உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூச்சிருக்கும் வரை நானே பா.ம.க., தலைவர்: ராமதாஸ் பேட்டி

மூச்சிருக்கும் வரை நானே பா.ம.க., தலைவர்: ராமதாஸ் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: ''எனது மூச்சு காற்று இருக்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை கொடுக்க மாட்டேன்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p8akqmbu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது:நேற்று தேர்தலுக்கு பிறகு அன்புமணிக்கு தலைவர் பதவி கொடுக்கிறேன் என்று சொன்னேன். ஆனால், அவரது செயல்பாட்டை பார்க்கும் போது எனது மூச்சு காற்று இருக்கும் வரை அவருக்கு தலைவர் பதவியை கொடுக்க மாட்டேன். நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். மிகவும் வருத்தம்நான் ஒரு நல்ல தந்தையாக, வழிகாட்டியாக இருந்து இருக்கிறேன். ஆனால் மாநாட்டிற்கு பிறகு, நடக்கும் செயல்களை பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால் கொஞ்சம் கூட குறைவு இல்லாமல் எனக்கு கட்சியினர் ஆதரவை வழங்குகின்றனர். நேற்று தேர்தலுக்கு பிறகு தலைவர் பதவி கொடுப்பேன் என்று சொன்னதற்கு 100க்கு 99 சதவீதம் பேர், அப்படி சொல்ல கூடாது என்று சொன்னார்கள். மூச்சு காற்றுகடைசி வரை ஐயா தலைவர் பதவியில் இருக்க வேண்டும் என்று 100க்கு 99 சதவீதம் பேர் சொல்கிறார்கள். மீதமுள்ள 1 சதவீதத்தை குடும்பத்திற்கு விட்ருங்கள். என்னுடைய மூச்சு காற்று நிற்கும் வரை தலைவர் பதவியில் நான் இருப்பேன். அதாவது எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் எந்த பொறுப்பிற்கும், அரசியலுக்கும் வர கூடாது என்று, கட்சி ஆரம்பிக்கும் போது நான் சொன்னேன். ஆனால் அந்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை.ரத்த அழுத்தம் எகிறுகிறதுஅன்புமணியை பார்த்தால் எனக்கு ரத்த அழுத்தம் எகிறுகிறது.கட்சி நிர்வாகிகள் கூறியதால், 35 வயதில் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தேன். உலக அளவில் அன்புமணி விருது வாங்கினார். தற்போது தந்தையிடம் விருது வாங்க முடியாமல் இருக்கிறார். தந்தை, தாயை மதிக்க வேண்டும். அதை சொன்னால் அவருக்கு கோபம் வருகிறது.தந்தை, தாயை மதிக்க வேண்டும். அவர்கள் சொல் படி கேட்க வேண்டும். தந்தை, தாயை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இந்த வார்த்தையை அவரிடம் சொன்னால், நான் மகிழ்ச்சியாக தான் வைத்து இருக்கிறேன் என்று சொல்வார். மைக்கை தூக்கி அடிக்கிறார். பாட்டிலை தூக்கி தாயை அடிக்கிறார். இது மகிழ்ச்சியாக வைத்து இருப்பதா? தூக்க மாத்திரையார் ஆரம்பித்த கட்சி. தனி ஒரு மனிதனாக சுயம்பு என்று சொல்வார்கள். தனி ஒரு மனிதனாக 96 ஆயிரம் கிராமங்களுக்கு இரவு, பகலாக சென்று நான் பட்ட பாடு சொல்லி மாளாது. 100 ஆண்டுகள் இருப்பீங்க என்று சொல்லி விட்டு மார்பிலும், பின்னாடியும் அன்புமணி ஈட்டியால் என்னை குத்திட்டு இருக்கிறார். தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வருவதில்லை. ஒரே தீர்வுஅவரை நினைக்கும் போது எல்லாம் வலி ஏற்படுகிறது. நினைக்காமலும் இருக்க முடியவில்லை. அது பாசத்தால் அல்ல. அது எல்லாம் போய்விட்டது. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று சொன்னால் அது பொய் என சொல்கிறார். ஒரே தீர்வு செயல் தலைவராக இருக்கிறேன். ஐயா சொல்வதை கேட்கிறேன் என்று கூறுவது தான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

சேகர்
ஜூன் 13, 2025 22:19

பாபா படத்தின் வெளியீடு போது நீங்கள் செய்த செயல்களுக்கு பரிகாரம் தேடுங்கள். ரஜினி பீடி குடித்ததால் அடாவடி செய்வோம் என நீங்கள் செய்தது கொடுமை.


M Ramachandran
ஜூன் 13, 2025 20:02

காவேரி ஹாஸ்பிடல் கதையாகி விட போகிறது ஜாக்கிரதை.


Santhakumar Srinivasalu
ஜூன் 13, 2025 19:18

நெடுஞ்சாலையில் வளர்ந்த மரங்களை வெட்டி போட்டு கட்சியை வளர்த்து ஐனங்களை இம்சை செய்த தேசபக்தரின் துரோக பேச்சு இது!


VENKATASUBRAMANIAN
ஜூன் 13, 2025 19:09

இவரே கட்சி யை மூடி விடுவார். இந்த வயதில் இதெல்லாம் தேவையா


தாமரை மலர்கிறது
ஜூன் 13, 2025 18:59

கருணாநிதி மாதிரி சாகும்வரை நாற்காலியை விடமாட்டேன் என்று ராமதாஸ் சொல்கிறார்.


எஸ் எஸ்
ஜூன் 13, 2025 18:46

இந்த விஷயத்தில் முலாயம் சிங், பாரூக் அப்துல்லா இருவரும் பாராட்டுக்குரியவர்கள்


Subburamu Krishnasamy
ஜூன் 13, 2025 18:21

In one sentence, Ramdass is not a good father


S.Balakrishnan
ஜூன் 13, 2025 18:15

வன்னியர் வளர்ச்சி கழகம் ஆரம்பித்து பாட்டாளி மக்கள் கட்சியை ஸ்தாபித்து தேர்தலுக்கு தேர்தல் வளமான கட்சியுடன் கூட்டணி வைத்து எத்தனை தைலாபுரத்தை உண்டாக்கி இருக்கிறீர் ? யாரை வாழ வைக்க தலைவர் பதவி மோகம் ? எத்தனையோ நல்ல தலைவர்களை உங்கள் சுயநலத்திற்காக கட்சியை விட்டு வெளியேற்றி இப்போது காலம் போன காலத்திலும் பெற்று வளர்த்த மகனுடன் கருத்து வேறுபாடு என்ற போர்வையில் கட்சிக்காக பாடு பட்டு கட்சி மீது நம்பிக்கை வைத்து இத்தனை ஆண்டுகள் ஓட்டு போட்ட தொண்டனை விட பணத்தாசையின் மீது உள்ள மோகம், வயதான காலத்தில் புத்தி மழுங்கி உளர வைப்பது வேதனையாக இருக்கிறது.


Kumar Kumzi
ஜூன் 13, 2025 17:37

பதவி வெறியில் ககட்டுமரத்துக்கு சளைத்தவரல்ல இந்த அழுகிப்போன மாம்பழம்


SUBBU,MADURAI
ஜூன் 13, 2025 18:44

மண்டை மண்ணுக்குள்ள போற வரைக்கும் இந்த பெரிய மாங்காய்க்கு புத்தி வராது ஆமா நீங்க தான் இந்த கட்சி நிறுவனர் ஆனா இப்ப உங்களுக்கு 85 வயசாச்சு கட்டுமரம் மாதிரி தள்ளு வண்டியில் தவழ்வதற்கு முன்பு கட்சியை சின்ன மாங்காயிடம் ஒப்படைப்பதுதான் சாலச் சிறந்தது.அதைவிட்டுட்டு திமுக அனுதாபியான GK மணியின் பேச்சை நம்பினால் மருத்துவருக்கு அதோ கதிதான் பரிசாக கிடைக்கும்...


Srinivasan Srisailam Chennai
ஜூன் 13, 2025 17:26

உங்களின் இந்த வயதில் ஏற்படும் ரத்த கொதிப்பும் மன உளைச்சலும் உங்கள் உயிருக்கு தீங்கு ஏற்படுத்த கூடும் . நீங்கள் தலைமையை மகனுக்கு கொடுத்த போது இளைஞர்களுக்கு வழி விடுகிறீர்கள் என்று நினைத்தோம் அதனை உண்மையாகி ஓய்வு பெறுங்கள் ஆன்மீகம் உங்கள் மன உளைச்சலுக்கு ஆறுதல் தரும்...


முக்கிய வீடியோ