உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போட்டோவுக்கு ரூ.150 வசூல் ஹிந்து தமிழர் கட்சி கண்டனம்

போட்டோவுக்கு ரூ.150 வசூல் ஹிந்து தமிழர் கட்சி கண்டனம்

பழனி:பழனி முருகன் கோவிலில், ஒரு போட்டோ எடுக்க, 150 ரூபாய் வசூலிக்கப்படுவதற்கு, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: பழனி முருகன் கோவிலில், நேற்று தரிசனம் முடித்து வெளியே வந்தபோது, போட்டோ எடுக்க, கேமராக்களுடன் 10க்கும் அதிகமானோர் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் என்னிடம் வந்து, 'போட்டோ எடுக்க வேண்டுமானால், ஒரு போட்டோவுக்கு 150 ரூபாய் தர வேண்டும்' என்றார். சரி என்று போட்டோ எடுத்துக் கொண்டேன். அதற்கு ரசீது கேட் டால் மறுத்துவிட்டனர் . இது குறித்து விசாரித்ததில், 'போட்டோ எடுக்க, ஒருவர் ஒரு கோடி ரூபாய்க்கு கான்ட்ராக்ட் எடுத்திருப்பதாக கூறினர். பழனி முருகன் கோவிலில், மொபைல் போன், கேமரா எடுத்து செல்ல தடை இருக்கும் நிலையில், எவ்வித அறிவிப்பும் இல்லாமல், ஒரு போட்டோ எடுக்க 150 ரூபாய் வசூலிப்பது, கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி