உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க ஆண்டவரிடம் வேண்டிக் கொள்கிறேன்; ரஜினி தீபாவளி வாழ்த்து

எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க ஆண்டவரிடம் வேண்டிக் கொள்கிறேன்; ரஜினி தீபாவளி வாழ்த்து

சென்னை: எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ஆண்டவரிடம் வேண்டிக் கொள்கிறேன் என நடிகர் ரஜினி தெரிவித்தார்.சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன்பு தீபாவளி, பொங்கல், ரஜினிகாந்த் பிறந்த நாளில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் காலை முதலை திரண்டு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் தீபாவளி வாழ்த்து தெரிவிக்க இன்று ரஜினிகாந்த் வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் ஏராளமானோர் காலை முதலை திறந்தனர். வீட்டிலிருந்து வெளியே வந்து திரண்டு இருந்த ரசிகர்களுக்கு 74வது பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்த் கையசைத்து தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார்.

வேண்டிக்கொள்கிறேன்!

பின்னர் நிருபர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் கூறுகையில், 'அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள். எல்லோரும் சந்தோஷமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ஆண்டவரிடம் வேண்டிக் கொள்கிறேன்' என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நடிகர் கமல் வாழ்த்து

இது குறித்து, நடிகர் கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: ஒளிக்கீற்றால் இருள் கிழிக்கும் முயற்சித் திருநாள்; வெளிச்சத்தால் இணைந்திருக்கும் மகிழ்வுப் பெருநாள். தீதகன்று நன்மைகள் வாழ்வில் பெருக. தீபாவளி எல்லோர்க்கும் நலங்கள் தருக. இவ்வாறு நடிகர் கமல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

மணிமுருகன்
அக் 21, 2025 23:51

தலைவா வணக்கம் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு


மணிமுருகன்
அக் 20, 2025 21:26

தலைவர் ரஜினிகாந்த் அவரது குடும்பத்தினருக்கும் அவரது ரசிக சொந்தங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்


Vasan
அக் 20, 2025 12:01

திரு.கமலஹாசன் போல், அனைவருக்கும் எளிதாக புரியும் படி, தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லுமாறு திரு ரஜினிகாந்த் அவர்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.


sundarsvpr
அக் 20, 2025 11:54

தீபாவளி எல்லோருக்கும் நலங்கள் தருக என்பதை விட ஒளிக்கீற்றால் இருள் கிழிக்க முயற்சி திருநாள் என்பது சரியான வாழ்த்து. முயற்சிக்கு யாரை வேண்டுவது?


vbs manian
அக் 20, 2025 11:29

ஐயய்யோ இவர் தீபாவளி வாழ்த்தா கிள்ளி பார்த்து கொண்டேன்.


vbs manian
அக் 20, 2025 11:27

நீங்கள் ஆரோக்கியமாக இருக்க லைக்கா ரெட் ஜெய்ன்ட் வேண்டிக்கொள்ளும்.


BHARATH
அக் 20, 2025 17:26

ஏற்கனவே ஜோசப் மரண ஆதி எல்லார் கிட்டேயும் வாங்கிட்டு இருக்கான்


முக்கிய வீடியோ