உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சனாதனத்தை காக்க ஹிந்துக்கள் முன்வர வேண்டும்: அர்ஜுன் சம்பத்

சனாதனத்தை காக்க ஹிந்துக்கள் முன்வர வேண்டும்: அர்ஜுன் சம்பத்

மதுரை: மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டம் ஒன்றில், ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பேசியதாவது: வங்கதேச ஹிந்துக்களை பாதுகாக்க குரல் கொடுத்த ஜக்கி வாசுதேவ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.அரசின் தவறுகளை சுட்டிக்காட்டினாலோ, ஹிந்துக்களுக்கு பாதிப்பு என போராடினாலோ அனுமதி மறுத்து ஜனநாயக உரிமையை நசுக்கிறது தி.மு.க., அரசு. மத்திய அரசின் எந்த திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்துவதில்லை.நாடு முழுதும் அமலில் இருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு, தமிழகத்தில் மட்டும் அமலில் இல்லை. அனைத்து பாடத் திட்டங்களிலும் திராவிடக் கொள்கைகள் திணிக்கப்படுகின்றன.வெளியில் கோவில்கள், அர்ச்சகர்கள், பிராமணப் பெண்கள், சிவாச்சாரியார்களை அவமதிப்போர், வீட்டிற்குள் ரகசியமாக பூஜை, பரிகாரம் செய்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கோவில்களுக்கு செல்கின்றனர். இது ஏமாற்று வேலை. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகஹிந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரும் 2025, ஜன., 5ல் மதுரை பழங்காநத்தத்தில், அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும்.ஹிந்துக்கள் கோவிலுக்கு செல்வதை காட்டிலும் சனாதன தர்மத்தை பாதுகாக்க முன்நிற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை