உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்த பேசினேன்: புரிய வேண்டியவர்களுக்குப் புரியும் என்கிறார் செங்கோட்டையன்

அதிமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்த பேசினேன்: புரிய வேண்டியவர்களுக்குப் புரியும் என்கிறார் செங்கோட்டையன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: ''அதிமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்று தான் அன்று மனம் திறந்து பேசினேன்'' என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்டம், கோபியில் நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது: அண்ணா துரையின் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். அண்ணாதுரை பெயரால் அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கினார். ஜெயலலிதா அதனை கட்டிக் காத்து வளர்த்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mn9jl2wt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதிமுக ஒன்றிணையும் விவகாரத்தில் தொண்டர்கள் கருத்தையே நான் பிரதிபலித்தேன்.இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்பது தான். மாற்றான் தோட்டத்திற்கு மனம் உண்டு. மறப்போம் மன்னிப்போம். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்ற நோக்கத்தோடு மனம் திறந்து பேசினேன். எனது பே ச்சுக்கு ஏராளமான வரவேற்பு கிடைத்து உள்ளது.தொண்டர்கள் பொதுமக்கள் கருத்துகளை மனதில் கொண்டு புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எனது கருத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக வலிமை பெறவும், 2026ல் வெற்றி பெறவும் எல்லோரும் உறுதுணையாக பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் வைக்கிறேன். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.''எல்லோரையும் ஒருங்கிணைக்க பத்து நாட்கள் காலக்கெடு வைத்திருக்கிறேன். இல்லை யென்றால் இந்த மனநிலையில் இருப்போரை ஒருங்கிணைப்பேன்'' என 10 நாட்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். பின்னர் அவரிடம் கட்சி பொறுப்புகளை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

RamachandranVenkatachalam. Venkatachalam
செப் 15, 2025 19:14

அவர்கள் சும்மா இருந்தாலே போதும்


Raghav
செப் 15, 2025 19:05

கொடநாடு வழக்கு என்னவாயிற்று. என்ன ரகசியம் தெரிந்தால் சொல்லவும்


Rathna
செப் 15, 2025 17:11

ஜெயலலிதா போன பின் அங்கு பெரிய இடைவெளி உண்டாகி விட்டது. அதை நிரப்ப சரியான நபர் இல்லை. இன்னும் 10 வருடங்களில் வேறு ஒரு நல்ல ஜன நாயக அமைப்பு முன்னால் வருவது தமிழகத்திற்கு நல்லது. இல்லாவிட்டால் பேரரசன், சிற்றரசர்கள், குறுநில, மாவட்ட, வட்ட, குளம் அளவில் கொள்ளை தொடரும்.


SUBRAMANIAN P
செப் 15, 2025 14:13

எடப்பாடிய பார்த்தா எப்படி தெரியுது உனக்கு.. சரி.... எவ்வளவு கோடி சொத்து கொள்ளை அடிச்சிருப்பாய் இத்தனைவருட அரசியல் வாழ்க்கைல.. சொல்ல முடியுமா..


ராமகிருஷ்ணன்
செப் 15, 2025 16:47

மொதல்ல DMK files 1,,2,,3 படி சுருட்டிய 10 லட்சம் கோடிகளுக்கு பதில் சொல்லுங்க


Sun
செப் 15, 2025 13:36

அடக்கி பாக்குறேன் இல்லன்னா? அடங்கிப் போறேன். முதலில் பத்து நாள் அவகாசம் என வீர ஆவேசமாக முழங்க வேண்டியது. கடைசியில் வேண்டுகோள் என பம்ம வேண்டியது.


Vijay D Ratnam
செப் 15, 2025 13:23

எம்ஜிஆர் என்ற மாமனிதன் உருவாக்கிய அதிமுகவில் எந்த தொண்டனும் மன்னார்குடி மாஃபியாவை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஒரு பழைய ட்ரங்க் பெட்டியை தூக்கிக்கிட்டு புருசனுடன் பிழைப்பு தேடி வந்த சசிகலாவிற்கு இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் எப்படி வந்தது என்பது எல்லா அதிமுக தொண்டனுக்கு தெரியும். இரும்பு பெண்மணி என்று சொல்லப்படும் ஜெயலலிதாவையே சிறைக்கு அனுப்ப காரணமாக இருந்த நாசகார குடும்பம் எது என்பது அதிமுக தொண்டர்களுக்கு தெரியும். போயஸ் கார்ட்டனுக்குள் நுழையவே கூடாது என்று ஜெயலலிதாவால் துரத்தியடிக்கப்பட்டவர் இரட்டை இலை சின்னத்தை அபகரிக்க லஞ்சம் கொடுத்து சிக்கி திஹார் ஜெயிலில் அடைபட்டு ஜாமினில் வந்து இருப்பவர் டிடிவி.தினகரன் என்பது அதிமுக தொண்டர்களுக்கு தெரியும். அவர்களை மீண்டும் அதிமுகவிற்குள் திணிக்கவேண்டும் என்று சொல்கிறாரா செங்கோட்டையன். அடுத்து ஓபிஎஸ், தனக்கு தன் மகனுக்கு பதவியும் அதிகாரமும் வேண்டும் என்பதற்காக அதிமுக என்ற கட்சியையே கொண்டு போய் அடமானம் வைக்க துடித்த மனிதர். இன்று பாஜாகவாலும் கழட்டிவிடப்பட்டு தற்போது திமுகவிற்கு கைக்கூலியாக மாறி எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவையே அழிக்க நினைக்கும் கேவலமான உயிரினம். அந்தாளை மீண்டும் அதிமுகவில் திணிக்கவேண்டும் என்கிறாரா செங்கோட்டையன். எம்ஜிஆருக்கு பிறகு அவர் மனைவியை முன்னிறுத்தி அதிமுகவை கைப்பற்ற நினைத்த ஆர்.எம்.வீரப்பன் தோல்வியை தழுவினார். கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார் ஜெ.ஜெயலலிதா. இப்போது ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியை கைப்பற்ற நினைத்த சசிகலா, ஓபிஎஸ் இருவரும் தோல்வியை தழுவியதோடு அரசியல் அனாதைகளாகி போனார்கள். எடப்பாடி கே பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகி இருக்கிறார். சோ, வாயை மூடிக்கொண்டு ஒழுங்கு மரியாதையாக இருந்தால் மரியாதையாவது மிஞ்சும். ஒரு முறை வாய்ச்சவடால் அடித்ததற்கே மாவட்ட செயலாளர் பதவி, கட்சியின் அமைப்பு செயலாளர் பதவி புடுங்கிகிட்டு போய்டிச்சி. இதுக்கு மேல வாயை தொறந்தா அடிப்படை உறுப்பினர் பதவியும் போயிடும். பொறவு அரசியல் அனாதைதான். அண்ணன் எப்படா சாவான், திண்ணை எப்படா காலியாகும்னு ரீபிளேஸ்மென்டுக்கு நூறு பேரு தயாரா இருக்காய்ங்க .


Ram
செப் 15, 2025 13:54

இது யாராலும் மறுக்க முடியாத உண்மயே


Kadaparai Mani
செப் 15, 2025 16:09

விஜய் சார் அருமையான கருத்து


S.L.Narasimman
செப் 15, 2025 16:39

அதிமுக தொண்டனின் எண்ணமும் இதுதான்.


Durai
செப் 15, 2025 18:55

கரேக்ட் ஆன pathivu


Manaimaran
செப் 15, 2025 13:13

எட்டப்பன்


Haja Kuthubdeen
செப் 15, 2025 12:53

பேசி கிழித்தது போதும்...வேலய பாருங்க.


Apposthalan samlin
செப் 15, 2025 12:33

அமித்சர் போய் ஏன் பார்த்தீர்கள்?அது வந்து வந்து என்னத்த சொல்ல ........


திகழ்ஓவியன்
செப் 15, 2025 12:14

தமிழ்நாட்டின் ஷிண்டே KCS, இப்போ REBEL ஐ சேர்த்தால் , அவர்கள் எல்லோரும் சேர்ந்து விட்ட பிறகு எடப்பாடி க்கு ஆப்பு வைக்க மாட்டார்கள் என்று என்ன நிட்சயம், சரி OPS ஐ சேர்க்கணும் அவர் தொடர்ந்த வழக்கு அனைத்தையும் வாபஸ் பெறணும் செய்வாரா, சசிகலா , ACCCUST 2 ஊழலுக்கு சிறையில் இருந்தவர் மக்கள் ஏற்பார்களா , சரி TTV இவர் ஒரு FRAUD ஏற்கனவே FERA FEMA என்று வெளிநாட்டு விவகார வழக்கு , அது Rs 20 டோக்கன் SPECIALIST மக்கள் ஏற்பார்களா இவ்வளவு FLAW இருக்கு அப்புறம் எப்படி எடப்பாடி சேர்ப்பார்


தத்வமசி
செப் 15, 2025 12:26

ப்ராடு என்றெல்லாம் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இன்றைய அரசியலில் பிராடாக இல்லாதவன் பிழைக்கவே முடியாது என்பது தான் நிலைமை. இதில் பெரிய பிராடு யாரு சின்ன பிராடு யாரு என்பது தான் கேள்வி. ஜெயிலுக்கு சென்று வந்தவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? அவர் தான் தண்டனையை அனுபவித்தாயிற்று. பிறகு என்ன ? மக்கள் தீர்மானிக்கட்டும். எடப்பாடி யார் ? தனக்கு போட்டியாக வருபவர்களை வெளியேற்றுவது எந்த விதத்தில் நியாயம் ? டிடிவி பிராடாகவே இருக்கட்டும். அதை மக்கள் தீர்மானிப்பார்கள். ஈரோடு இடைத்தேர்தல் சூப்பராக நடந்தது தானே ? நீங்கள் சொல்லும் பிராடு என்று பார்த்தால் தமிழக அரசியலில் ஒற்றை இலக்கத்தில் தேறுவார்கள். திமுகவிடம் காசு வாங்கியதால் கம்யுனிஸ்டு கூட தேற மாட்டார்கள்.


Durai
செப் 15, 2025 18:57

Yes


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை