உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன்; கமல் கட்சியிலிருந்து விலகிய வினோதினி பதிவு

மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன்; கமல் கட்சியிலிருந்து விலகிய வினோதினி பதிவு

சென்னை: மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன் என நடிகை வினோதினி வைத்தியநாதன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.நடிகர் கமல் நடத்தி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பல சினிமா பிரபலங்கள் இணைந்து தங்களது ஆதரவுகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில், 2019ம் ஆண்டு சட்ட சபை தேர்தலுக்கு முன்னதாக, நடிகை வினோதினி வைத்தியநாதன் சேர்ந்தார். தற்போது அவர், கமல் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன். அரசியல் பெரிய கடல். அதில் முத்தெடுத்து, மக்களுக்குச்சேர்க்க, தனிப்பட்ட நபரால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்ய தேவை - எண்ணம், சிந்தனை, செயல், பணம். என்னிடம் எண்ணமும் சிந்தனையும் மட்டுமே உள்ளது என்பதைக் காலம் புரியவைத்திருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் செயலும் பணமும் எனது சொந்த வாழ்க்கைத் தரத்தை ஓரளவு முன்னேற்றுவதற்கும், நான் மேற்கொண்டுள்ள தெருவிலங்குகளின் (நாய், பூனை, ஒரு கோஷாலாவில் என் செலவில் வாழும் சில மாடுகள்) வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்குமே சென்றிருக்கிறது. ஹிந்தியில் ஒரு வார்த்தை இருக்கிறது. அதை நான் சொல்லிப்பல பேரைத் திட்டியிருக்கிறேன். காம்சோர் என்பதுதான் அந்த வார்த்தை. ஆங்கிலத்தில் சொன்னால் Slacker. கடமைகளைத்தட்டிக்கழிக்கும் சோம்பேறி. மய்யத்தில் நான் செய்தது காம்சோர். இதை ஒத்துக்கொள்வதில் தவறில்லை என்றும் இந்த உண்மையை வெளிப்படுத்துவதன்மூலம் எனக்கு மிகப்பெரிய சுதந்திரம் கிடைக்கிறது என்றும் நம்புகிறேன். பலர் இங்கு, கட்சி நடக்கிறதா என்றெல்லாம் கேட்பார்கள். எப்பொழுதும் நான் சொல்வது - கட்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சிந்தியுங்கள்.சிறு துளி கூட பெரு வெள்ளமாகும். அச்சிறு துளியைக்கூட நான் என் பல அலுவல்களுக்கு நடுவில்தான் செய்திருக்கிறேன். முழுமையாக அல்ல. அமெரிக்க அரசியலில் ஒரு term பயன்பாட்டில் உள்ளது. Career Politician. முழுமையாக அரசியலில் மட்டுமே இருப்பவர்கள், அரசியலையே தொழிலாகக்கொண்டவர்கள், அதிலிருந்தே சம்பாதிப்பவர்கள். ஆனால் அதை முறியடித்துத்தான் அத்தனை career politicianகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு Trump அதிபரானார். பெருந்தன்மையோடு எனக்கு புரிய வைத்திருக்கின்றனர்.

தமிழக அரசியல்

யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்புக்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. தலைவரோடு நேரடியாக உரையாட, கேள்வி கேட்க, பற்பல நிகழ்ச்சிகளைத் துவக்க, பற்பல செயல்பாடுகளை முன்னெடுக்க. ஆனால் அவற்றையெல்லாம் நான் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. நம்மவர் போன்ற மகத்தான தலைவனைத் தவறவிட்டது தமிழகம் மட்டுமல்ல, வினோதினியும்தான். தொடர்ந்து என் எண்ணமும் சிந்தனையும் தமிழக அரசியலை மையப்படுத்தியே இருக்கும். ஏனெனில், நான் பிறந்த இம்மண்ணுக்கு என் மக்களுக்கு என்னால் ஆன சிறு மாற்றத்தையாவது, குறைந்தபட்சம் சிந்தனையளிவிலாவது, இப்பிறவியில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.

மக்கள் பிரச்னை

மய்யத்தில் கொடி நட்டு, போஸ்டரடித்து, உறுப்பினர் சேர்த்து, ஒவ்வொரு தேர்தலின்போதும் அயராது களத்தில் இறங்கி வேலைசெய்யும் தொண்டனைப்போல், மக்கள் பிரச்னை என்றால் களத்தில் குதிக்கும் ஒவ்வொரு கட்சியின் நிர்வாகிபோல் நானும் என் கணக்கைத் தொடங்கும் பொழுதுதான் அது அரசியல் அல்லாது, அறச் செயலாக மாறும். அதுவரை, சிந்தனையில் மட்டுமே. அச்சிந்தனையை மெருகேற்றிய நம்மவருக்கும் அவர்பின் நின்ற, நிற்கும் அனைவருக்கும் நன்றிகளும் அன்பும். தொடர்ந்து பயணிப்போம். சமரசமற்ற நடுவு நிலையிலிருந்தபடியே. இவ்வாறு நடிகை வினோதினி வைத்தியநாதன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

angbu ganesh
பிப் 03, 2025 11:36

மையம்னு ஒரு கட்சி இருக்க ஆமா யாருமே அதுக்கு தலீவரு


sridhar
ஜன 31, 2025 16:28

கவிதைத்தனமாக , எதுவும் புரியாமல் எழுதும் நீங்க அந்த கட்சியில் தான் தொடர்ந்து இருக்கணும்.


sridhar
ஜன 31, 2025 16:24

கருணை இருக்கு என்கிறீர்கள் . பிறகு எதற்கு பிரிந்து செல்கிறீர்கள் .


Anand
ஜன 31, 2025 12:36

அவனை மாதிரியே நீயும் புரியாத மாதிரியே பேச பழகிக்கொண்டாய்.... எதுவோ கூட பசு சேர்ந்தது போல..


J.V. Iyer
ஜன 31, 2025 06:15

வெளியேறாதீங்க.. உங்கள் ஒருவரால்தான் இந்த மையத்தை மீட்டு ... கட்டமுடியும்


Pushpa Gokul
ஜன 31, 2025 05:03

இருக்கு ஆனா இல்லை.


Ganesun Iyer
ஜன 30, 2025 20:12

தலைவரிடம் கற்றுத் தேர்ந்த தொண்டரின் அறிவிப்பு தலைவரை விஞ்சி விட்டது..


K.J.P
ஜன 30, 2025 20:01

அய்யய்யோ என்ன சொல்ல வர்றாங்கனே புரியவில்லையே.மய்யத்தலைவர் மாதிரியே பதிவு செய்யுறாங்களே


nagendhiran
ஜன 30, 2025 18:37

வாய்தான் சனி?


தி. குமார், மதுரை
ஜன 30, 2025 15:14

இந்த கட்சியில தலைவர் போல தான் எல்லோரும் பேசுவாங்க போல. என்னம்மா சொல்ல வர்ற? போலி அறிவுஜீவிகள்….