உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்: கரூர் சம்பவம் குறித்து விஜய் வேதனை

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்: கரூர் சம்பவம் குறித்து விஜய் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கரூரில் நடந்த சம்பவத்தால் இதயம் நொறுங்கி போய் இருக்கிறேன் என்று விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.இவ்வாறு விஜய் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 106 )

baala
அக் 01, 2025 09:23

முட்டாள்கள் / தற்குறிகள் இருக்கும்வரை இப்படித்தான்.


AMLA ASOKAN
அக் 01, 2025 08:27

ஒவ்வொரு மனிதனுக்கும் தன் எதிர்காலம் குறித்த ஒரு குறிக்கோள் இருக்கும் . அனைவரும் தன் தகுதிக்கு ஏற்ப உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்று தான் ஆசை படுவார்கள். பலர் கடின உழைப்பால் வெற்றியும் அடைவார்கள். சிலர் கள யதார்த்தை புரிந்து கொள்ளாமல் இலக்கை அடையவேண்டுமென தன்னிலை மறந்து வெறி கொண்டு குறுக்கு வழியிலும் போராடுவார்கள். இதில் இரண்டாம் வகையை சேர்ந்தவர் தான் நடிகர் விஜய். பணம், புகழ் இரண்டையும் அடைந்த பின் ஆட்சி அதிகாரத்தில் முதல் அமைச்சராக அமர வேண்டும் என்னும் வெறி அவருள் புகுந்ததா, அல்லது புகுத்தப்பட்டதா என்பது புரியாத புதிர். அந்த தகுதி அவரிடம் உள்ளதா அல்லது அவரது சகாக்களிடம் இருக்கின்றதா என்பதும் புரியாத புதிர். அவரை சுற்றி உள்ளவர்கள் விஜயை ஒரு மாமன்னர் போல் சித்தரித்ததின் விளைவாக சுய சிந்தனை அற்றவராக அவர் மாறி விட்டார். அதனால் தான் 41 உயிர்கள் பலியான பின் பலவித ஆலோசனைகளுக்கு பின், மூன்று நாட்கள் கழித்துதான் செய்த மாபெரும் தவறை மறந்தும், தனக்கு எந்த பங்கும் இல்லை என்பதை போலும் சினிமா காட்சிகளில் தோன்றுவதை போல் சோகமாக தன்னை சித்தரிக்கிறார். அவரை தெய்வமாக போற்றும் அவரது ரசிகர்கள் மட்டும் இன்றும் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வார்கள் . அனால் அவரை ஒரு நடிகன் என்று மட்டும் பார்க்கும் அறிவுள்ள மக்கள் யாரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . இந்த சோக நடிப்பு பரப்புரையிலும் தான் மீண்டும் சர்வ வல்லமையுடனும் புதிய உத்வேகத்துடனும் அஞ்சா நெஞ்சத்துடன் அரசியலை எதிர்கொள்வேன் என்னும் தம்பட்டம் அனைவரையும் மிரள வைத்துள்ளது . இத்தகு ரசிகர்களின் அடாவடித்தனம் மீண்டும் தொடருமா என்பதும் புரியாத புதிர் .


Padmasridharan
செப் 30, 2025 18:09

செத்தவங்க யார் யாரு, வயசென்ன, குடிப்பழக்கமுண்டா, எப்படி ஆச்சின்னு post mortem report சொல்லுமே. குடும்ப பின்னணி பாக்காம பண நஷ்ட ஈடு கொடுத்தால் வீட்டில இருந்து சாகாம, வேலை செஞ்சி சம்பாதிக்காம, இந்த மாதிரி பொது கூட்டத்துல சாகலாமே லட்சங்களுக்கு


panneer selvam
செப் 30, 2025 16:25

Another emotional dialogue given writer . Why do not meet the press and talk in front of them , do not hide behind digital web pages like X


Natchimuthu Chithiraisamy
செப் 29, 2025 21:19

விஜய் அவர்களே ஒருகால் நல்ல பதவிகளில் வரும்போது தயவு செய்து இந்துக்களுக்கு எந்த ஒரு துரோகமும் செய்து விடாதீர்கள் இந்துவாகிய நாங்கள் அப்பாவிகள். இந்த திமுக அரசு போல் உயர் பதவிகளில் அணைத்து கிருஸ்துவர்களையும் அமர்த்தி கோவில் திருவிழா முதல் ஸ்கூல் TC ல் இந்து என்கிற பெயரை நீக்குவது வரை ஆவணங்களில் பலதை மாற்றிவிட்டார்கள் இந்து கோவில்களை பங்குவது தான் பாக்கி. மலைகளை பிரித்து பங்கு போட நடவடிக்கைகளும் நடக்கலாம். கரூர் சம்வத்திக்கு பிறகு பொது மனிதனாக இருக்க வேணும். அனைவருக்கும் சமமாக இருக்க வேணும். கிருஸ்துவன் தான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று இல்லை ஒரு இந்து நாட்டில் கிருஸ்துவர்கள் மிக குறைந்த சதவிகிதம் உள்ள இடத்தில் மூன்று கிருஸ்துவ தலைவர்கள் அனைவரும் சினிமா. காமராஜருக்கு பின்பு தண்ணீரை பற்றிய அறிவு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு மட்டுமே என்பது யாருக்கு புரியும் ஆனால் அனைவரும் உணவு உண்கிறார்கள் 60 ஆண்டுகள் கிடப்பு திட்டத்தை 1800 கோடியில் துவக்கினார் மழை பொழிகிறது விவசாயம் செழிக்கிறது.


SIVA
அக் 01, 2025 08:44

ஆசை தோசை அப்பளம் வடை ....


baala
அக் 01, 2025 09:18

இதுல எங்கே matham?


Gnana Subramani
செப் 29, 2025 18:37

இரண்டாயிரம் கோடி வருமானத்தை விட்டு விட்டு மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ள, ஒரு படத்துக்கு 200 கோடி வாங்கும் விஜய், இறந்து போன 39 நபர்களுக்கு தலா 5 கோடி கொடுத்தால் கூட சின்ன தொகை தான்


BHARATH
அக் 01, 2025 12:41

என்னப்பா இருநூறு கோடி??? நிறுவனம் அவனுது அதனால் அவனுக்கு அவனே சம்பளம் கொடுக்கறது. கருப்பு பணத்தை வெள்ளையாக ஆக்குவது...


Jayaraman Ramaswamy
செப் 29, 2025 17:39

அடுத்த களபலிக்காக இந்த பசுத்தோல் போர்த்திய அரசியல் பேப்பர் ஓநாய் அழுகிறது.


Dominic
செப் 29, 2025 09:50

நாங்கள் உனக்கு பெவிகால் அனுப்பிவைப்போம்..கவலை vendaam.


ramesh
செப் 28, 2025 11:36

இது வரையிலும் இந்த நடிகர் பாதிக்கபட்ட ரசிகர்களுக்கு 5 பைசா கூட நஷ்ட ஈடாக கொடுக்க முன் வரவில்லை. புஷ்பா பட விபத்தில் பலியானவர்களுக்கு கூட அல்லு அர்ஜுன் உடனடியாக நஷ்ட ஈடை அறிவித்தார். இவர் தமிழ் நாட்டு மக்களை காக்க வருகிறாராம் . தமிழ்நாடு அரசு தான் 10 லட்சம் நஷ்ட ஈடு அறிவித்து இருக்கிறது


Saran
அக் 01, 2025 01:51

We have brain to think but not to cheat cheat …


Rathna
செப் 28, 2025 11:23

இறைவனே. ஆத்மாக்கள் சாந்தி அடையட்டும். சினிமா மோகம், மாயை பல அப்பாவி உயிர்களை காவு வாங்கியுள்ளது. மிகவும் படிப்பில், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாநிலங்களில் கூட இந்த அளவு சினிமா மோகம் இல்லை


சமீபத்திய செய்தி