உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இப்போது மட்டும் எப்படி தகுதியை கண்டுபிடிச்சீங்க? நிலுவை தொகை கேட்டு பெண்கள் முற்றுகை

இப்போது மட்டும் எப்படி தகுதியை கண்டுபிடிச்சீங்க? நிலுவை தொகை கேட்டு பெண்கள் முற்றுகை

சென்னை:மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள், திட்டம் துவங்கிய நாள் முதல் தற்போது வரையிலான தொகையையும் சேர்த்து தரக்கோரி, சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, 202௩ செப்டம்பரில் தமிழக அரசு துவக்கியது. இதற்காக பயனாளிகளை தேர்வு செய்ய, அந்தாண்டு ஜூலையில், 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களிடம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அதில் உரிமை தொகை கேட்டு, 1.63 கோடி பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், அரசு விதித்த நிபந்தனைகள் அடிப்படையில், 1.15 கோடி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், விடுபட்டோருக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, மீண்டும் விண்ணப்பம் வழங்கி, பயனாளிகளை தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. ஏற்கனவே மகளிர் உரிமை தொகை பெற தகுதியிருந்தும், தகுதியில்லை எனக்கூறி நீக்கம் செய்யப்பட்ட பலரும் தற்போது தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில், சேப்பாக்கம் - ஆயிரம்விளக்கு தொகுதியில் தகுதி பெற்ற 150க்கும் மேற்பட்ட பெண்கள், தேனாம்பேட்டை மண்டல மாநகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது, மகளிர் உரிமை தொகை திட்டம் துவங்கப்பட்ட நாள் முதல், தற்போது வரையிலான நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். 'ஏற்கனவே தகுதி இல்லை என எங்களை நீக்கிய நீங்கள், இப்போது எப்படி தகுதி உள்ளவர்களாக தேர்ந்தெடுத்தீர்கள்?' என, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

RAMESH
ஜூலை 26, 2025 09:50

இது தேர்தல் தகுதி... அனைத்து மகளிருக்கு ஆயிரம் ரூபாய் என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆயிற்று முதல்வரே.... சாமானிய மக்கள் கேள்விக்கு பதில் கூற முடியுமா துணை முதல்வரே...


அருண் பிரகாஷ் மதுரை
ஜூலை 25, 2025 11:05

இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ளது.. பொங்கல் பரிசு கொடுக்க பணம் இல்லை என்று கூறிய அரசு எப்படி விடுபட்ட அனைவருக்கும் பணம் கொடுக்கப் போகிறது..வரும் 2026 பொங்கல் பணமும் கொடுக்கப்படும்.. ஆனால் தேர்தல் முடிந்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றால் மீண்டும் பணமில்லை என்ற பழைய பல்லவியை பாடி ஏற்கனவே தகுதியானவர்கள், புதிதாக தகுதியானவர்கள் என்று அனைவருக்கும் 1000 ரூபாயை நிறுத்தி விடியல் அளிக்கப்படும்..


M S RAGHUNATHAN
ஜூலை 25, 2025 09:52

நீங்கள் எல்லாம் இப்போது தான் வயதுக்கு வந்து இருக்கிறீர்கள்.


Barakat Ali
ஜூலை 25, 2025 08:58

மக்கள் காரசாரமா கேள்வியெல்லாம் கேட்பாங்க ........ ஆனா பெரிய காந்தி நோட்டுக்களை பார்த்துட்டா எல்லா கோபமும் வடிஞ்சுரும் ......... அந்த வீக் பாயிண்ட்லயே அடிச்சு முடக்கிப்போட கட்சிகளுக்குத் தெரியும் ......


S.V.Srinivasan
ஜூலை 25, 2025 08:26

தகுதியை கண்டுபிடிக்க அவங்களுக்கு 4 1/2 வருஷம் ஆய்டுச்சும்மா. இப்போ அடுத்த தேர்தல் வருதுல்ல . அதுக்குதான் இந்த ட்ராமா . ஓட்டு போட்டு ஏமாந்துடாதீங்க.


peermohammednurullaraja peermohammednurullaraja
ஜூலை 25, 2025 07:42

மகளிர் உரிமை தொகை நீடிக்குமா?


Padmasridharan
ஜூலை 25, 2025 07:39

போராட்டக்கேள்விகள் நியாமானவை. ஆனால் இந்த 1000௹ மற்றும் இலவச பேருந்து பயணம் எத்தனை பெணகள் குடும்பத்தின் வறுமையை தீர்த்து இருக்கிறது. இன்னும் பொங்கலுக்கு கொடுக்கும் புடவைகள் வந்து சேரவில்லையே


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 25, 2025 07:05

எங்களுக்கு 150 ஓட்டு வேண்டாம்.


Rajagiri Apparswamy
ஜூலை 25, 2025 07:04

பொய் வாக்குறுதிக்கு அண்ணாமலையின் ஆவேசம் சரியே


நிக்கோல்தாம்சன்
ஜூலை 25, 2025 04:31

இது போன்று தமிழகத்தின் எல்லா பெண்களும் போராட முன்வர வேண்டும்


முக்கிய வீடியோ