உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., தலைவராக தொடர்வேன்: அன்புமணி

பா.ம.க., தலைவராக தொடர்வேன்: அன்புமணி

சென்னை: 'பா.ம.க., தலைவராக தொடர்ந்து செயல்படுவேன்' என, அன்புமணி தெரிவித்துள்ளார்.பா.ம.க.,வினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:கட்சி கொள்கை விதிகளின்படி, பா.ம.க., தலைவரை, பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். அதன் அடிப்படையில், 2022 மே 28ல் சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், ராமதாஸ் வாழ்த்துகளுடனும் தொண்டர்களின் ஆதரவுடனும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. எனவே, பா.ம.க., தலைவராக தொடர்ந்து செயல்படுவேன். எந்த நோக்கத்திற்காக தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, அந்த நோக்கத்தை நோக்கி, உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க உறுதி பூண்டிருக்கிறேன். மாமல்லபுரம் மாநாடு மிகச்சிறப்பாக நடத்தப்பட அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து வருகிறேன். வரும் சட்டசபை தேர்தலைப் பொறுத்தவரை, தொண்டர்கள் விரும்பும் வலிமையான கூட்டணியை, ராமதாஸ் வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது, என் பெரும் கடமை. அந்தக் கடமையை, சரியான நேரத்தில் செய்து முடிப்போம்.அரசியல் களத்தில் ராமதாஸ் லட்சியங்களை வென்றெடுக்க, தொண்டர்களை விரைவில் சந்திப்பேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Santhakumar Srinivasalu
ஏப் 13, 2025 10:08

அப்பனும் மகனும் டிராமா போட்டு கட்சியை சிதச்சு அழிச்சுருவாங்க


Ramesh Babu
ஏப் 13, 2025 08:28

இப்போ தெரியுதா ஒரு பெண்மணியா கட்சியை வழி நடத்துநாங்க அம்மா அம்மா தான்


Vasan
ஏப் 13, 2025 08:13

Its a political stunt by Father & Son. By showing them to all as though they have decided, now each of them will independently invite and discuss with DMK/ADMK-BJP for seat negotiations. Whoever gives a larger share, the party will align with and the 2 factions will again become 1.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை