உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெறிநாய்களை பிடியுங்கள்

வெறிநாய்களை பிடியுங்கள்

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் இன்னொரு அறிக்கை:திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு உட்பட்ட காங்கேயம் சட்டசபை தொகுதியில் வெறிநாய் தாக்குதலால், நுாற்றுக்கணக்கான ஆடுகள் பலியாகி உள்ளன. இதனால், ஆடு வளர்க்கும் விவசாயிகளுக்கு, பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட விவசாயிகள், ஈரோடு - பழனி நெடுஞ்சாலையில், பாரவலசு என்ற இடத்தில், கடந்த வாரம் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, வலுக்கட்டாயமாக அகற்றி உள்ளனர். கடந்த 16ம் தேதி, ஈரோடு மாவட்டம், குட்டக்காட்டைச் சேர்ந்த விவசாயிகளின் 25 ஆடுகள், வெறிநாய் தாக்குதலுக்கு பலியாகி உள்ளன.வெறிநாய் தாக்குதலால், கால்நடைகள் மட்டுமின்றி, சிறு குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழகம் முழுதும், சாலைகளில் திரியும் வெறிநாய்களை பிடிக்க, தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறிநாய்களால் ஆடுகளை இழந்துள்ள விவசாயிகளுக்கு, உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

baala
பிப் 18, 2025 12:01

எந்த வெறிநாய்கள் எங்கே


சுலைமான்
பிப் 18, 2025 11:40

வெறிநாய்களை பிடிக்கலாம்.... வெறி பிடித்த மனிதனை என்ன செய்வது..... பதவிக்கால பல கொலைகளை செய்யும் மனிதனை என்ன செய்வது. வாயில்லா ஜீவன்கள் என்றால் கேட்க ஆளில்லாத தைரியம்தான்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை