உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சியில் இன்னும் எத்தனை கொடூரங்களை மக்கள் சகித்துக் கொள்ளணுமோ; சீமான்

தி.மு.க., ஆட்சியில் இன்னும் எத்தனை கொடூரங்களை மக்கள் சகித்துக் கொள்ளணுமோ; சீமான்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தி.மு.க., ஆட்சியில் இன்னும் எத்தனை கொடூரங்களை தமிழக மக்கள் சகித்துக்கொள்ள வேண்டும்? என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: 'கல்வியிற் சிறந்த தமிழ்நாடு' என்று பாட்டன் பாரதி புகழ்ந்து பாடிய, தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள பெருமைமிக்க அடையாளமாகத் திகழும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனக்கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறது. அண்ணா பெயரில் நடக்கும் ஆட்சியின் தரத்திற்குத் தலைநகரின் மையத்தில் அமைந்து பாதுகாப்பு நிறைந்த அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையே சான்று பகர்கின்றது. கருணாநிதி பெயரில் அரசு மருத்துவமனை. மருத்துவமனை வளாகத்திலேயே மருத்துவர் மீது கொலைவெறித் தாக்குதல். அண்ணா பெயரில் பல்கலைக்கழகம். பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார். தமிழகத்தின் ஒவ்வொரு நீதிமன்ற வளாகத்திலும் வக்கீல்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். காவல்நிலையங்கள் தோறும் விசாரணை கைதிகள் படுகொலை செய்யப்படுகிறார்கள். கட்டுக்கடங்காத கஞ்சா புழக்கம் காரணமாகப் பொதுவெளியில் சுதந்திரமாக மக்கள் நடமாட முடியாதபடி தி.மு.க., ஆட்சியில் நாள்தோறும் நடந்தேறும் குற்றங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தெருவுக்குத் தெரு திராவிட மாடல் மதுக்கடைகள் காரணமாக இந்தியாவிலே அதிக விபத்துகள் நடக்கும் மாநிலத்தில் தமிழ்நாடு மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருப்பதுதான் தி.மு.க., ஆட்சியின் ஆகப்பெரும் சாதனையாகும்.கொஞ்சமும் அச்சமின்றி இத்தனை கொடூரக் குற்றங்கள் நாள்தோறும் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது அவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையை, தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருக்கிறார்? தி.மு.க., ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்று ஏட்டளவிலாவது இருக்கிறதா? தமிழகத்தில் காவல்துறை செயல்படுகிறதா இல்லையா? என்ற கேள்விகளை எத்தனை முறை எழுப்பினாலும் இன்று வரை தி.மு.க., அரசு திருந்தியபாடில்லை. சட்டம்-ஒழுங்கை சீர்படுத்த யாதொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதற்கு மற்றுமொரு துயரச் சான்றுதான் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றுள்ள மாணவி மீதான பாலியல் வன்கொடுமையாகும். சட்டம்-ஒழுங்கை இவ்வளவு கேவலமாக வைத்துக்கொண்டு அடுத்தத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று கூறுவதற்குக் கொஞ்சமும் நா நடுங்கவில்லையா முதல்வர் அவர்களே? ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே அடுத்தத் தேர்தல் வெற்றிக்குப் போடும் திட்டத்தில், அணுவளவாவது சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க சிந்தித்திருந்தால் பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடுமை நிகழ்ந்தேறியிருக்குமா?அரசியல் எதிரிகள் மீது அவதூறு வழக்குகள் தொடுப்பதற்கும், அவர்களின் தனிமனித உரிமைகளைப் பறித்துப் பொதுவெளியில் பொய் பரப்புரை செய்வதற்கும் தமிழக காவல்துறையைப் பயன்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காவது, சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்கும் கொடூரர்களை அடக்கி ஒடுக்குவதில் காட்டியிருந்தால் சமூகக் குற்றங்களைப் பெருமளவு குறைத்திருக்க முடியும்.ஆகவே, தமிழக அரசு இதற்கு மேலாவது காவல்துறையை முடுக்கிவிட்டு சட்டம்-ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டுவந்து, நாட்டு மக்களை இத்தகைய கொடும் குற்றங்களைப் புரியும் சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, இனி இதுபோன்ற எண்ணமே யாருக்கும் வராத வண்ணம் மிகக்கடுமையான தண்டனையை அளிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

vivek
டிச 26, 2024 07:49

பெதவங்க. வச்ச பேரு உனக்கு நல்ல பொறுந்துது.....


Constitutional Goons
டிச 25, 2024 23:19

மோடியின் அந்நியமயமாக்களில் நாடு கெட்டுவிட்டது. டெல்லியிலும் குஜராத்திலும் அணைத்து மாநிலங்களிலும் இதே கதிதான்


V வைகுண்டேஸ்வரன்
டிச 25, 2024 20:12

யாரோ ஒரு பொறுக்கி ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதற்கு ஆட்சியாளர்கள் என்ன செய்ய? இனி எவனாவது தூக்கத்துல வண்டிய எங்கியாவது இடிச்சுட்டான் னா கூட திமுக ஆட்சி யின் கொடுமை என்பாரா?


raja
டிச 25, 2024 21:01

எப்புறா...உண்ணக் கூட நம்பர் ஒன்னு கொத்தடிமையாக மாத்தி வச்சு இருக்கான் நம்பர் ஒன்னு பிரின்சிபால்...


Palanisamy Sekar
டிச 25, 2024 21:03

பிரதர் அவமானமா இருக்குது. மு ஒலியை தவிர வேறு பத்திரிக்கையை படித்து கொஞ்சமாவது மூளையை பயன்படுத்த பாருங்கள். எங்குபார்த்தாலும் கஞ்சா விற்பனையும்..வீதிக்கு வீதி சாராய கடைகளையும் திறந்துவைத்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் என்பதுதான் ஆளும் திமுக மீது குற்றச்சாட்டே. குடித்துவிட்டு வண்டியை மோதவிட்டால் யாரை குற்றம் சொல்வது? விற்பவரையா அல்லது குடிக்கவைப்பவரையா? முட்டுக்கொடுங்கள் வேணாம்ன்னு சொல்லல.. நியாயமா பேசுங்க. கேடுகெட்ட ஆட்சிக்கு முட்டுக்கொடுத்து கெட்டபெயரை சம்பாதித்துக்கொள்ள வேண்டாமே.


ghee
டிச 26, 2024 06:47

அய்யா vaigundam.....காவல் துறை கட்டுபாட்டில் வைத்திருப்பவர் பதில் சொல்லட்டும்....உன் முந்த்ரிகொட்டை கருத்து தேவை இல்லை


m.arunachalam
டிச 25, 2024 20:09

சினிமாக்காரங்க உருவாக்கிய அவலம் . அறியாமையும் முட்டாள்தனமும் உள்ள பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் . அறுகதைக்கு மீறிய பெண்களின் சுதந்திரம் , ஜாமீன் கிடைக்கும் என்ற உறுதி . ஒதுக்கீட்டில் படிக்க கிடைக்கும் வாய்ப்பு போன்ற இவை அனைத்திற்கும் காரணம் .


திகழ்ஓவியன்
டிச 25, 2024 19:33

திரள் நிதி fraud நீ விஜயலக்ஸ்மி எல்லாம் ...... இப்போ விட்டு விட்டு வேறு திருமணம் இதற்க்கு பேர் என்ன சட்டம் ஒழுங்கு காரணம் சொல்லி அந்த அம்மா பிராது கொடுக்கும்போது உன்னை தூக்கி உள்ளே வெச்சிருக்னும்


hari
டிச 26, 2024 06:51

திகழ்...நீ எப்போ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருக்கே.


T.sthivinayagam
டிச 25, 2024 18:43

பாலியல் வன்கொடுமை செய்த அயோக்கியர்களை கண்டிக்காமல் மத்திய மாநில அரசுகளை கண்டிப்பது விநோதமாக உள்ளது


அப்பாவி
டிச 25, 2024 18:18

ரூம்ல ஒரு ஆணும் பெண்ணும் இருந்தாலே அந்த கேஸ்னு புடிச்சிட்டு போயிடுவாங்களாம்.


அப்பாவி
டிச 25, 2024 17:50

தி.மு.க அல்ல, எவன் ஆட்சிக்கு வந்தாலும் இது போன்ற கொடூரங்கள் நடக்கும். இது காலத்தின் கோலம். உங்க ஆசைக்கு வேணும்னா இப்பிடி பேசிட்டு போகலாம்.


Murugesan
டிச 25, 2024 18:10

திமுக 200 ரூபா நக்கி உன்னுடைய மகளுக்கு இது மாதிரி பேசுவியா, மண்டையில மூளையற்ற தகுதியற்ற அயோக்கியனங்க ஆட்சி


வைகுண்டேஸ்வரன். Chennai
டிச 25, 2024 18:52

யோவ் அப்பாவி அப்போ உன் குடும்பத்தில் யாருக்கேனும் இப்படி ஆகியிருந்தால் இபடித்தான் கருத்து போடுவாயா?


raja
டிச 25, 2024 19:52

அட கூமுட்டை கொத்தடிமையே... அப்போ எதுக்குடா எங்கோ நிர்பையாவுக்கு நடத்த போது இங்கே விளக்கு புடிச்சு போராட்டம் நடத்துனாங்க உங்கக்கா கணி.. இப்போ இதுக்கு நடத்துவாங்களாடான்னு தமிழக மக்கள் கேக்குறாங்கடா கொத்தடிமையே...


Vijay
டிச 25, 2024 20:25

இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடந்திருந்தால்?


பேசும் தமிழன்
டிச 25, 2024 17:36

அனைத்துக்கும் மூல காரணம் டாஸ்மாக் மது அரக்கன்..... மது கடைகளை மூடாமல்.... நடக்கும் குற்ற செயல்களுக்கு இந்த அரசு தான் காரணம்.... இவர்கள் எதிர்கட்சியாக இருந்த போது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கோரி என்னவெல்லாம் நாடகம் போட்டார்கள் என்று தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.....அதனால் வரும் தேர்தலில் இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை