உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெறும் முதலீட்டுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வெறும் முதலீட்டுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வெறும் முதலீட்டுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை. ஜெர்மனி- தமிழகம் ஆகிய 2 பொருளாதாரங்களுக்கு இடையே பாலம் அமைக்க வந்திருக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.ஜெர்மனியில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகம் தான் இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலம். பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழகம். அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ள மாநிலம் தமிழகம். உலகின் முன்னணி தொழில் வல்லரசுகளில் ஒன்றாக ஜெர்மனி விளங்குகிறது. நவீன உற்பத்தி, துல்லிய பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மோட்டார் வாகன தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஜெர்மனி வலிமையோடு உள்ளது. ஐரோப்பியாவின் முதுகெலும்பாக ஜெர்மனி உள்ளது. ஜெர்மனிக்கு முதலீடுகளை ஈர்க்க வந்ததற்காக பெருமை அடைகிறேன். ஜெர்மனியின் பண்பாடு, தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவை என்னை வெகுவாக ஈர்த்துள்ளது. உலகின் முன்னணி தொழில் வல்லரசுகளில் ஒன்றாக ஜெர்மனி விளங்குகிறது. முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள், முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள், 54 லட்சம் எம்எஸ்எம்இ., நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன.60க்கும் மேற்பட்ட ஜெர்மனி நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை நிறுவ தமிழகத்தை தேர்ந்தெடுத்து உள்ளன. ஜெர்மனி, தமிழகம் இடையே பொருளாதாரத்தில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஜெர்மனி எப்படி ஐரோப்பிய யூனியனின் முக்கியத் தொழில் துறை நாடாக இருக்கிறதோ, அதேபோல இந்திய ஒன்றியத்தில் தொழில்துறையின் இதயத் துடிப்பாக தமிழகம் இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தமிழகம் தான் இந்தியாவின் ஜெர்மனி.

பிஸ்னஸ்

வெறும் முதலீட்டுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை. ஜெர்மனி- தமிழகம் ஆகிய 2 பொருளாதாரங்களுக்கு இடையே பாலம் அமைக்க வந்திருக்கிறேன். தமிழகத்துக்கு வரும் போது நீங்கள் வியாபாரத்திற்கான சண்டையாக மட்டும் பார்க்க மாட்டீங்க. உங்களுடன் இருந்து உங்கள் வெற்றியை கொண்டாடுகிற பங்குதாரர்களாக பார்ப்பீர்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

ரூ.7,020 கோடியில் ஒப்பந்தங்கள்

முன்னதாக, சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜெர்மனி வருகையின் போது தமிழகத்திற்கு மொத்தம் ரூ.7,020 கோடி மதிப்பிலான 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன; இதனால் 15,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் ஜெர்மனி முதலீட்டாளர் மாநாட்டில், ரூ. 3,819 கோடி மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அவை 9,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும். உலகளாவிய தலைவர்கள் தங்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தமிழகத்தை தேர்ந்து எடுத்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 104 )

M Ramachandran
செப் 15, 2025 11:45

இதனுடைய படிக்கும் அழகு காமடி பீசுன்னு தீர்மான பண்ணியிருப்பாங்க


Vasan
செப் 13, 2025 18:41

Yes, it was a family tour. Sabarisan was also there. You already TOLDED.


Parthasarathy Badrinarayanan
செப் 09, 2025 17:32

ஆம். இன்பச்சுற்றுலா


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 07, 2025 17:46

ஒருவேளை 4 வருஷம் சம்பாதித்த பணத்தை பத்திரமாக டெபாசிட் செய்ய குடும்பத்துடன் போயிருக்கலாம்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 07, 2025 17:30

இந்தியா என்று எங்காவது இவர் உச்சரித்தாரா? அல்லது அங்கு போய் தமிழ்நாடு என்று பில்டப் குடுத்து பிரிவினைவாததிற்கு தூபம் போட்டாரா? திராவிடம் என்றாலே இந்திய விரோத செயல்களில் ஈடுபடுவது வழக்கம்.


V.Mohan
செப் 03, 2025 11:14

எனக்குத் தெரிந்த வரையில் எந்த அரசியலவாதியும் தங்களுடைய ஆட்சி முடிய இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் தொழில் துவங்க வாங்க என்று வெளிநாட்டவரை கூப்பிடமாட்டாங்க. இவர் ஸ்டாலின் கூப்பிடுகிறார் என்றால்...உண்மையாக வரும் எண்ணம் உள்ளவர்கள் என்ன நினைப்பார்கள்?? ஒரு வேளை இவர் ஆட்சி இல்லைங்கும் போது, நாம் என்ன செய்வது என்று யோசிக்க மாட்டார்களா? இவர் தருவதாக சொல்லும் உதவிகள் என்னாகும்? இவருக்கு , தமது ஆட்சி மறுபடி ஏற்படும் என்ற நம்பிக்கை கொஞ்சம் ஓவராக உள்ளது. புரிகிறது. சில தொழிலகங்களில் மைக்ரோசாப்ட் பவர் பாயிண்ட் பிரசண்டேஷன் எல்லாம் சூப்பராக செய்து வைத்து வருலவர்களை கவர் பண்ணுவார்கள். அது போல இருக்கிறது இவரது செயல் பாவம் மத்தனங்க பண்ற டகாலடிக்கெல்லாம் இவர் முட்டு குடுக்க வேண்டி உள்ளது.


Srinivasan Narayanasamy
செப் 03, 2025 03:20

இங்க உள்ள ஊடகத்தில் செய்திதான் சொன்னார்கள் . அவர் பேசியதை காட்டவே இல்ல .. அங்க போய் தமிழ்ல பேசியிருப்பாரோ .... கர்மம் கர்மம்


Matt P
செப் 09, 2025 04:50

எங்கும் போயும் தமிழில் பேசலாம் அதில் தவறென்ன? வெளிநாட்டில் இருந்து இங்கு முதலீடு செய்பவர்களே தமிழர்கள் ஆக தான் இருக்கும். அல்லது கூட்டத்தில் கலந்து கொள்பவர்களே ஜெர்மன் கம்பெனிகளின் தமிழ் பிரதிநிதிகளாக தான் இருக்கும். நமக்கு எந்த மொழி நல்லா தெரியுமோ அதில் பேசுவது தான் சரி. இந்த தொழில் நுட்ப யுகத்தில் எல்லா மொழிகளும் வளர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மொழி பெயர்க்கவும் எங்கும் ஆள்களுக்கும், தானே மொழி பெயர்க்கும் கருவிகளுக்கு பஞ்சம் இருப்பதாக தெரியவில்லை.


Sundaran
செப் 02, 2025 22:39

குடும்பத்துடன்ஜாலி சுற்றுலாவுக்கும் தான் காசு யாருது என்று விளக்கம் அளிக்க வேண்டும் .


Venugopal S
செப் 02, 2025 20:54

ஜெர்மனியைப் பற்றியும் ஒன்றும் தெரியாமல் தமிழ்நாட்டைப் பற்றியும் ஒன்றும் தெரியாமல் கருத்துக்கள் கூற சங்கிகளால் மட்டுமே முடியும்! ஜெர்மனியின் முன்னணி நிறுவனங்களான பி எம் டபிள்யூ பென்ஸ் (பாரத் பென்ஸ்) போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஏற்கனவே தொழில் தொடங்கியுள்ளனர்!


Barakat Ali
செப் 03, 2025 21:45

ஊ ஊ பீயி ஸ் நிலைமை பரிதாபம் ........ இன்று வந்த செய்தி காமெடியின் உச்சம் ..... விரிவாக்கம் என்பது முழுக்க முழுக்க நிறுவனத்தின் முடிவு ..... அதிலும் மன்னரின் தலையீடு இருப்பது போலக்காட்டுவது செம்ம காமெடி ....


Matt P
செப் 09, 2025 04:53

ஏற்கெனவே இருக்கும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க ஜேர்மன் வரை போயிட்டு அப்படியே பொழுது போக்க போயிருப்பாரோ. அவன் அவன் பொழுது போக்க தமிழ் மக்களின் பணம் இளக்காரம் ஆயி விட்டது


Kulandai kannan
செப் 02, 2025 19:44

தமிழிலிருந்து பிறந்தது ஜெர்மன் மொழி என்று ஒருவர் உளறுவார்.


முக்கிய வீடியோ