உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., எதிர்காலம் நான் தான்; சிங்கத்தின் கால்கள் பழுதுபடாது என்கிறார் ராமதாஸ்!

பா.ம.க., எதிர்காலம் நான் தான்; சிங்கத்தின் கால்கள் பழுதுபடாது என்கிறார் ராமதாஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''பா.ம.க., எதிர்காலம் நான் தான். சிங்கத்தின் கால்கள் பழுதுபடாது'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தில் மக்களைப் பாதிக்கும் எந்த சிக்கலாக இருந்தாலும் அதற்கான முதல் எதிர்க்குரல் பா.ம.க.விடம் இருந்து தான் ஒலிக்கும். அப்படியான எதிர்க்குரலின் வேகத்தால், ஆட்சியாளர்களால் திரும்பப்பெறப்பட்ட மக்கள் விரோத செயல்பாடுகள், அரசாணைகள், திட்டங்கள் ஏராளம். மக்கள் நலன் சார்ந்த எந்தவொரு விஷயத்துக்கும் யாரையும் எப்போதும் எதிர்க்கும் இடத்தில் பா.ம.க. நிற்கும் என்பதை என்னுடைய இறுதி மூச்சுவரை உறுதியாக கடைபிடிப்பேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tu9bx16b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இனி நமக்கெல்லாம் பொற்காலம்தான். மதுவுக்கும், புகையிலைக்கும் எதிராக நாம் முன்னெடுத்த போராட்டங்கள் லட்சத்தை தாண்டும். என்னைப் போன்று ஆரோக்கியமாக வாழுங்கள், உழைப்பை ஒருபோதும் கை விட்டு விடாதீர்கள், உங்களின் உற்சாகக்குரலே என்னை புதுப்பிக்கிறது; என்னை உற்சாகப் படுத்துகிறது. இன்னும் போராடச் சொல்கிறது.தெம்பும், தினவும் பா.ம,க., சொந்தங்களின் அரவணைப்புதான் எனக்கு கொடுக்கிறது.பா.ம.க., சொந்தங்களின் நெடுநாள் கனவை நிறைவேற்ற எனக்குள் புதுரத்தம் பாயத் தொடங்கி இருக்கிறது. அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, ஐயப்பாடோ பா.ம.க.,வினருக்கு தேவை இல்லை. உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன். போர்க்குணமுள்ள சிங்கத்தின் கால்களும் பழுதுபடாது. அதன் சீற்றமும் குறையாது. மக்களுக்காக கொடுக்கும் அதன் கர்ஜனையும் மாறாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rajaiah Samuel Muthiahraj
ஜூலை 12, 2025 19:20

தயவு செய்து தந்தையின் சிந்தையும் மகனின் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் இல்லத்தாரின் உள்ளங்களுக்கு மட்டுமல்ல தொண்டர்களுக்கும் மன அமைதி, சமாதானம், சந்தோசம், புத்தெழுச்சி ஏற்படும். நெடுங்காலம் கட்சி வளர்ச்சிக்காக கட்சி வளர்ச்சிக்காக வாழ்வினையே அர்ப்பணித்து அணிகள் மாறாமல் அப்படியே நிலைத்து நின்று வேர்வையையும் நேரத்தையும் தங்கள் பணத்தையும் இழந்திருக்கும் தொண்டர்களுக்காகவாவது ஒருங்கிணைந்து நிற்க வேண்டும் வெளிப்படையாக ஒருவரையொருவர் கடிந்துகொள்ளாது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையே வீட்டிற்கும் நல்லது ஓட்டிற்கும் நல்லது தமிழ் நாட்டிற்கும் நல்லது தேசத்திற்கும் நல்லது மண்ணில் கட்சி நிலைத்து நிற்க ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.


