உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வழக்கை போட்டுவிட்டு இப்படியா செய்வது? செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் கண்டிப்பு!

வழக்கை போட்டுவிட்டு இப்படியா செய்வது? செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் கண்டிப்பு!

'உங்கள் வழக்கை இரவு முழுதும் படித்து விட்டு வந்தால் விசாரணையை ஒத்தி வைக்கும்படி கேட்கிறீர்களா?' என, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடிந்து கொண்டனர்.அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், செந்தில் பாலாஜி பணத்தை திருப்பி தருவதாக கூறியதால், வழக்கை வாபஸ் பெற விரும்புவதாக பாதிக்கப்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இதை எதிர்த்து, ஒய்.பாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'புகார் கொடுத்தோர், முன் வந்தனர் என்பதற்காக, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது சரியானது அல்ல' என சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை 2022ல் ரத்து செய்தது.https://www.youtube.com/embed/eBFkHn55ZCIசெந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை, விசாரணை நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.'உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பில், சில வரிகள் தனக்கு எதிராகவும், விசாரணை நீதிமன்றத்தின் போக்கையே மாற்றும் வகையிலும் இருப்பதால், அந்த வரிகளை நீக்க வேண்டும்' எனக்கோரி, செந்தில் பாலாஜி தரப்பு சில தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை வேறொரு தினத்துக்கு ஒத்திவைக்குமாறு கோரினார். இதனால், அதிருப்தியடைந்த நீதிபதிகள், 'நிவாரணம் கேட்டு வந்தது நீங்கள். இரவு முழுதும் உங்கள் வழக்கை படித்துவிட்டு விசாரிக்க வந்தால், சர்வ சாதாரணமாக வழக்கை ஒத்தி வைக்க கேட்கிறீர்களே, இது என்ன நடைமுறை?' என, கடிந்து கொண்டு வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Senthil Arun Kumar D
ஜூலை 17, 2025 20:15

கடிந்து கொண்டால் மட்டும் போதுமா? வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தது ஏன்? நீங்களும் உங்க நீதியும்.


ஆரூர் ரங்
ஜூலை 17, 2025 10:52

போக்குவரத்து பணியிடங்களுக்கு லஞ்சம் பெற்ற வழக்கு முடிவுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் எல்லா அணில் லஞ்ச வழக்குகளையும் இணைத்து ஒரே வழக்காக்கி 2000 க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் மற்றும் சாட்சிகளை சேர்த்துள்ளனர். இவர்களை குறுக்கு விசாரணை செய்யவே 40 ஆண்டுகள் ஆகிவிடும். இதை இதுவரை சுப்ரீம் கோர்ட் பரிசீலித்ததா?


N Annamalai
ஜூலை 17, 2025 09:38

திமுகவின் ஆணவம் என்று கருதலாமா ?.ஒவ்வொரு வழக்கையும் நீர்த்து போக செய்வது இப்படி தான்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 17, 2025 09:07

கேஸ் முடிஞ்சிட்டா கோர்ட்டுக்கு, ஜட்ஜுக்கு, வக்கீலுக்கு எப்படி வரும்படி வரும்?


SIVA
ஜூலை 17, 2025 08:17

அவர் நீதி மன்றத்தை வைத்து காமெடி செய்கின்றார் அது ஊருக்கே தெரியுது, ஆனால் நீதி மன்றத்திற்கு தெரியவில்லை, இவர் வழக்கில் உயர் நீதி மன்றம் வழக்கை முடித்து வைத்தது எப்படி தவறில் வரும், அது குற்றத்தில் வராதா .....


R.RAMACHANDRAN
ஜூலை 17, 2025 06:45

நீதி மன்றங்கள் வழக்கறிஞ்சர்கள் சம்பாதிப்பதற்கே உள்ளன.அவர்கள் வழக்கை இழுத்தடிக்க அபரிமிதமான கட்டணம் வசூலித்து கடைசியில் நீதி மன்றத்தில் ஏமாற்றி தீர்ப்பு பெறுகின்றனர்.இதற்கு நீதிபதிகளில் பலர் உடந்தை.


naranam
ஜூலை 17, 2025 06:40

இந்த செந்தில் ஊழல் பாலாஜியை ஏன் நீதி மன்றம் இந்தக் கொஞ்சு கொஞ்சுகிறது? சிறையில் இருக்கு வேண்டியவர் மந்திரி?


ramani
ஜூலை 17, 2025 05:58

இம்மாதிரி ஊழல்வாதிகள் தண்டிக்க பட வேண்டும்.


Rajan A
ஜூலை 17, 2025 05:52

இந்த வழக்கை டீவி சீரியலாக எடுக்கலாம். 1000 வாரம் ஓடும்


Mani . V
ஜூலை 17, 2025 04:48

இது போன்ற ஒரு ஊழல்வாதியை வெளியில் விட்டது யார் தவறு? இதையெல்லாம் என்கவுண்டரில் போட்டுத் தள்ளணும் யுவர் ஹானர்.