வாசகர்கள் கருத்துகள் ( 1 )
படிக்காமல் ..இருந்தால் நாட்டை ஆளலாம் ...திருந்துங்கள் மக்களே ...
சென்னை: ''நன்றாக படித்த என் தாய் மாமா டாக்டர் ஆன நிலையில், சரியாக படிக்காததால், நான் துணை முதல்வர் ஆனேன்,'' என துணை முதல்வர் உதயநிதி கூறினார். சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் கவுன்சில் சார்பில், நுாற்றாண்டு துவக்க விழா நேற்று நடந்தது. இதில், 2025ம் ஆண்டுக்கான சிறந்த செவிலியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை, 22 செவிலியர்களுக்கு, துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். பின், அவர் பேசியதாவது:
மருத்துவ ஊரக நல சேவைகள் இயக்குநரும், இந்த அமைப்பின் தலைவருமான ராஜமூர்த்தியை பலருக்கும் தெரியும். ஆனால், அவர் என் சொந்த தாய் மாமா என்பது பலருக்கும் தெரியாது. அவரும், நானும் கோபாலபுரம் வீட்டில் ஒரே அறையில் தான் தங்கி இருந்தோம்; ஒன்றாக படித்தோம். அவர் நன்றாக படித்ததால் டாக்டராகி விட்டார். நான் சரியாக படிக்காததால், துணை முதல்வர் ஆகி விட்டேன். அதற்கு மிக மிக முக்கிய காரணம் ராஜமூர்த்தி தான். நோய்கள் பரவாமல் இருக்க, தடுப்பூசிகள் மிக மிக அவசியம். தடுப்பூசி போடச் சொல்லி, பின்னாலேயே சென்று விரட்டிய காலம் இருந்தது. தற்போது மக்களுக்கு புரிய வைத்து, தடுப்பூசி போட வைப்பதில் செவிலியர் களுக்கு முக்கிய பங்கு உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.
படிக்காமல் ..இருந்தால் நாட்டை ஆளலாம் ...திருந்துங்கள் மக்களே ...