Natchimuthu Chithiraisamy
ஜூலை 12, 2025 17:37

எவனோ ஒரு சொந்தக்காரன் நீ சாகும்போது தலைவராக சாகவேண்டும் நீ ஆரம்பித்த கட்சி. அப்போ அன்புமணி குட்டி என்கிற பேச்சை கேட்டுக்கொண்டு இருக்கிறது கிழடு


Jack
ஜூலை 12, 2025 15:46

ஏதாவது புது மாத்திரை சாப்பிடறார் போல இருக்கே ... ஜம்முவுக்கு அருகே வைஷ்னவி தேவி கோவிலுக்கு போகும் வழியில் ஏகப்பட்ட வானரங்கள் அந்த வழியே செல்லும் பக்தர்கள் தரும் வாழைப்பழம் ஆப்பிள் மாம்பழம் சாப்பிட்டு மரம் ஏறுவது கரணம் போடுவது எல்லாம் மறந்து சோம்பேறிகளாக உக்காந்து உடம்பை வளர்க்கின்றன...


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 12, 2025 15:31

பாமகவின் எதிர்காலம் நான் என்று கூறியிருப்பதின் மூலம் உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார். பாமகவிற்கு வயதாகிவிட்டது. பாமக வயது முதிர்வின் காரணமாக கடைசி அத்தியாயம் நோக்கி நகர்ந்து கொண்டு உள்ளது. வெட்டி சாலையில் மரங்களை சாய்க்கும் போது இந்த உணர்வு இருந்திருக்க வேண்டும்.


veerabathran
ஜூலை 12, 2025 15:26

உச்ச பச்ச அகங்காரம் வந்துவிட்டது என்றால் அழிவ நிச்சயம் என்று ஆகிவிடும்


Oviya Vijay
ஜூலை 12, 2025 15:26

பாமக எனும் ஒரு கட்சி இரண்டாக உடையப்போகிறது என்பதெல்லாம் சில மாதங்கள் முன் வரை யாரும் கற்பனை கூட செய்து பார்த்திராத ஒரு விஷயம்... இது முழுக்க முழுக்க தந்தை மகன் இடையேயான ஈகோ மோதலேயன்றி வெளி நபர்களுக்கு சம்பந்தம் இல்லை... ஆனால் இதனால் மிகப்பெரிய ஆதாயம் யாருக்கெனில் அது ஆளுங்கட்சியான திமுக கூட்டணிக்குத் தான். ஏனெனில் எதிர்க்கூட்டணியில் ஒரு கட்சி கூட உருப்படியாக இல்லை. அனைத்தும் ஓட்டை உடைசல்கள்... அதை ஒட்டவைத்துக் கொண்டு வாய்ஜாலம் பேசிக்கொண்டு திரிகின்றனர்... அண்ணாமலைக்கே தெரியும்... தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தோல்வியடையப் போகிறதென்று... ஆனால் கட்சியில் உள்ளிருந்து கொண்டே அதை வெளிப்படையாகப் பொதுவெளியில் அவரால் பேச இயலவில்லை... லவ்பெல்லுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை என்னவென்றால் அதிமுக பாஜக கூட்டணி தமிழகத்தில் ஜெயிக்கும் என்று... ஆனால் ராமதாஸ்க்கு தன் முதிர்ந்த அரசியல் அனுபவத்தால் கண்கூடாகத் தெரிகிறது அதிமுக பாஜக அதல பாதாளம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று. அதில் மாட்டிக்கொண்டு விடவேண்டாம் என லவ்பெல்லுக்கு எச்சரிக்கை விடுத்தும் லவ்பெல் அதனைப் புரிந்து கொள்ளவில்லை... ஆகையால் தேர்தல் முடிந்தபின் இன்னமும் பாமக கலகலத்துப் போகும்...


அப்பாவி
ஜூலை 12, 2025 15:21

எந்த சிங்கமும் ஒரு நாள் ரிடையர் ஆகணும்


Anand
ஜூலை 12, 2025 15:15

ஆனால் நீ ஒரு பச்சோந்தி...


SUBBU,MADURAI
ஜூலை 12, 2025 15:08

வயதான காலத்தில் உடம்பில் இரத்தம் சுண்டி மண்டை மண்ணுக்குள் போகும் தறுவாயில் புது இரத்தம் எப்படி பாயும்? மருத்துவர் ஐயா எப்படி என்று விளக்குவாரா!


SUBBU,MADURAI
ஜூலை 12, 2025 15:03

சிங்கத்தின் கால்கள் பழுது படாது என்பது சரிதான். ஆனால் இவர் சிங்கமா அல்லது குள்ள நரியா என்பதுதான் கேள்வி?