உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேர்மையான அதிகாரிகள் தி.மு.க., அரசில் பணியாற்ற முடியாது

நேர்மையான அதிகாரிகள் தி.மு.க., அரசில் பணியாற்ற முடியாது

மயிலாடுதுறை மது விலக்கு டி.எஸ்.பி., சுந்தரேசன், அனுமதியின்றி செயல்பட்ட, 23 மதுக்கூடங்களை மூடியதுடன், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட, 1,200 பேர் மீது வழக்கு தொடர்ந்து, 700 பேரை சிறைக்கு அனுப்பியுள்ளார். அவரது நேர்மையான நடவடிக்கைகள் பிடிக்காமல், அவமானப்படுத்தும் நோக்கத்தோடு, அவரது வாகனத்தை, எந்த காரணமும் கூறாமல், தி.மு.க., அரசு, திரும்பப் பெற்றிருக்கிறது. ஏற்கனவே, கடந்த ஆண்டு, தி.மு.க., அரசின் காவல் துறை தவறுகள் குறித்து, மனித உரிமைகள் ஆணையத்தில் அறிக்கை கொடுத்ததற்கு பழிவாங்கவே, மயிலாடுதுறைக்கு அவரை பணிமாற்றம் செய்தனர். தற்போது, மீண்டும் அவரை அலைக்கழிப்பது, நேர்மையான அதிகாரிகள், தி.மு.க., அரசில் பணியாற்ற முடியாது என்பதையே காட்டுகிறது. -அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 19, 2025 08:15

இதெல்லாம் எங்களுக்கு 1972களிருத்தே தெரியும்.. எங்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்திரா காந்தி முயற்சி செய்து , ராஜீவ் காந்தி முயற்சி செய்து முடியாமல் போன கதை தெரியுமா அண்ணாமலை .. இப்போ பிஜேபியால் என்ன செய்ய முடியும் ? .. நீங்களும் டிஎம்கே பைல்ஸ் கொடுத்து பார்த்தீர்கள் ஏதும் பலன் கிடைத்ததா ? ஈ டி ரைடுக்கே நாங்கள் பயப்படவில்லை ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை