உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பஸ் கட்டண உயர்வு; வாய்ப்பு இல்லை என்கிறார் அமைச்சர்!

பஸ் கட்டண உயர்வு; வாய்ப்பு இல்லை என்கிறார் அமைச்சர்!

சென்னை: பஸ் கட்டண உயர்விற்கு வாய்ப்பு இல்லை என அமைச்சர் சிவசங்கர் நிருபர்கள் சந்திப்பில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் வாயிலாக, தினமும் 20,508 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக, 1.85 கோடி பேர் பயணம் செய்து வருகின்றனர். அரசு பஸ்களை இயக்க தினமும் 17 லட்சம் லிட்டர் டீசல் செலவாகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ox7nmi7f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, அரசு போக்குவரத்து கழகங்களின் தினசரி வருவாய், 39.3 கோடி ரூபாய்; செலவு 57.68 கோடி ரூபாய்; பற்றாக்குறை 18.65 கோடி ரூபாயாக உள்ளது. இதே கட்டணத்தில் தான், தமிழகம் முழுதும் 4,700 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், பயணியர் கட்டணத்தை உயர்த்தக் கோரி தொடர்ந்த வழக்கில், நான்கு மாதங்களுக்குள் முடிவு எடுக்க, அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, புதிய குழு அமைக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் பஸ்களின் கட்டண உயர்வு குறித்து, 1,000க்கும் மேற்பட்ட பொது மக்கள், நுகர்வோர் அமைப்புகள், தனியார் பஸ் உரிமையாளர்கள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு உள்ளன. இதன் அறிக்கை, விரைவில் அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளன செயலர் தர்மராஜ் கூறியதாவது: கடந்த 2018ல், டிக்கெட் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்தது. அப்போது, லிட்டர் டீசல் விலை 63 ரூபாய்; தற்போது, 92.49 ரூபாயாக உள்ளது. கேரளா வில், 1 கி.மீ., துாரத்துக்கு , 1 ரூபாய் 10 காசும், கர்நாடகா வில் 1 ரூபாயும், ஆந்திராவில் 1 ரூபாய் 8 காசும் கட்டணமாக உள்ளன. ஆனால், தமிழகத்தில் 1 கி.மீ., 58 காசுகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. டீசல் விலை, உதிரி பாகங்கள் விலை உயர்ந்து வருவதால், எங்களால் இழப்பை சரி செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறோம். எனவே, தமிழகத்தில் 1 கி.மீட்டருக்கு, 90 காசுகள் நீர்ணயம் செய்ய வேண்டும் என, கருத்து கேட்பு நிகழ்வில் வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.600 கோடி இழப்பு

அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழகங்களில், இயக்கம் மற்றும் இதர செலவுகள் அதிகரித்து வருகின்றன. எங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்போது, தமிழக அரசு கடன் வழங்கி வருகிறது. இலவச திட்டங்களை செயல்படுத்தி வருவதால், அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. மாதந்தோறும் அரசு பஸ்கள், 600 கோடி ரூபாய் வரை நஷ்டத்தில் ஓடுகின்றன. எனவே, நிதி நிலையை சமாளிக்க, ஓரளவுக்கு பஸ் கட்டணத்தை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

உயர்வுக்கு வாய்ப்பு இல்லை

இது தொடர்பாக, நிருபர்கள் சந்திப்பில், அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: பஸ் கட்டண உயர்வுக்கான சூழல் ஏற்பட்டபோதும், ஏழை எளிய மக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது என்பதற்காக கட்டணம் உயர்த்தப்படவில்லை; அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கட்டண உயர்வு நிச்சயமாக இருக்காது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

mdg mdg
ஜூலை 22, 2025 15:46

கவர்மெண்ட் பஸ் முழுவதும் எக்ஸ்பிரஸ் சொகுசு பேருந்து என வகைப்படுத்தி மறைமுக கூடுதல் கட்டணம் சொல்கின்றார்களே இதுக்கு பேர் என்ன. இப்ப சாதாரண கட்டண பேருந்து இல்ல. குறைந்த கட்டண ஏழு ரூபாய். ஆனால் பத்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதுக்கு பேர் என்ன கட்டண உயர்வு இல்லாம. 13 ரூபாய் கட்டணத்துக்கு 15 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதை என்னன்னு சொல்றது உங்க ஊர்ல. இதுக்கு மேல என் கட்டணம் உயர்த்தணுமா? முன்னுதாரணமா இருக்க வேண்டிய அரசு பேருந்து மறைமுகமாக கட்டணத்தை உயர்த்தி தற்போது தனியார் பேருந்துகளும் கூடுதல் கட்டணம் சொல்கிறார்கள். ஆர்டிஓ ஒரு போஸ்டில் ஆள் இருக்காங்களா போயிட்டாங்களான்னு தெரியல. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து கட்டண அட்டவணை பேருந்து ல் ஓட்டப்பட்டு இருக்கும். தற்போது ஒரு பேருந்தில் கூட கிடையாது.


c.mohanraj raj
ஜூலை 22, 2025 14:48

மின் கட்டண உயர்வுக்கும் அப்படித்தான் சொன்னான் பிறகு ஏற்றப்பட்டது திருடர்கள் இல்லை என்றால் ஆம் என்று அர்த்தம்


lana
ஜூலை 22, 2025 12:59

ஒரு நாளில் 1.7 கோடி பேர் பயணம். கருத்து கேட்டது 1000 பேரிடம். இதில் pvt bus company அடக்கம். பேசாமல் அரசு போக்குவரத்து தனியார் மயம் ஆனால் அரசுக்கு 600 கோடி மிச்சம். மக்களுக்கு நல்ல சேவை ஆவது கிடைக்கும். நல்ல tvs பேருந்து ஓடிக் கொண்டிருந்தது. அதை தனது காழ்புணர்ச்சி காரணமாக முடக்கி இன்று மக்கள் தலையில் கடன் ஏறியது தான் மிச்சம். இது தான் சமூக நீதி.


சுந்தர்
ஜூலை 22, 2025 08:03

பிங்க் கலருக்கு இலவச பயணம்... எனவே கட்டண உயர்வு அவசியம்.


Amar Akbar Antony
ஜூலை 22, 2025 04:14

ஏற்கனவே நஷ்டம் இந்த இலட்சணத்தில் விடியா பயணம். தெறுபிள்ளையார்க்கு தேங்காய் உடைத்த கதையாக அரசின் போக்கு. திருட்டினும் மேலான கொள்ளை. நீ உனக்கு அரியணை வேண்டுமென்பதால் இலவசங்களை கொடுத்து நஷ்டத்தை சரிக்கட்ட மற்றவர்களிடம் பறிப்பதை விட தி மு க என்ற கட்சியே இலவசத்துக்கான துகையினை வழங்கலாமே


Mani . V
ஜூலை 22, 2025 03:47

அதுதான் ஆயிரம் ஓவாய் இலவசம் கொடுக்கிறார்களே. அதை வைத்து குடும்பச் செலவுகளை பார்த்து விட்டு, வீட்டில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு நூறு சவரன் நகை போட்டு திருமணம் முடித்து விட்டு, மிச்சம் இருக்கும் காசில் ECR ரில் ஒரு பங்களா, ஒரு ஆம்னி பஸ் வாங்க முடியும் என்பதையும் நாங்கள் நன்கு அறிவோம். நீங்க ஏத்தி கொள்ளையடிங்க சாரே.


புதிய வீடியோ