உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சி நிர்வாகிகளை நீக்க எனக்கே அதிகாரம்; ராமதாஸ் திட்டவட்டம்

கட்சி நிர்வாகிகளை நீக்க எனக்கே அதிகாரம்; ராமதாஸ் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: ''பா.ம.க., நிர்வாகிகளை நீக்க எனக்கே அதிகாரம் உள்ளது; கட்சியிலிருந்து அருளை அன்புமணி நீக்க முடியாது'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: பா.ம.க., நிர்வாகிகளை நீக்க எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எம்.எல்.ஏ., அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. ஜி.கே.மணி மூலம் கடிதம் கொடுத்த பிறகு தான் நீக்க முடியும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l2bv9u8f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கட்சியில் இருந்து யாரையும் நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. என் மனம் வேதனைப்படும் அளவு செய்கின்றனர். எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு, நான் கட்சியை வழி நடத்தி கொண்டு இருக்கிறேன். கட்சியின் இணை செயலாளர் பொறுப்பில் அருள் தொடர்வார்.பூம்புகாரில் ஆகஸ்ட் 10ம் தேதி பா.ம.க., மகளிர் மாநாடு நடத்துகிறோம். அ.தி.மு.க., தி.மு.க., உடன் பா.ம.க., கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என பரவும் தகவல் வதந்தி. பா.ம.க., செயற்குழு, பொதுக்குழு கருத்துகளை கேட்ட பிறகு தான் கூட்டணி குறித்து பதில் சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

நோ பதில்!

அன்புமணி குறித்து கேள்வி எழுப்பிய நிருபர்களிடம், '' அன்புமணி குறித்த கேள்விகளை தவிர்க்க வேண்டும். அந்த கேள்விளுக்கு என்னிடம் பதில் இல்லை'' என ராமதாஸ் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

பேசும் தமிழன்
ஜூலை 03, 2025 19:18

கல்யாண வீடா இருந்தாலும்..... எழவு வீடா இருந்தாலும்.... மாலையும் மரியாதையும்.... எனக்கு மட்டும் தான்..... என்ன நடிகர் நெப்போலியன் பேசிய வசனம் ஞாபகம் வருகிறதா ???


saravan
ஜூலை 03, 2025 16:26

பைத்தியம்


கல்யாணராமன் சு.
ஜூலை 03, 2025 13:44

இப்பல்லாம் வியாழக்கிழமை வந்தாலே பயமா இருக்கு.. தவறாம மருத்துவரய்யாவோட அறிக்கை வந்துடுது.. ஒரு மனுஷன் எவ்வளவு கஷ்டத்தைத்தான் அனுபவிக்கணும் ??


ஈஸ்வரன்
ஜூலை 03, 2025 13:37

ரெண்டு பேரும் ஓரமாய் போய் விளையாடுங்க


Ramesh Sargam
ஜூலை 03, 2025 13:08

பாவம் இவரு தினம் தினம் புலம்ப ஆரம்பித்துவிட்டார். பெத்த மகன் சரியில்லையா? அல்லது இவரின் தலைக்கனமா?


Rajarajan
ஜூலை 03, 2025 12:54

போகிறபோக்கில், அப்பாவும், மகனும், தங்களையே கட்சியை விட்டு நீக்கிப்பாங்க பாருங்க.


shunmugham
ஜூலை 03, 2025 12:12

ராமதாஸ் ஐயா, நீங்கள் ஒருவர் மட்டுமே போதும் பா. ம. க வை அழிப்பதற்க்கு. ஏன் இத்தனை வன்மம் மகன் மீது மற்றும் ஏன் உங்களுக்கு பதவி ஆசை. வயதாகிய நீங்கள் இளைஞ்ஞர்களுக்கு வழிவிடுங்கள்.


Anbuselvan
ஜூலை 03, 2025 12:01

சட்டம் வேறு நடைமுறை வேறு என்பது எல்லோருக்கும் தெரியும். கோர்ட் கேஸ் னு போனா சட்டம்தான் செல்லும் நடைமுறை செல்லாது. சட்டப்படி பாமக ஆவணங்களின் படி அதன் பொதுக் குழுவால் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவருக்கே அதிகாரம் உண்டு. ஆகையால் அன்புமணி அவர்களுக்குத்தான் இப்போதைக்கு சட்ட விதிமுறைகள் படி அதிகாரம் உள்ளது போல் தோன்றுகிறது


saravan
ஜூலை 03, 2025 11:56

அப்பா நல்ல தலைவனா தைரியம் ருந்தா அன்புமணியை நீக்கு இளைஞர் பமாக உருவாகட்டும்.. இளைஞர்கள் நாங்கள் ஒட்டு மட்டும் தான் போடணுமா என்ன பேசுகிறோம் என்றே தெரியவில்லை இந்த வயசில் தலைவர்


Oviya Vijay
ஜூலை 03, 2025 11:49

உங்களுக்குத் தான் அதிகாரம் இருக்குன்னா பேசாம செயல் தலைவர் பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் லவ்பெல்லை நீக்குகிறேன் அப்படின்னு அறிவிச்சுத் தொலைஞ்சா என்ன... ரெண்டு பேரும் என்ன கேமா விளையாடுறீங்க... தமிழ்நாட்டு மக்களைப் பார்த்தா என்ன முட்டாளுங்க மாதிரி தெரியுதா.. உங்க வீட்டு சண்டைய வீட்டுல வெச்சுக்கோங்கய்யா... மீடியாவ மையமா வெச்சு சின்னப் புள்ளத் தனமா விளையாடிக்கிட்டு இருக்கீங்க...


புதிய வீடியோ