உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் மீண்டும் சொல்றேன்... நான் ஒரு கிறிஸ்தவன்; துணை முதல்வர் உதயநிதி

மீண்டும் மீண்டும் சொல்றேன்... நான் ஒரு கிறிஸ்தவன்; துணை முதல்வர் உதயநிதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: 'நான் ஒரு கிறிஸ்தவன் என்று மீண்டும் மீண்டும் சொல்வதில் பெருமையடைகிறேன்' என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.கோவையில் எஸ்.பி.சி., பெந்தெகொஸ்தே சபைகளின் சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பெத்தேல் மாநகரப் பேராலயத்தில் நடைபெற்றது. இதில், துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது: ஒட்டுமொத்த உலகையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விழா என்றால், அது நம்முடைய கிறிஸ்துமஸ் விழா மட்டும் தான். கிறிஸ்துமஸ் வந்தால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. உங்களுக்கு தெரியும், நான் படிச்சது டான் பாஸ்கோ பள்ளியில், மேல்படிப்பு படிச்சது லயோலா கல்லூரியில். சென்ற ஆண்டு ஒரு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 'நானும் ஒரு கிறிஸ்டியன் தான்' என்று பெருமையாக சொன்னேன். உடனே பல சங்கிகளுக்கு வயிற்று எரிச்சல். இன்னைக்கு மீண்டும் உங்க முன்னாடி சொல்றேன், நான் ஒரு கிறிஸ்டியன் என்று சொல்வதில் பெருமையடைகிறேன். 'நீங்க என்ன கிறிஸ்தவனு நினைச்சா கிறிஸ்தவன், முஸ்லீம்னு நினைச்சா முஸ்லீம் , இந்துனு நினைச்சா இந்து; நான் எல்லாருக்கும் பொதுவானவன் தான். எல்லா மதங்களின் அடிப்படையே அன்பு தான். எல்லோர் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்று தான் எல்லா மதங்களும் சொல்கின்றன, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 228 )

S.V.Srinivasan
ஜன 17, 2025 07:57

நீ எவநா இருந்தா எங்களுக்கென்னய்யா. நாட்டுக்கு ரொம்ப முக்கியமா. ஓசில பன் கிடைச்சுதுள்ள. தின்னுட்டு போய்கிட்டே இரு.


Mani . V
ஜன 16, 2025 12:42

மீண்டும் மீண்டும் சொல்றேன், இதுக்கு தொங்கலாம்.


Chidambarakrishnan K
ஜன 16, 2025 11:57

அப்போ இவருடைய அம்மா பல ஹிந்து கோயில்களுக்கு சென்று வருவதை யாரும் கண்டுகொள்ளவில்லையா அல்லது கண்டிக்கவில்லையா? ஒரு கிரிஸ்துவர் எப்படி ஹிந்து கோவில்களுக்கு செல்லலாம்? அவர்களுக்கு அனுமதி உண்டா?


Ganapathy
ஜன 09, 2025 14:21

அப்ப கிறிஸ்தவ வரில மட்டும்தான் இவனுக்கு அரசு சலுகைகள் கிடைக்கிறதா? இவனை சட்டப்படி பதவிநீக்கம் செய்யணும். மதமாற்றம் செய்ய கிறிஸ்தவ போதகர்கள் செய்த பல கூடிய நிகழ்ச்சிகள் உலகெங்கிலும் நடந்துள்ளன. நடக்கின்றன. கோவாவில் 250 வருடங்கள் முன் இவர்களால் கைகள் வெட்டுப்பட்ட நாக்குகள் வெட்டப்பட்ட ஹிந்துக்கள் ஏராளம். அமெரிக்க மண்ணில் இவனுங்க செஞ்ச கொடுஞ்செயல்கள் ஐஎஸ்ஐ இஸ்லாமிய தீவிவாதுக்கே சவால் விடுகின்றன. இந்த கொடுஞ்செயல்களின் சாட்சியங்களை இன்று மக்களால் வெறுக்கப் படுகின்றன. கொலம்பஸ் கொண்டாடுவதை அமெரிக்க மக்கள் வெறுகின்றனர்.. இந்த நிலையில் இந்த திராவிட உளறுவாயன் வாய் கூசாமல் உலகே மகிழும் தினம் கிறிஸ்துமஸ் தினம் என இந்த உளறுவதைக் கேட்கும்போது "இவனும் ஒரு கிறிஸ்தவ பாவிதான்" எனத் தெரிகின்றது.


Iyer
ஜன 06, 2025 21:53

ஒரு கிறிஸ்டியன் மட்டும் இல்லை. ஊரை கொள்ளை அடித்த குடும்பத்தின் புத்தி இல்லாத வாரிசும்


Ramalingam Shanmugam
ஜன 01, 2025 13:15

ஆரூர் தியாகேசா உனக்கே அடுக்குமா


Thilaka
டிச 31, 2024 04:54

அப்பன் ஸ்டாலின், தாத்தா கருணாநிதி, உறவுப் பாட்டன் ஈ வெ ராமசாமி, கட்சித் தலைவர் அண்ணாதுரை எல்லாரும் மறைத்து வைத்திருந்த உண்மையை இப்போது வெட்டவெளிச்சமாகப் போட்டு உடைத்த உதயநிதிக்கு நன்றி. நாத்திகம் என்ற போலிப் பெயரில் இத்தனை காலம் கிறிஸ்தவர்கள் இந்துமதத்துக்கு எதிராகச் செய்த சதியெல்லாம் அம்பலமாகிறது. எல்லாம் அவன் செயல். ஓம் நம சிவாய. ஓம் நாராயணாய நமஹ.


Naga Subramanian
டிச 27, 2024 15:54

மதச் சார்பற்ற என்ற வார்த்தைக்கு இப்பொழுதான் அர்த்தம் புரிகிறது. அருமை உதயண்ணா வாழ்க தங்களது மதம். வளரட்டும் தங்களது திராவிட சித்தாந்தம்.


K.Rajasekaran
டிச 27, 2024 05:41

தமிழகத்தின் தீய சக்தி கிறிஸ்து மதத்தில் இருப்பதால் அவர்களுக்கு தான் பாதிப்பு.


kumarkv
டிச 26, 2024 22:28

நீ எந்த எழவா இருந்தா மக்களுக்கு என்ன


சமீபத்திய செய்தி