உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாகேந்திரன் எங்க ஜோசியம் பார்த்தாருன்னு தெரியலியே: காங்.,

நாகேந்திரன் எங்க ஜோசியம் பார்த்தாருன்னு தெரியலியே: காங்.,

சென்னை:''காங்கிரசும், வி.சி.,யும், தி.மு.க.,விடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதாக சொல்லும் நயினார் நாகேந்திரன், எங்கே போய் ஜோதிடம் பார்த்தார் என தெரியவில்லை,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.மறைந்த காங்கிரஸ் அமைச்சர் கக்கன் 118வது பிறந்த நாளை ஒட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில், அவரது படத்திற்கு நேற்று, செல்வப்பெருந்தகை மலர் துாவி மரியாதை செலுத்தினார். பின், செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி:தி.மு.க., கூட்டணியில், தமிழக காங்கிரசும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதாக, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சொல்கிறார். அவர் எந்த ஜோசியரிடம் சென்று, ஜோதிடம் பார்த்து தெரிந்து கொண்டார் என, தெரியவில்லை. எங்கள் டில்லி தலைமை என்ன வழிகாட்டுகிறதோ, அதன்படி தான் தமிழக காங்கிரசின் முடிவும், நடைமுறையும் இருக்கும். மற்ற கட்சிகள் சொல்வது பற்றி, எங்களுக்கு ஆட்சேபனை இல்லை; அது பற்றி கருத்து சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 19, 2025 07:05

அரியலூர்: அனைத்து கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்ப்பது வாடிக்கை தான். தி.மு .க., கூட்டணியில் நாங்களும் அதிக தொகுதிகளை கோருவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.இது பத்திரிகை செய்தி


சமீபத்திய செய்தி