உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வைப் பற்றி நான் பேசவில்லை: அண்ணாமலை பதில்

அ.தி.மு.க.,வைப் பற்றி நான் பேசவில்லை: அண்ணாமலை பதில்

கோவை: '' நேற்று கூட்டணி தொடர்பாக நான் பேசியதில் அ.தி.மு.க.,வைப் பற்றி குறிப்பிடவில்லை,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.கோவையில் நேற்று நிருபர்களைச் சந்தித்த அண்ணாமலை,' தமிழகத்தில் பா.ஜ., உடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள்,' எனக்கூறியிருந்தார்.இது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., நிருபர்களிடம் கூறுகையில், '' எங்கே அ.தி.மு.க.,வைப் பற்றி அண்ணாமலை குறிப்பிட்டார். தவறாக பேசாதீர்கள். எங்க அப்படி யார் சொன்னது எனக்கூறியிருந்தார்.இந்நிலையில், இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: டிவியில் இரவு 7 - 9 வரை நடக்கும் விவாதங்களுக்கு ( டிபேட்) அரசியல் விமர்சகர், எந்த அரசியல் கட்சியையும் சேராதவர் என இரண்டு பேரை கொண்டு வந்து அமர வைத்து நான் சொன்னதையும், அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., சொன்னதையும் திரித்து பேசுகிறீர்கள். நேற்று நான் பேசியதில் அ.தி.மு.க.,வை குறிப்பிடவில்லை. பா.ஜ.,வின் நிலையைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டேன். அ.தி.மு.க., பற்றி இ.பி.எஸ்., பேசுகிறார். இது நியாயம் தானே.டிவியில் நடக்கும் விவாதங்களை நான் பார்ப்பது கிடையாது. அதில், விவாதத்தில் அமர்பவர்களுக்கு களத்தில் நடப்பது என்ன தெரியும். அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் சென்று பா.ஜ.,வை திட்டுவதையே வேலையாக வைத்து உள்ளனர். பத்திரிகையாளர்கள் என பலர் பேசுகின்றனர். அவர்கள் யார்?அரசியல் விமர்சகர்கள் நடுநிலையாக பேசுகிறார்களா? அவர்களுக்கு தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு எந்த மாதிரி கூட்டணி அமைய வேண்டும் என்பதை அரசியல் விமர்சகர்கள் முடிவு செய்கிறார்கள். அதற்கு நானும், இ.பி.எஸ்.,சும் எப்படி தொடர்ந்து பேச முடியும்.பத்திரிகையாளர்களுக்கு களத்தில் நடப்பது தெரியும். விவாதத்தில் அமர்பவர்களுக்கு என்ன தெரியும்? ஏசி அறையில் அமர்ந்து கட்டுரை எழுதுவதை விட வேறு என்ன தெரியும்? இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

venugopal s
மார் 09, 2025 16:46

மாப்பிள்ளை அவர் தான் ,ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டையைப் பற்றி நான் பேச மாட்டேன் என்ற ரஜினிகாந்த், செந்தில் காமெடி காட்சி போல் உள்ளது!


S.L.Narasimman
மார் 09, 2025 08:21

அண்ணாமலை மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் நிதானமாக யோசித்து தெனாவெட்டாக பேசாமல் அந்த கட்சியை ஆதரித்து பேசினால் இந்த கேடு நிறைந்த ஆட்சியை விரட்டலாம்.


Chand
மார் 09, 2025 02:25

Hello Oliva Vijay. There is no way that dum Vijay is going to win. Why are you so scared now of BJP? Did you get your 200 from DMK . Is that still 200?


beindian
மார் 08, 2025 23:55

எந்த கட்சி ஆள வேண்டும் என்பதை விட எந்த கட்சி ஆளவே கூடாது என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்... ஆள வேண்டும் என்று மக்கள் நினைக்கும் கட்சிகள் லிஸ்டில் பிஜேபிக்கு கண்டிப்பாக தமிழகத்தில் இடமில்லை என்பதே உண்மை... இதைச் சொன்னாலும் இங்கே என்னை வசை பாட ஒரு கூட்டம் காத்திருக்கும்... பிஜேபி இருக்கும் கூட்டணி தமிழகத்தில் தோற்கும்... மக்கள் அளிக்கும் தீர்ப்பு வரும் வரை இங்கே கதறும் சங்கிகள் அதனை உணரப் போவதில்லை... கதறுங்கள்... ஆனால் டெசிபல் சத்தம் அதிகம் ஆகாமல் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் கதறுங்கள்...


மதிவதனன்
மார் 08, 2025 23:03

இவர் படித்தவர் தானா நேற்று Q வில் நிற்கிறார்கள் என்றார் இன்று டெல்லியில் இருந்து செம டோஸ் வாங்கியவுடன் இப்படி மாற்றி பேசுகிறார் இந்த தற்குறி useless


Appa V
மார் 08, 2025 22:56

டாஸ்மாக் ரெய்ட்ஸ் பத்தி எந்த பத்திரிக்கைகளும் செய்தி முழுமையாக வெளியிடவில்லை


வரதராஜன்
மார் 08, 2025 22:17

நான் இருக்கேன் என்பதை காட்டுவதற்கே இந்த வெண்ணை வெட்டி சிப்பாய்களின் வேலையாக உள்ளது புரிந்து கொள்ளுங்கள் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் ஜொலிக்கும் அன்பர்கள் மத்தியில் இவர்கள் ஆட்சி இல்லை என்றால் இங்கே இவர்களுக்கு வேலை இல்லை


Oviya Vijay
மார் 08, 2025 21:11

நான் எந்த கட்சிக்கும் சார்பாக இல்லை... நடுநிலையாக தமிழக களநிலவரத்தைப் பொறுத்தே என் கருத்துக்களை இங்கே பதிவிடுகிறேன்... அது தெரியாமல் பலர் இங்கே ஏதோ நான் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக கருத்துக்களைப் பதிவிடுவதாக எண்ணி என்னை வசைபாடிக் கொண்டுள்ளனர்... அறியாத பிள்ளைகள்... ஐ மீன் கத்துக் குட்டிகள்... என்ன செய்வது... ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்... தமிழகத்தில் இப்போதைக்கு அடுத்து ஒரு தேர்தல் என்று வந்தால் திமுக கூட்டணிக்கு அடுத்ததாக தவெக தான் எதிர்க்கட்சி அந்தஸ்தில் ஓட்டுக்கள் வாங்கப் போகிறது... மற்றபடி கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிர்க்கட்சிகள் இல்லை என்பதே தமிழகத்தில் நிதர்சனம்... எந்த கட்சி ஆள வேண்டும் என்பதை விட எந்த கட்சி ஆளவே கூடாது என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்... ஆள வேண்டும் என்று மக்கள் நினைக்கும் கட்சிகள் லிஸ்டில் பிஜேபிக்கு கண்டிப்பாக தமிழகத்தில் இடமில்லை என்பதே உண்மை... இதைச் சொன்னாலும் இங்கே என்னை வசை பாட ஒரு கூட்டம் காத்திருக்கும்... பிஜேபி இருக்கும் கூட்டணி தமிழகத்தில் தோற்கும்... மக்கள் அளிக்கும் தீர்ப்பு வரும் வரை இங்கே கதறும் சங்கிகள் அதனை உணரப் போவதில்லை... கதறுங்கள்... ஆனால் டெசிபல் சத்தம் அதிகம் ஆகாமல் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் கதறுங்கள்...


சந்திரசேகரன்,துறையூர்
மார் 08, 2025 22:23

ஏலே அணில் குஞ்சு நீ எந்த கட்சியையும் சாராதவன் என நம்பிட்டோம் ஓரமா போய் அங்கிட்டு வெளாடு ஜோசப் விஜய்க்கு முட்டுக் கொடுத்து உன் விசுவாசத்தை காட்டு அதை விட்டு சுய தம்பட்டம் என்ற பெயரில் உன் அறுவை கருத்தை பதிவிட்டு எங்கள் பொறுமையை சோதிக்காதே


vivek
மார் 08, 2025 22:35

நம்ம phd படிச்சா ஓவியர் சொன்னா கரெக்டா இருக்கும்..P புளுகாண்டி...H head..D..திமுக


போவியா விஜய்
மார் 08, 2025 22:42

ஓவியர் நீ ஊளை இடும் சத்தம் தான் அதிகம் கேட்கிறது........நவ துவாரங்களை கட்டுப்படுத்தும் ஐய்யா


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 09, 2025 00:01

சங்கிகள் என்ற சொல்லை பயன்படுத்தும்போதே நீங்கள் எந்த கட்சி சார்பாக கருத்து எழுதுகிரீர்கள் என்பது தெரிகிறது. பாஜகவினர் என்று எழுத மறுப்பதே திமுகவின் அடையாளம்தானே


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 09, 2025 00:01

சங்கிகள் என்ற சொல்லை பயன்படுத்தும்போதே நீங்கள் எந்த கட்சி சார்பாக கருத்து எழுதுகிரீர்கள் என்பது தெரிகிறது. பாஜகவினர் என்று எழுத மறுப்பதே திமுகவின் அடையாளம்தானே


பேசும் தமிழன்
மார் 09, 2025 09:24

த வெ க கட்சிக்கு யாரெல்லாம் ஓட்டு போடுகிறார்கள் என்பதை பார்க்க தானே போகிறம்..... கூட்டணி சேராமல் தனியாக நின்றால்... அவர்கள் நோட்டாவுடன் தான் போட்டி போட வேண்டும்.


பேசும் தமிழன்
மார் 09, 2025 09:25

நீங்கள் ஒரு.... 200 ரூபாய் நடுநிலை என்பது மக்களுக்கு தெரியும்... அதனால் காதில் பூ சுற்ற வேண்டாம்.


Anonymous
மார் 09, 2025 14:01

இவ்வளோ நீளமா கதறியது இங்கே நீங்க மட்டும் தான், கொஞ்சம் நின்னு நிதானமா பாருங்க, புரியும்.


SIVA
மார் 08, 2025 21:00

அதிமுக பிஜேபி கூட்டணி உறுதி , விஜய் தனியாக நின்றால் மட்டுமே மதிப்பு , யாருடனாவது கூட்டணி வைத்தால் கமல்காசன் கதி தான் , அதிமுக தேமூதிக கூட்டணி அமைந்த போது ஜெயலலிதா , கேப்டன் இருவரும் கூட்டணி ஒப்பந்தம் போடும் போது மட்டுமே நேரில் சந்தித்து கொண்டார்கள் , தொகுதி பிரச்னை வந்தது , இருவரும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய வில்லை , திமுக பலமான கூட்டணி மக்கள் அதிமுக கூட்டணியை ஆதரித்தார்கள் , மக்கள் அன்று அந்த கூட்டணி தேவை என்று கருதினார்கள் , இன்றும் அதே நிலை தான் , திமுக ஆட்சி முடிந்த பின் இத ஆர் எஸ் பாரதி மாடல் மீடியாக்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை பார்க்க வேண்டும் , மக்களுக்கு திமுக மீது உள்ள கோபத்தை விட இந்த ஆர் எஸ் பாரதி மாடல் மீடியாக்கள் மீது தான் கோபம் அதிகம் , அதிமுக பிஜேபி கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்றால் திமுக கூட்டணியை திட்டுவதை விட அதிகமாக இந்த ஆர் எஸ் பாரதி மாடல் மீடியாக்களை திட்டுங்கள் ....


Narayanan Muthu
மார் 08, 2025 19:44

நாளொரு பேச்சு பொழுதொரு நிலைப்பாடு. எங்கூர்ல இதுக்கு பேரு வெளங்காதவன்


ராஜாராம்,நத்தம்
மார் 08, 2025 20:35

வாழ்நாள் அறிவாலய கொத்தடிமை எங்கூர்ல இவிங்களுக்கு எதுக்கும் லாயக்கில்லாத வீணாப் போனவன்னு பேரு...


Laddoo
மார் 08, 2025 21:25

200ரூவாவுக்கு இவ்ளோ கூவாதே வீட்ல டாஸ்மாக் ஆளுங்களா? அப்ப சரி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை