உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு: சென்னை ஐகோர்ட் வேதனை

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு: சென்னை ஐகோர்ட் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளதாக சென்னை ஐகோர்ட் வேதனை தெரிவித்துள்ளது.கடலூர் கல்லூரி மாணவர் ஜெயசூர்யா என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆனால் அவரின் மரணம் ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வழக்கை வேறு அமைப்புக்கு மாற்றக் கோரி தந்தை முருகன் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s1z9cfjw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாற்று சமுதாய பெண்ணை தமது மகன் காதலித்தாகவும், பெண்ணின் உறவினர்கள் தரப்பில் மகனுக்கு மிரட்டல்கள் இருந்ததாகவும் வழக்கில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. அப்போது, நீதிபதி வேல்முருகன், தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடப்பது அதிகரித்து வருகிறது. இது வேதனையை தருகிறது. ஆணவக் கொலை அதிகரித்தாலும் உண்மை வெளிவருவதில்லை என்று வேதனை தெரிவித்தார். இதனிடையே, ஜெயசூர்யா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Subburamu Krishnasamy
ஆக 05, 2025 06:57

Basic reason is easy bail to murder accused and criminal lawyers effective arguments and Police inefficiency in presenting the case files in the courts. Money power suppress the judiciary in several counts


Padmasridharan
ஆக 05, 2025 02:20

கொலை, கொள்ளைகள தடுக்கத்தானே காவல் துறைய வெச்சிருக்காங்க சாமி. வெச்ச CCTVக்களும் குற்றங்கள தடுக்க முடியாம நடந்தபின்னரே சாட்சிகள் ஆகின்றன. காவலர்கள் என்ன பன்றாங்க யார, எங்க புடிச்சாலும் என்ன பண்றீங்கனு கேட்டு CCTV இல்லாத இடத்தில பணம் எவ்வளவு தேறும்னு நல்லவங்கள கெட்டவங்களாக்கி கெட்டவங்ககிட்ட அதிகார பிச்சை எடுத்துக்கிட்டு பல கோழைகளும் தைர்யமானவங்களா காக்கி உடைய போட்டு நடிச்சிகிட்டு கேவலப்படுத்திக்கிட்டு இருக்காங்க.


தமிழ்வேள்
ஆக 04, 2025 21:00

காதல் என்பது மாற்று சமுதாயப் பெண்ணின் மீது, அதாவது ஆணின் சாதியை விட உயர்ந்த சாதிப் பெண் மீது மட்டும் தான் வருமா? ஆணின் சாதியை விட கீழே உள்ள சாதி பெண்ணின் மீது இதுவரை வந்ததாக எந்த ஒரு பதிவு/ வரலாறும் இல்லையே ? அது ஏன்? விபத்து மரணத்தை கூட ஆணவக்கொலை என திசை மாற்றும் வேலை எதற்கு? அரசு பணம் வீடு அரசு வேலை கிடைக்கும் குறுக்கு வழியா? இந்த மாதிரியான நிகழ்வுகளின் பின்னணியில் மட்டும் சரியாக பிதுக்கப்பட்டோம் - நசுக்கப்பட்டோம் வகையறா கட்சிகள் செயல்படுவது எப்படி? .... பிராஜெக்ட் ஜோஷ்வா & கஸ்வா இ ஹிந்த் இயக்கங்கள் பின்னணியில் செயல்பட்டு ஹிந்து தர்மத்தின் ஆணி வேரை அசைக்கும் பகல் கனவில் கலவரம் தூண்டுகின்றனவா?


Gokul Krishnan
ஆக 04, 2025 20:53

கமலஹாசன் தமிழில் இருந்து கன்னடம் வந்தது என்று சொன்னவுடன் ஆவேசமாக வந்த நீதிபதிகள் ஆணவ கொலை விவகாரத்தில் வேதனை என்று அன்புடன் கரிசனம் காட்டுவதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் இவர்கள் லட்சணம்


Chandru
ஆக 04, 2025 20:41

வெக்கம் கெட்ட மானம் கெட்ட ரோஷம் கெட்ட ஒசி க்கு அலையும் தமிழக வாக்காளர்கள்


Mariadoss E
ஆக 04, 2025 20:12

ஆணவக் கொலைக்கும் திராவிடத்துக்கும் என்ன தொடர்பு? ஜாதிவெறி தான் காரணம் என்பது சின்னப் பிள்ளை கூட அறிந்தது. பிஜேபி ஆட்சி வந்தால் இதெல்லாம் ஒழிந்து விடுமா என்ன? கூட மதிவெறியும் தலைவிரித்து ஆடும் உத்திர பிரதேசத்தில் போல்.


Ramesh Sargam
ஆக 04, 2025 19:42

தமிழகத்தில் எல்லாவிதமான கொலைகளும் தினம் தினம் அரங்கேறுகின்றன. தமிழக காவல்துறை ஒரு வேஸ்ட்.


m.arunachalam
ஆக 04, 2025 19:33

சமூக அமைப்பில் , சலுகைகளில் , தூண்டிவிடுவதில் , பெருமைப்படும் காரணிகளாக பேசப்படுபவை ஆகிய அனைத்தும் இந்த விதத்திலான முடிவை பரிமாறுகின்றன . மேலும் எதையோ யாருக்கோ நிரூபிக்க விரும்பும் மனநிலை மற்றும் எண்ணப்பழக்கம் ஆகியவையும் காரணம் .தெளிதல் நலம் .


sankaranarayanan
ஆக 04, 2025 18:54

திராவிட ஆடல் ஆட்சியும் ஆணவம் பிடித்ததால் இங்கே நடக்கும் கொலைகளும் ஆணவக்கொலைகள்தான் ஆணவம்தான் எங்குமே திகழ்கிறது


GMM
ஆக 04, 2025 18:17

மாற்று சமுதாய பெண்ணை தமது மகன் காதலித்தாகவும், பெண்ணின் உறவினர்கள் தரப்பில் மகனுக்கு மிரட்டல்கள் என்று மகன் பெற்றோர் வழக்கு. பெண்ணின் பெற்றோர் நிலை? தமிழகத்தில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சாதகமாக திமுக மற்றும் வழக்கறிஞர் வாதம் அதிகரித்து வருகிறது.? சட்ட பாதுகாப்பு இருப்பதால் ஆணவ காதல் அதிகரித்து வருகிறது.? அவசர தீர்வுகள் சமுதாய மோதல்கள் உருவாகும். சட்ட ஒழுங்கு கெடும். மதம் மாற்றிகள் அமைதி ஆதரவு இருக்கும். மதம் மாற, திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயம் ஆக்குக.


முக்கிய வீடியோ