உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூடுதல் நிதி ஒதுக்காமல் புதிய பயனாளிகளுக்கு ரூ.1,000 எப்படி கொடுப்பீங்க: ராமதாஸ் கேள்வி

கூடுதல் நிதி ஒதுக்காமல் புதிய பயனாளிகளுக்கு ரூ.1,000 எப்படி கொடுப்பீங்க: ராமதாஸ் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக கூடுதல் நிதியே ஒதுக்காமல் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதை மக்களை ஏமாற்றும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை; தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் 4ம் நாள் முதல் பெறப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்தத் திட்டத்திற்காக கூடுதல் நிதியே ஒதுக்காமல் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதை மக்களை ஏமாற்றும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, இன்றைய நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்படி பயனடையும் குடும்பத் தலைவிகளின் எண்ணிக்கை 1.15 கோடி ஆகும். அவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் நிதி வழங்க வேண்டுமானால், அதற்கு ரூ.13,800 கோடி தேவை. ஆனால், 2025-26ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டத்திற்காக ரூ.13,807 கோடி மட்டும் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தேவையை விட வெறும் ரூ.7 கோடி மட்டும் தான் அதிகம் ஆகும்.மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின்படி ஒருவருக்கு மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12,000 வழங்க வேண்டும். தமிழக அரசு கூடுதலாக ஒதுக்கியுள்ள ரூ.7 கோடியைக் கொண்டு 5,833 பேருக்கு மட்டும் தான் கூடுதலாக உரிமைத் தொகை வழங்க முடியும். ஆனால், ஜூன் 4ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் மையங்களில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக 100 தகுதியான விண்ணப்பங்கள் பெறப்படுவதாக வைத்துக் கொண்டாலும் 9 லட்சம் பேருக்கு கூடுதலாக உரிமைத் தொகை வழங்க வேண்டும். ஆனால், அரசு ஒதுக்கியுள்ள நிதியைக் கொண்டு 9 ஆயிரம் பேருக்குக் கூட உரிமைத் தொகை வழங்க முடியாது எனும் போது தமிழக அரசு ஏன் இதற்காக பிரமாண்ட அறிவிப்பை வெளியிட வேண்டும்?2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தகுதியுடையவர்களுக்கு மட்டும் தான் உரிமைத் தொகை என்று நிலையை மாற்றிக் கொண்ட தமிழக அரசு, அதன்படி தகுதியுள்ளவர்களிடமிருந்து ஒரு கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்டன, அதில் 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. மீதமுள்ள 56 லட்சம் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் பின் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களை அளித்தவர்கள் மேல்முறையீடு செய்தனர். அவர்களிலும் 9 லட்சம் பேரின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டன.மகளிர் உரிமைத் தொகை தொடர்பான ஒவ்வொரு அறிவிப்பின் போதும் தமிழக மக்கள் நம்பி ஏமாறுவது வாடிக்கையாகி விட்டது. இன்னொருமுறை தமிழக மக்களை அரசு ஏமாற்றக் கூடாது. புதிதாக பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் எவ்வளவு பேருக்கு மகளிர் உரிமைத் தொகை புதிதாக வழங்கப்படவுள்ளது? ரூ.7 கோடி மட்டுமே கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்க நிதி எங்கிருந்து கிடைக்கும்? அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும்? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு தமிழக அரசு விடையளிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

S.kausalya
மே 15, 2025 18:30

ஒரு குவார்ட்டர் சாராயம் கொடுத்தால் பெண்டாட்டி,பெண், சகோதரி, முடிந்தால் பெற்ற தாய் என எல்லோரையும் விற்கும் ஆண் களும், 100 ரூபாய் கொடுத்தால் கணவனையும். குழந்தைகளையும் .மறந்து விடும் பெண்களும் இருக்கும் போது இவர்களுக்கு என்ன கவலை. இம்முறை அரசு பணத்தையே கொடுத்து தனது ஓட்டுக்களாக மாற்றி கொள்கின்றனர். இம்முறை செல்போன்இலவசம், 5 வருடத்திற்கு அரசு செலவில் ரீசார்ஜ் என வாக்குறுதி கொடுத்தால் எல்லா மக்களும் உங்களுக்கு தான் ஒட்டு போடுவார்கள். நிறைய பேர் ஓட்டு போடும் வாய்ப்புஉண்டு


S.kausalya
மே 15, 2025 18:20

பத்து பேர் செத்து டாங்க. அது தான் புதுசா பத்து பேருக்கு கொடுக்கிறோம். இவர் ஒருத்தர். நாங்களே வெத்து வானத்தில் வில் அம்பு என விட்டு கொண்டு இருக்கிறோம் நாண் நாண் எங்கே என்று கேட்டு கொண்டு


சாமானியன்
மே 15, 2025 15:20

ஓட்டு போடும் மக்களே ! கீழ்கண்ட செய்தியை பாருங்கள். 1. உரிமைத்தொகை கொடுத்தால் கடன் ஜாஸ்தியாகும். 2. வளர்ச்சி திட்டம் வராது. 3. வரிகள் கூடலாம். 4. விலைவாசி கூடலாம். இவற்றிற்கெல்லாம் பதில் அரசிடம் இல்லை. பொறுப்பில்லாத அரசியல்வாதிகள்.


Kumar Kumzi
மே 15, 2025 15:18

ஐயா இது என்ன கேள்வி ஒன்றிய அரசு பணம் தரவில்லைனு சொல்லி மீண்டும் பதவிற்கு வந்தவுடன் அணைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ஓவா வழங்கப்படும்னு அடிச்சிவிடுவோம்ல


Balasubramanian
மே 15, 2025 15:17

அண்ணன் அவர் தலையை அடமானம் வைத்து தருவார் என்ற நம்பிக்கை மகளிருக்கு உள்ளது! சாகும் வரை மாடல் கட்சிக்கே மகளிர் ஓட்டு - இலவசங்கள் இவரைப் போல் அள்ளித் தந்தது யார்? - இப்படி தலைவர் காணும் கனவைக் கலைக்க மருத்துவர் ஐயாவிற்கு என்ன துணிச்சல்?


ஆரூர் ரங்
மே 15, 2025 14:37

இலவசங்களால் திவாலாகும் நிலையிலுள்ள தெலங்கானா அரசுக்கு எந்த வங்கியும் கடன் வழங்கத் தயாராக இல்லை. நாட்டிலேயே அதிக கடன் வாங்கியுள்ள தமிழகத்திற்கும் அதே கதி ஏற்படும் நாள் தொலைவிலில்லை. அப்படி நடக்கும் பட்சத்தில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காப்பாற்றவே முடியாது. வெறும் 500 க்கு வாக்குகளை விற்ற மூடர் கூடம்.


R.MURALIKRISHNAN
மே 15, 2025 14:29

கொடுத்தால்தானே ஒதுக்க வேண்டும்.வெற்று அறிவிற்பிற்கு எதற்கு?


ராமகிருஷ்ணன்
மே 15, 2025 13:46

இதிலென்ன கேள்வி. தேர்தல் அறிவிப்பு வெளியாகும் மாதத்திற்கு முன்பு ஒன்று இரண்டு முறை தருவார்கள். மகளிர் உதவி தொகை அல்ல தேர்தல் ஓட்டுக்காக கொடுக்கப்படும் பணம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுகவினர் சுருட்டி முழுங்குவற்கும் ஓட்டு வங்கி அரசியல் செய்வதற்கும் இதுவரை 4.5 லட்சம் கோடிகளை வாங்கி சுருட்டி உள்ளது. யார் தலையில் இடி போல விழுக போகிறது. இவர்களின் ஓட்டு வங்கி அரசியலுக்கு மற்ற மக்கள் கஷ்டபட வேண்டுமா. ஓட்டு போடும் போது சிந்திக்க வேண்டும்


raja
மே 15, 2025 13:43

உலக மகா திருட்டு திராவிட கேடி 420 க்கு அப்பாவி மக்களை ஏமாற்றுவதை தவிர வேறென்ன தெரியும்..


S Srinivasan
மே 15, 2025 13:39

govt money cannot distributed but கொள்ளை அடிச்ச பணம் இருக்கு இல்ல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை