உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‛சிலை கடத்தல் கோப்புகள் மாயமானது எப்படி? தமிழக அரசின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது!: உச்ச நீதிமன்றம்

‛சிலை கடத்தல் கோப்புகள் மாயமானது எப்படி? தமிழக அரசின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது!: உச்ச நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழகத்தில், 300 கோடி ரூபாய் மதிப்பிலான சிலை கடத்தல் வழக்கு தொடர்பான கோப்புகள் மாயமான விவகாரத்தில், தமிழக உள்துறை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'தமிழகத்தில், 300 கோடி ரூபாய் மதிப்பிலான, 41 சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் காணாமல் போய் விட்டன.'சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனிலிருந்து இந்த ஆவணங்கள் திருடப்பட்டு உள்ளன. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.அத்துடன், கோப்புகள் காணாமல் போன விவகாரத்தில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், 41 சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான திருடப்பட்ட கோப்புகளை உடனடியாக மீட்டு, இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை, மாநில அரசு சரியாக பின்பற்றவில்லை எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் சார்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மணி, ''சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இரண்டு ஆண்டுகளாகியும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.''இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போதும் போலீஸ் துறையில் உயர் பதவியில் உள்ளனர். கோப்புகள் திருடப்பட்டதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,'' என, வாதங்களை முன் வைத்தார்.அந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடந்து கொண்ட விதம் தங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது என்று கூறினர்.இவ்வளவு முக்கியமான ஒரு விவகாரத்தை, மாநில அரசு உரிய கவனம் செலுத்தி விசாரிக்கவில்லை என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக உள்துறை செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்புவதாக தெரிவித்தனர்.வழக்கு தொடர்பாக, தமிழக உள்துறை செயலர் தனிப்பட்ட முறையில், ஜனவரி, 27ம் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஜன., 31ல், அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.அப்போது, தமிழக அரசு வழக்கறிஞர், உள்துறை செயலர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராக அனுமதி வழங்கி, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

spr
டிச 22, 2024 20:51

ஒருவர் இறந்த பின் அவர் மேலுள்ள வழக்குகள் இல்லாமற் போவது போல, சிலைகள் காணாமல் போனதால் தொடர்புடைய கோப்புகளும் காணாமற் போய்விட்டது. இப்படியும் அரசு பதில் கொடுக்கலாம்


SIVA
டிச 22, 2024 17:52

JJ அவர்கள் ஊழல் வழக்கில் பத்து கோடி ஊழலுக்கு நூறு கோடி அபராதம் விதிக்க பட்டது , அதே போன்று இந்த முன்னூறு கோடி ஆவணத்திற்கு பதிலாக மூவாயிரம் கோடி அபராதம் விதியுங்கள் அதை முழுவதும் இந்த ஆவணங்கள் காணாமல் போன வழக்கில் சம்பந்தப்பட்ட அணைத்து அதிகாரிகளுக்கும்அபராதமாக விதியுங்கள் , காணாமல் போன ஆவணங்கள் அனைத்தும் தானாக கை கால் முளைத்து விழுந்து அடித்து உங்கள் கைகளில் வந்து சேரும் .....


Kavitha Sivakumar SG
டிச 21, 2024 12:33

Please all the opponent parties unite together to kick out this useless Gov


Arulperoli
டிச 21, 2024 12:32

எந்த ஆட்சியில் இது நடந்தது? என்பதை குறிப்பிடாமல் விடுபட்டுள்ளது


M Ramachandran
டிச 21, 2024 12:21

ரௌடிகளின் ஆட்சியில் இதெல்லாம் சாதாரணம். நாளொரு மேனி பொழுதொரு கொலை. கற்பழிப்பு கஞ்சா கடத்தல் மக்கள் பணம் கொள்ளயை இனி எவையெல்லாம் நடக்க போகுதோ? கலியுகம் தொடங்கி விட்டது.


Apposthalan samlin
டிச 21, 2024 11:44

ரபேல் ஆவணங்கள் மயமானது மாதிரி தான் சிலை கடத்தல் ஆவணமும் மயமாகி உள்ளது நடவடிக்கை கிடையாது என்று வக்கீல் விவாதம் செய்வார் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் .


Admission Incharge Sir
டிச 21, 2024 11:34

தமிழகத்தில் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசு ஒரு திறமை இல்லாத வேஸ்ட் அரசு. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் மோடி அவர்களையும், அவரின் மத்திய அரசையும் வசைபாடவேண்டியது, தொட்டதற்கெல்லாம் குறைகூறவேண்டியது. அந்தளவுக்கு இவர்கள் பெரிய அப்பாடக்கரும் கிடையாது, ஞாயவான்களும் கிடையாது. மோடிஅவர்களின் செயல்திறனில் 0.01 சதவீதம் கூட இவர்களுக்கு கிடையாது. மோடி அவர்கள் இந்த தேசத்திற்காக தனது குடும்பத்தை துறந்து துறவறம் பூண்ட உத்தமர். நம் தமிழ்நாட்டிலோ, குடும்பத்தை தவிர வேறு யாரும் இவர்கள் கண்ணுக்கு தெரியாதவர்கள். சிலைகடத்தல் விவகாரத்தை இவர்கள் கையாளும் விதத்தைப் பார்த்தால், எவ்வாறு போதைக்கடத்தலில் நேரடித்தொடர்பு இருந்ததோ அதேபோன்று, சிலைகடத்தலிலும் நேரடித் தொடர்பு இருக்குமோ என்ற ஐயப்பாட்டை உருவாக்குகிறது. உயர்திரு. பொன்மாணிக்கவேல் போன்ற நேர்மையானவர்களுக்குக்கூட இந்த அரசாங்கம் பல்வேறு தொல்லைகளைக் கொடுப்பதை பார்த்தால் இதத் தவிர வேறு என்ன யோசிக்கத்தோன்றும். தமிழர்கள் பெற்றுள்ள சாபம் தலைவிரித்து ஆடுகிறதோ.


NATARAJAN R
டிச 21, 2024 11:27

காணாமல் போகவில்லை. மறைக்கப்பட்டுள்ளது. தொலைத்த அதிகாரிகள் நிரந்தர பணிநீக்கம் என்று உத்தரவு பிறப்பித்து பாருங்கள். பைல் நீதியரசர் முன் வரும். அப்படியே காணாமல் போனாலும் நகல் இருக்குமே


Anand
டிச 21, 2024 11:03

இது மாடல் ஆட்சி என உச்சநீதிமன்றத்திற்கு யாரவது கூறுங்கள், அமைதி ஆகிவிடுவார்கள்..


Ms Mahadevan Mahadevan
டிச 21, 2024 09:52

வர வர தமிழ்நாட்டில் அரசு துறைகளின் நேர்மை, ஊழியர்களின் நேர்மை கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன பழமொழி போல உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை