உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்

எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்

விழுப்புரம்: என்னுடன் இருக்கும் நிர்வாகிகளுக்கு மட்டுமே எம்.எல்.ஏ., சீட்; பா.ம.க.,வில் எனக்கே அதிகாரம் உள்ளது என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: இங்கே வந்து இருக்கும் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் தான் தேர்தலில் நிற்க போகிறவர்கள். இவர்களை தான் நான் தேர்ந்து எடுப்பேன். இவர்கள் தான் எதிர்கால சட்டசபை உறுப்பினர்கள். ஏனென்றால் எனக்கு எல்லா அதிகாரமும் உண்டு. அதனால் தான் நான் இந்த கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்று, நல்லவர்களை, வல்லவர்களை சட்டசபை உறுப்பினராக ஆக்குவேன் என்று இந்த நேரத்தில் உங்கள் மூலம் சொல்ல விரும்புகிறேன். என்னை சந்தித்து கட்சியில் பொறுப்பு வாங்கிய நிர்வாகிகளே தேர்தலில் போட்டியிடுவார்கள். https://www.youtube.com/embed/cXBjfWbI0L0தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. சட்டசபை தேர்தலில் நல்ல கூட்டணி, வித்தியாசமான கூட்டணி, வெற்றி பெறும் கூட்டணி அமைக்கப்படும். முருக பக்தர்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா., அண்ணாதுரையை இழிவுபடுத்தியது தவறு. யாரையும் இழிவுபடுத்தக்கூடாது. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

புரொடஸ்டர்
ஜூன் 26, 2025 09:08

வயோதிக முதுமையில் நீயே ராஜா நீயே மந்திரி நீயே தளபதி என பாமகவை சிதைப்பது உன் மருத்துவ அறிவுக்கு புலப்படவில்லையா ராமதாஸ்?


Bhaskaran
ஜூன் 26, 2025 06:41

இந்த மரம் வெட்டி தாத்தாவை யாரும் சேர்க்க கூடாது


Bhaskaran
ஜூன் 26, 2025 06:05

மாம்பழத்தாத்தா கூட யாரும் கூட்டணி வைக்க கூடாது


M Ramachandran
ஜூன் 25, 2025 22:47

அரசு மரம் என்று நினைத்தீரோ வெட்டி சாய்க்க. கடைசிகாலத்தில்மருத்துவர் என்ற பெயர் போய் மரம் வெட்டி என்ற பெயருடன் இருக்குறீங்க.


M Ramachandran
ஜூன் 25, 2025 22:45

அதிகாரமில்லாமலே மரங்களை வெட்டி சாய்த்தீர்களே அவ்வளவு வீரம் மற்றும் தைரியமானவர் நீங்க.


சிட்டுக்குருவி
ஜூன் 25, 2025 21:29

கோர்ட்டில் சென்று ரெஸ்ட்ரைனிங் ஆர்டர் வாங்கிடுங்க .அப்போதுதான் இது முடிவுக்கு வரும் .


naadodi
ஜூன் 25, 2025 21:05

ஒரு பய உம்மோட இனி கூட்டணி வைக்கமாட்டானுவ


R.MURALIKRISHNAN
ஜூன் 25, 2025 19:59

எனக்கே அதிகாரம்னு சொல்ற நிலையில் கட்சியை வச்சிருக்கீங்க ஐயா. மறந்து போயும் உம் கட்சிகாரன் கூட உமக்கு ஒட்டு போட மாட்டான்யா.


rama adhavan
ஜூன் 25, 2025 18:16

சிவ சேனா கட்சி போல் இக்கட்சி விரைவில் உடையும். ராமதாஸ் பின்னடைவை சந்திப்பார்.


Anand
ஜூன் 25, 2025 16:55

நான் தான் தலைவன், என்னை தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை, எனக்கு நானே குழிதோண்டிக்கொண்டிருக்கிறேன்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை