது. மாநில கட்சிகள் ஓட்டை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்பு, சட்ட மீறலை கருத்தில் கொள்வது இல்லை. இந்த இரு மதமும் அந்நிய நாடுகளின் வழிகாட்டுதலில் செயல் பட்டு வருகின்றன. இந்திய பூர்வீக குடிகள் பாதுகாப்பு கலாச்சாரம், கேள்விக்குறியாக மாறி வருகிறது.


raja
செப் 04, 2025 07:08

தமிழ் இந்துக்கள் ஜாதியை மறந்து இந்த இந்து விரோத திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டத்தை அடித்து விரட்டுவார்களோ அப்போது தான் ஓட்டு பிச்சைகாக துக்லக் சோ அவர்கள் சொன்னது போல் விடியாமூஞ்சி குடும்பம் அலகு குத்தி பழனிக்கு காவடி கூட எடுக்க தயங்காது...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை