உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி படிப்பை தொடர கணவர் தடை எஸ்.பி., அலுவலகத்தில் மாணவி புகார்

பள்ளி படிப்பை தொடர கணவர் தடை எஸ்.பி., அலுவலகத்தில் மாணவி புகார்

விழுப்புரம் : பள்ளிப் படிப்பைத் தொடர விடாமல், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தடுப்பதாக, மாணவி ஒருவர், போலீசில் புகார் மனு கொடுத்தார். விழுப்புரம், பெரிய காலனியைச் சேர்ந்த, புஷ்பராஜ் மகள் சுபஸ்ரீ. இவர், நேற்று காலை விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில், புகார் மனு அளித்தார். அவருடன் வந்த வழக்கறிஞர் லூசி கூறியதாவது: விழுப்புரம், பெரிய காலனியைச் சேர்ந்த புஷ்பராஜ் மகள் சுபஸ்ரீ,15; விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். கடந்தாண்டு சுபஸ்ரீ - ராம்குமார்,23, திருமணம் நடந்தது. அடுத்த சில நாட்களில், கணவர் ராம்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், சுபஸ்ரீ பள்ளிக்குச் செல்லக் கூடாது என மிரட்டினர். தொடர்ந்து சென்றால், ராம்குமாருக்கு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து வைத்து விடுவதாகவும் மிரட்டினர். இதையடுத்து, சுபஸ்ரீ விழுப்புரம் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்துள்ளார். இவ்வாறு, வழக்கறிஞர் லூசி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்