உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் மொழியை கற்க விரும்புகிறேன்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தமிழ் மொழியை கற்க விரும்புகிறேன்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஒன்றை புரிந்து, ஆராய்ந்து கற்க வேண்டுமெனில், தாய் மொழி கல்வியே அவசியம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.சென்னை ஐ.ஐ.டி., மற்றும், 'திங்க் இந்தியா' மாணவர் அமைப்பின் சார்பில், சென்னை ஐ.ஐ.டி, வளாகத்தில், இரண்டு நாள், 'தக்ஷிணபதா மாநாடு' நடந்தது. இரண்டாம் நாளான நேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்று பேசியதாவது: நம் நாட்டில் புதிய கண்டுபிடிப்புகளும், தொழில்முனைவோர்களின் திறன்களும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இளைஞர்கள் வேலை தேடுவோராக இல்லாமல், வேலை கொடுப்பவர்களாக மாறி வருகின்றனர். ஏ.ஐ., எனும், செயற்கை நுண்ணறிவை கண்டு உலகமே அச்சப்பட்டாலும், இந்திய இளைஞர்கள் அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர். நாட்டில் தற்போது, 75 சதவீத மக்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். நுாறு சதவீதம் எழுத்தறிவு இல்லாமல், நாம் முன்னேறிய நாடாக மாற முடியாது. அதற்காகவே, அனைவரும் எழுத்தறிவு பெற, புதிய திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு, மொழிகளுக்கு இடையிலான வேறுபாட்டை குறைக்கிறது. அதன் வழியே மொழி பெயர்ப்பு சுலபமாகிறது.நான் தமிழ் மொழியை கற்க விரும்புகிறேன். தமிழ் மொழி சங்க இலக்கியங்களின் ஊற்றாக திகழ்கிறது. ஆனால், ஒன்றை புரிந்து, ஆராய்ந்து கற்க வேண்டுமெனில், தாய் மொழி கல்வியே அவசியம். அதையே, புதிய கல்விக் கொள்கையும் வலியுறுத்துகிறது. நம்நாடு வரலாற்று பெருமைகளை கொண்டது.ஆனால், வடக்கு பகுதிகளில் தொடர் படையெடுப்புகளால், நாகரிகங்களை தக்க வைக்க முடியாமல் போனது. அதேநேரம், தென் மாநில மக்கள், தங்கள் நாகரிகத்தை இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர். நான் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் சென்றேன். 1,000 ஆண்டுகளுக்கு முன்பே, அற்புதமான கட்டட கலை அம்சங்களுடன் கட்டியுள்ளனர். தென்காசிக்கும் சென்றேன்.வடக்கே உள்ள காசிக்கும், தெற்கே உள்ள தென்காசிக்கும் 2,000 கி.மீ., வித்தியாசம். ஆனால், இரண்டும் சிவாலயங்கள் தான். இதுவே, நம் பண்பாடு, ஆன்மீகம் இணைப்பிற்கான சான்று. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

K.Ramakrishnan
செப் 27, 2025 19:23

தாய்மொழியில் கற்றால் எளிதாக புரிய முடியும் என்று நீங்களே சொல்றீங்க.. அதனால் தான் இந்தி வேண்டாம் என்கிறோம் சார். தயவு செய்து நீங்க தமிழை படித்து கொன்று விடாதீர்கள்.


rameshkumar natarajan
செப் 23, 2025 16:38

I am really surprised to see some comments from fellow readers blaming DMK for opposing three language policy. These readers should be enlighten that no political party in tamilnadu except BJP supports three language formula. That being the case, why blame DMK alone. That shown their personal vengance against DMK.


Padmasridharan
செப் 22, 2025 20:59

வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளின் தாய் மொழி எது சாமி. . அரசியல்வாதிகளில் மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் உள்ளனர்..


Venugopal S
செப் 22, 2025 18:00

தமிழ் தெரியாமல் தமிழக அரசியலில் எந்தக் கொம்பனாக இருந்தாலும் வெற்றி பெற முடியாது!


என்றும் இந்தியன்
செப் 22, 2025 15:12

ஸ்டாலினிடம் கற்றுக்கொள்ளுங்கள் ஏன்னா அவரு டாஸ்மாக்கினாட்டின் முதல்வராயிர்றே


Mr Krish Tamilnadu
செப் 22, 2025 14:21

தொழில் சார்ந்த துறையில் உள்ளவர்கள் அனைவருக்கும் தேசிய மொழி என்ற ஒன்று தேவைப்படுகிறது, இது மறுக்க முடியாத உண்மை. லாரி டிரைவராக, ஒரு பயணியாக, சாதாரண வேலை செய்பவர் முதல் ஜ.டி. துறை வரை வேலை சம்பந்தமாக இந்தியா முழுக்க பயணிக்கும் தேவை அல்லது அனுப்பும் தேவை அவர் முதலாளிக்கு ஏற்படும் போது, தேசிய மொழி தேவைப்படுகிறது. பிற மொழி பேசுபவர்கள் மற்ற மாநிலத்தில் வசிக்கும் போது, அவர்களின் தாய் மொழி, மூன்றாம் மொழியாக பயின்றால் நன்றாக இருக்கும் என்ற ஆவா எழுகிறது. மொழி நிலைபாடு அவர் அவர் சொந்த முடிவு.


ShaSha
செப் 22, 2025 13:31

தேர்தல் வருவதால் இதெல்லாம் சகஜமப்பா


T.sthivinayagam
செப் 22, 2025 13:12

மேல் படிப்புக்கு உதவாத ஹிந்தியை பள்ளியில் பாடமா படிக்க வேண்டிய அவசியம் ஏன் தேவை படும் போது அதை எழுத பேச தெரிந்தாலே போதுமே என்று மக்கள் கூறுகின்றனர்


Ramesh Sargam
செப் 22, 2025 13:00

தயவு செய்து எங்கள் முதல்வர் ஸ்தாலின் அப்பாவின் தமிழ் மேடை பேச்சுக்களை மட்டும் கேட்டுவிடாதீர்கள். அப்படி கேட்டால் இப்பொழுது உங்களுக்கு தெரிந்துள்ள ஒரு சில தமிழ் சொற்களும் மறந்துவிடும்.


Abdul Rahim
செப் 22, 2025 12:04

நடிகன் என்று மாறியாச்சு பவுடர் பூசி பூசி கூச்சம் போச்சு ....நான் சத்யராஜ் பட பாடலை சொன்னேனுங்கோவ், சம்ஸ்கிருத வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் 27 ஆயிரம் கோடியும் தமிழுக்கு 270 கோடியும் ஓதுக்கிய மகா நாடக கம்பெனி அல்லவா


புதிய வீடியோ