மேலும் செய்திகள்
இலவச விதை தொகுப்பை 31க்குள் கொடுக்க அரசு உத்தரவு
11-Jul-2025
சென்னை:'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் இலவச விதைகளை வழங்கி, ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்ட இலக்கை முடிக்க, தோட்டக் கலைத் துறை முயற்சித்து வருகிறது. பொது மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை, வீடுகளில் உற்பத்தி செய்யும் வகையில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற திட்டத்தை, தமிழக அரசு ஜூலை 4ம் தேதி துவங்கியது. இத்திட்டத்தின் கீழ், தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள், விதைகள் அடங்கிய, 15 லட்சம் தொகுப்புகளையும், பப்பாளி, கொய்யா, எலுமிச்சை செடிகள் அடங்கிய, 9 லட்சம் தொகுப்புகளையும், மரத்துவரை, காராமணி, கொத்தவரை உள்ளிட்டவை அடங்கிய, ஒரு லட்சம் பருப்பு வகை விதை தொகுப்புகளையும், பொது மக்களுக்கு இலவசமாக வழங்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மாநிலம் முழுதும் தோட்டக்கலைத் துறை அலுவலகங்கள், பண்ணைகள், பூங்காக்கள் உள்ளிட்டவற்றில், இவற்றை வழங்க ந டவடிக்கை எடுக்கப்பட்டு உ ள்ளது. பொது மக்கள் தங்களது ஆதார், ரேஷன் அட்டை நகல், மொபைல் போன் எண் ஆகியவற்றை தெரிவித்து, இப்பொருட்களை பெற்று செல்லலாம். முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை துவக்கிய இரண்டாவது நாளிலேயே, இடுபொருட்கள் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் வெளியானது. கொள்முதல் செய்யும் பணிகளில் ஏற்பட்ட தாமதமே, இதற்கு காரணமாக கூறப்பட்டது. இதையடுத்து, இடுபொருட்கள் வினியோகத்தை, ஜூலை மாத இறுதிக்குள் முடித்து, இலக்கை பூர்த்தி செய்ய வேண்டும் என, மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், பல மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடுபொருட்கள், இன்னும் முழுமையாக வினியோகம் செய்யப்படவில்லை. இதையடுத்து, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பங்கேற்பவர்களிடம் ஆவணங்களை பெற்று, இடுபொருட்களை வழங்கும் பணிகளில், தோட்டக்கலைத் துறையினர் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். இந்த முகாம்கள் வாயிலாக இலக்கை முடிக்க, வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.
11-Jul-2025