உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உரிமைக்கொடி ஏந்துவேன்; ஊர்ந்து போகமாட்டேன்: இ.பி.எஸ்., நையாண்டிக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

உரிமைக்கொடி ஏந்துவேன்; ஊர்ந்து போகமாட்டேன்: இ.பி.எஸ்., நையாண்டிக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தமிழகத்திற்கான நியாயமான நிதி உரிமையை நிடி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24ம் தேதி டில்லி செல்கிறேன். எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன். ஊர்ந்து போகமாட்டேன்'' என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.வரும் மே 24ம் தேதி இந்த ஆண்டிற்கான நிடி ஆயோக் கூட்டம், டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mmk8f24w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்திற்கான நியாயமான நிதி உரிமையை நிடிஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24ம் தேதி டில்லி செல்கிறேன். சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?பா.ஜ., உடன் கூட்டணி கிடையாது என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் புலிகேசியாக மாறி வெள்ளைக்கொடி ஏந்திச் சென்ற பழனிசாமி, என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா? எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன். ஊர்ந்து போகமாட்டேன். இன்றைக்குக் கூட, தமிழகத்தின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். தமிழகத்திற்கான நிதியைப் போராடிப் பெறுவேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

S.V.Srinivasan
மே 28, 2025 10:27

இந்த மாதிரி வீர வசனமெல்லாம் யாரு எழுதி கொடுக்கிறாங்கோ ?


krishnamurthy
மே 24, 2025 08:33

உடன் பிறப்பே உடன் பிறப்பே என்று சொல்லி சொல்லியே உடன் பிறக்காது ஊர் உலகத்தையே ஏமாற்றி மாற்றி மாற்றி ஏமாற்றி ஏமாற்றிய..... பிறப்புகள் ஏமாற்றிய.... பிரபுக்கள் உண்மையான உணர்வு இதயத்தில் இருந்து பிறக்க வேண்டும் வார்த்தைகளால் வல்லமை கட்டும் காலம் இப்போது கடந்து விட்டது பனங்காட்டு நரி எப்போதோ பணம்கட்டும் நரியாக உருவம் மாறிவிட்டது ஊர் உலகத்தையே ஏமாற்றி விட்டது சொல் ஓன்றும் செயல் வேறும் என்றும் வென்றதாகவே சரித்தரம் இல்லை


SVR
மே 22, 2025 07:40

ஒன்றை கவனிக்க வேண்டும். நேற்று உச்ச நீதி மன்றத்தில் மாணவர் படிப்புக்கு உண்டான பணம் ரூ 2000 கோடிக்கும் மேலாக மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்று கேட்டு பெட்டிஷன் போட்டாகிவிட்டது. இன்று அதை சுப்ரீம் கோர்ட் அதை கேட்டு நோட்டீஸ் அனுப்பினால் வேலை முடிந்தது. ஏன்? கோர்ட்டில் உள்ள கேஸ் பற்றி விவாதிக்க கூடாது என்பது மரபு. அதனால் நீதி ஆயோகில் அதை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. யாரிடமும் ஊர்ந்து போக வேண்டிய அவசியம் இல்லை. அங்கே போய் பேச வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே இந்த திராவிஷம். பேசினாலும் யாருக்கும் புரிய போவதும் இல்லை. அங்கே மற்றவர்கள் பேசுவது புரிய போவதும் இல்லை. ஒரே கல்லுல நிறைய மாங்கா. டெல்லிக்கு படை எடுத்தாயிற்று. ஜோலி முடிந்தது. இங்கு வந்து ஒப்பாரி, தம்பட்டம் மற்றும் இன்னும் என்னவோ அடிக்கலாம். இங்கு தான் செம்மறி ஆடு கூட்டம் பெரிசாக இருக்கிறதே. எல்லாம் தலைய தலைய ஆட்டுங்கள்.


venugopal s
மே 21, 2025 23:27

இபிஎஸ் போல முதல்வர் ஸ்டாலின் அவர்களும் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சிபிஐ இதை எல்லாம் கண்டு பயந்து டெல்லி சென்று ...


தத்வமசி
மே 21, 2025 22:54

சட்டையை கிழித்துக் கொள்ளாமல் இருங்கள். எடப்பாடி ஊர்ந்து சென்றது, தவழ்ந்து சென்றது இருக்கட்டும். நீங்கள் ஊர்ந்து அல்லது தவழ்ந்து சென்றீர்களோ இல்லையோ, அறைக்குள்ளே வரவழைத்து கூட்டணி கட்சிகளிடம் எப்படி மண்டியிட்டு இருக்கிறீர்கள் என்பது தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்.


ராமகிருஷ்ணன்
மே 21, 2025 21:22

வீண் வெட்டி பந்தா பித்தலாட்ட பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. தேர்தல் முடிந்த பிறகு கூப்புக்கு போயி ஆக ஆக எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று பினாத்த தயாராக இருக்கவும்


தாமரை மலர்கிறது
மே 21, 2025 21:11

ஊர்ந்து போனாலும், நடந்து போனாலும் தமிழகத்திற்கென்று தனியாக எதுவும் கொடுக்கப்படாது. மத்திய அரசு சொல்வதை கேட்டு நடப்பது தான் மேயர் ஸ்டாலினுக்கு புத்திசாலித்தனம். ஏதாவது அரசியல் செய்ய நினைத்தால், டாஸ்மாக்கில் ரைடு விட்டு, அமித் ஷா வெளுத்துவிடுவார்.


Kjp
மே 21, 2025 19:33

கூடா நட்பு கேடாய் முடியும் என்று காங்கிரஸ் கட்சியை கழட்டி விட்டு பாஜக தீண்டத்தகாத கட்சியல்ல என்று சொல்லி பாஜக உடன் கூட்டணி வைத்து பதவி சுகத்தை அனுபவித்தவர் தானே உங்கள் அப்பா.இபிஎஸ் கேட்ட கேள்விகளுக்கு பதிலே இல்லை.வெட்டி வீர வசனம்.. சட்டத்தை எரிக்க வில்லை.காகிதத்தில் எழுதித் தான் எரித்தோம் என்று நீதிமன்றத்தில் ஜகா வாங்கியவர் தானே உங்கள் அப்பா.வீர வசனம் பேசாமல் இபிஎஸ் கேட்ட யார் அந்த தம்பி அதற்காவது பதில் கூறுங்கள்.


இராம தாசன்
மே 21, 2025 18:51

அது வெள்ளை நிறத்தில் இருக்கும் ஆமா சொல்லிப்புட்டேன்


sridhar
மே 21, 2025 18:20

இந்த முறை யார் காலில் விழுந்தாலும் சிறை நிச்சயம் . சங்கு தான் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை