உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்கிரஸ் வீழ்வதில் எனக்கு பெருமையே; அது ஒரு கம்பெனி: சீமான் கடும் தாக்கு

காங்கிரஸ் வீழ்வதில் எனக்கு பெருமையே; அது ஒரு கம்பெனி: சீமான் கடும் தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: காங்கிரஸ் வீழ்வதில் எனக்கு பெருமையே, அது இப்போது ஒரு கம்பெனியாகவே உள்ளது என சீமான் கடுமையாக சாடி உள்ளார்.திருச்சியில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியை அடியோடு ஒழிக்க வேண்டும். காங்கிரஸ் தோல்வியடைவது எனக்கு மகிழ்ச்சிதான். காங்கிரஸ் வீழ்வதில் எனக்கு பெருமையே, காங்கிரசை வீழ்த்துவதற்கு தான் நான் களத்திற்கு வந்தேன். தமிழகத்தில் காமராஜர் மறைவுக்குப் பின்பு காங்கிரஸ் கட்சி அழிந்துவிட்டது. தற்போது இருப்பது ஒரு கம்பெனி தான். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=urr8gfc9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தோள்களில்...!

எனக்கு இருக்குற வலியும், வன்மமும் உலகத்துல யாருகிட்டையும் சொல்ல முடியாது. திராவிட கட்சிகளின் தோள்களில் ஏறிக்கொண்டுதான் காங்கிரசும், பாஜவும் வசதியாகப் பயணம் செய்கின்றன. தமிழகத்தில் காங்கிரசுக்கும், பாஜவுக்கும் என்ன வேலை இருக்கிறது? தூய்மைப் பணியை தனியார் முதலாளிகளுக்கு ஒப்பந்தம் விட்டுவிட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தர வேலை தராமல் 3 வேலை உணவுக் கொடுப்பது, அவர்களை சமாதானப்படுத்தத்தான். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sun
நவ 15, 2025 22:42

இன்று இப்படிப் பேசுவார் !நாளை இந்திரா எனது பாட்டி ,நேரு எனது பாட்டன் என்பார். இந்த நாட்டில் காங்கிரஸ் வாழாமல் வேறு எந்தக் கட்சி வாழ வேண்டும்? என்பார்.


புதிய வீடியோ