மேலும் செய்திகள்
சப் - ஜூனியர் கால்பந்து 5 சென்னை வீரர்கள் தகுதி
17-Oct-2025
சென்னை: பேரிடர் காலங்களில், அதிக இழப்பு ஏற்படாதவாறு, மக்களை காப்பாற்றும் மண்டல அளவிலான போட்டியில், தமிழக அணி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை ஆவடியில், தமிழ்நாடு பேரிடர் அமைப்பு படை செயல்படுகிறது. இந்த படையினர், பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்று, பெரிய அளவிலான இழப்பு ஏற்படாதவாறு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற மாநிலங்களில் தீயணைப்பு துறையின் கீழ் இயங்கினாலும், தமிழகத்தில் கூடுதல் டி.ஜி.பி., தினகரன், கமாண்டன்ட் அய்யாசாமி தலைமையில், 1,000 பேருடன், தமிழ்நாடு பேரிடர் அமைப்பு படை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் தேசிய பேரிடர் படை, அவ்வப்போது, மாநில படைகளுக்கு பயிற்சி அளித்து, போட்டிகளையும் நடத்தி வருகிறது. அதன்படி, ஒடிஷா மாநிலத்தில், இயற்கை பேரிடரின் போது, பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்படாதவாறு, பேராபத்தில் மக்களை மீட்பது, அவர்களின் உடைமையை மீட்பது குறித்து போட்டி நடத்தப்பட்டது. முதல் கட்டமாக, தெற்கு மற்றும் மத்திய மண்டல அளவிலான போட்டியில், தமிழக பேரிடர் மீட்பு படையை சேர்ந்த உதவி கமாண்டன்ட் மணிமாறன், எஸ்.ஐ.,க்கள் கணபதி, பிரபகரன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த போட்டியில், தமிழக அணி முதலிடமும், ஆந்திரா இரண்டாம் இடமும் பிடித்தன. இதைத்தொடர்ந்து, தேசிய அளவில், மாநில பேரிடர் மீட்பு படை குழுக்கள் இடையோன போட்டி, உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாதில், வரும் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன.
17-Oct-2025