உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்: டிச. 31ல் அ.தி.மு.க., - மா.செ.,க்கள் கூட்டம்

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்: டிச. 31ல் அ.தி.மு.க., - மா.செ.,க்கள் கூட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், டிச. 31ம் தேதி நடக்கும்' என, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், டிச. 31ம் தேதி காலை மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடக்க உள்ளது. மாவட்டச் செயலர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்' என கூறப் பட்டுள்ளது. தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு பின், பட்டியலில் இருந்து 97 லட்சத்துக்கும் அதிகமானோர் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் விண்ணப்பிக்க ஜன., 18 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசிக்கவே மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தி.மு.க.,வினர் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, ஒவ்வொரு தொகுதியிலும், 30,000 முதல் ஒரு லட்சம் பேர் வரை முறைகேடாக வாக்காளர் பட்டியலில் சேர்த்திருந்தனர். எஸ்.ஐ.ஆரில் இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் கொளத்துார் தொகுதியிலேயே ஒரு லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். வரும் ஜன., 18 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் அளித்துள்ளதால், மீண்டும் பல்லாயிரக்கணக்கானோரை சேர்க்க ஆளும் தி.மு.க., திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. அதை முறியடித்து, அ.தி.மு.க., ஆதரவு வாக்காளர்கள் விடுபடாமல் சேர்ப்பது குறித்து மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். மேலும், கூட்டணியில் அ.ம.மு.க., மற்றும் பன்னீர்செல்வம் அணியை சேர்ப்பது, வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு ஆகியவை குறித்து மாவட்ட செயலர்களிடம் கருத்து கேட்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Madras Madra
டிச 29, 2025 15:03

அம்மா எவ்ளோ கம்பீரமாக இருந்தாலும் சூழ்நிலை கருதி பல கூட்டணி தலைவர்களை அவர்கள் வீட்டுக்கே ஆணவம் இன்றி சென்று சந்தித்தவர் EPS எப்பதான் புரிந்து கொள்வார் என்று தெரியவில்லை கஷ்டம் தான் அதிமுக வுக்கு


arumugam mathavan
டிச 29, 2025 13:25

உண்மையில் ஆட்சிக்கு வரவேண்டுமானால் அம்மாவின் பார்முலாவை வருகிற அனைவரையும் இனைத்து தேர்தலை சந்தித்தால் வெற்றி உறுதி...இல்லை நான் தான் எல்லாம் என்றால் ...2026மோசமான வருடமாக அமையும்..


S.L.Narasimman
டிச 29, 2025 12:42

அதிமுகாவில் பன்னீரு, தினகரனை சேர்ப்பது குறித்து..... இது கப்சா...


பிரேம்ஜி
டிச 29, 2025 12:17

எந்த டிசம்பர் 31? 2026 டிசம்பர்தானே? அதுவரை கட்சி இருக்குமா?


saravan
டிச 29, 2025 12:06

பஜக 50 சீட் மிச்சத்தை யாருக்கு எனா கொடுத்துக்கோ


Vasan
டிச 29, 2025 11:16

தமிழகத்தின் வாக்காளர் எண்ணிக்கை, தமிழக மக்கள் தொகையை விட அதிகமாக இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


தமிழன்
டிச 29, 2025 10:55

உங்க கட்சியை எப்போ பிஜேபிகூட இணைக்கபோறீங்க???


kr
டிச 29, 2025 10:36

A diluted resolution authorising EPS to take final call on alliances will be passed. Nothing concrete gets done in this symbolic meetings


SWAMINATHAN J
டிச 29, 2025 10:16

நல்ல முடிவு எடுத்தார்


mohana sundaram
டிச 29, 2025 09:38

இதில் எல்லாம் ஒன்றும் குறைச்சல் இல்லை. இரண்டு திருட்டு திராவிட அயோக்கிய கட்சிகள் அழிந்து ஒழிந்தால் தான் இந்த தமிழகம் உருப்படும். தற்குறி விஜய் அவனைக் கண்டாலே பிடிக்காது. எனினும் தற்சமயம் இரண்டு திருட்டு திராவிட கட்சிகளையும் ஒழிப்பதற்கு அவனே முன்னணியில் உள்ளான். அவனுக்கே ஓட்டு போடுவதா அல்லது போட வேண்டாமா என்று மனது ஊஞ்சலாகி கொண்டிருக்கிறது.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை