உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்; கட்சியினருக்கு விஜய் அழைப்பு

இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்; கட்சியினருக்கு விஜய் அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்' என தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக். 27ல் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடக்க உள்ளது. இது குறித்து இன்று (அக்.,25) சமூகவலைதளத்தில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே.வணக்கம். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு நிகழப் போகும் தருணம், நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=imca5jeo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பத்திரமாக வாருங்கள்

அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை. அத்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது, பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியைக் கைகளிலும், மனங்களிலும் ஏந்தி வாருங்கள்.

வெற்றி நிச்சயம்

உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன். வாருங்கள், மாநாட்டில் கூடுவோம். நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம். வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

venugopal s
அக் 25, 2024 22:29

யாரை வேண்டுமானாலும் நம்பி எந்தக் கட்சியின் பின்னால் வேண்டுமானாலும் போகலாம் ஆனால் பாஜக என்ற கட்சியின் பின்னால் மட்டும் போய் விடாதீர்கள் மக்களே!


sridhar
அக் 25, 2024 18:52

Poker face தான் இவருடைய ஸ்டைல். எப்படி தான் ரசிக்க முடிகிறதோ .


Rajarajan
அக் 25, 2024 16:52

இப்படித்தான் ஒருத்தர், வைகறையில் பேசுகிறேன், உங்களை ஏமாற்ற மாட்டேன்னு, முதல் நாள் மேடையில் சபதம் செஞ்சார். பின்னர் சைக்கோ ஆகி, அதே கட்சியில் கூட்டணி என்ற பெயரில் ஐக்கியமானார். சக்கர நாற்காலியை கேலி செய்தவர், அதே நாற்காலியில் ஐக்கியமானார். காங்கிரஸ் பரம்பரை என்றார் ஒருவர். பின்னர் திராவிட கட்சி இல்லையேல், நாங்களில்லை என ஈரோடு அழுகிய வெங்காயமானார் .


Rengaraj
அக் 25, 2024 16:02

ஆண்ட கட்சிகள், அந்த கட்சிக்காரர்கள், எதிர்க்கட்சிகள், மத்திய அரசு மாநில அரசு இப்படி பார்க்கவேண்டாம். சிம்பிளா யோசிக்கணும். துணிக்கடைக்கு போறதா இருந்தாக்கூட நல்ல கடையா, நிறைய வெரைட்டி இருக்கா, விலை கொறைச்சு தருவாங்களா அப்படின்னு ஒன்றுக்கு நாலு தரம் யோசிக்கும் நம்ம மக்கள் , குறைந்த பட்சம் ஒரு வார்டு கவுன்சிலர் கொண்டிருக்கும் நிர்வாக அனுபவம் கூட இல்லாத விஜய்க்கு வோட்டு போட்டு ஆட்சியில் அமரவைத்து முதல்வராக்கி விடுவார்களா ? அந்த அளவுக்கு நமது மக்களை கேவலமாக மதிப்பிட்டு குறைத்து எடைபோட்டுவிட்டார்களே இந்த அரசியல்வாதிகள். ?? ஒரு பியூன் வேலைக்குக்கூட நேர்மையையும், குறைந்தபட்ச கல்வி தகுதியையும் முன்னனுபவமாக எதிர்பார்க்கும் நம்மூர் தொழிலதிபர்கள் வியாபாரிகள் , கோடிக்கணக்கில் கருப்பு வெள்ளை என்று பணத்தில் விளையாடுபவரை ஆட்சியில் அமர்த்துவார்களா ? அந்த அளவுக்கு அவர்களுக்கு அறிவு இல்லாமலா இருக்கும் ? தேர்தல் அன்னைக்கு வோட்டு போடக்கூட போகாம கூலி முக்கியம்னு வேலைக்கும் சம்பளத்துக்கும் போறவங்க இருக்கிற இன்றைய விலைவாசில , கூலிவேலை , குறைந்த மாசசம்பளம் வாங்குறவங்க எல்லோரும் அவங்கவங்க வேலையை விட்டுபுட்டு விஜய்க்காக வர்றாங்களா ? நிர்வாகிகள் எல்லோரும் எதுவுமே எதிர்பார்க்காமலா கூடுகிற கூட்டத்தை எல்லாம் காசுகொடுக்காம இலவசமா கூட்டிட்டு வர்றாங்க? எவனுமே வேணாம்னு விஜய்யை ஆதரிக்கிறாங்கன்னா அவங்க எல்லோரும் நோட்டாவுக்கு வோட்டு போட்டிருக்கலாமே .? நடக்கறது எல்லாம் நம்புறமாதிரியா இருக்கு ? மொத்தத்தில் விஜய் தான் சம்பாதிச்சதை வரி எதுவும் செலுத்தாம செலவழிக்க அருமையான வழியை கண்டுபிடுச்சிருக்கார் . அல்லது ஏதோ ஒரு கட்சி விஜய்க்கு பணம்கொடுத்து கட்சி ஆரம்பிக்க வைச்சுருக்கு அப்படின்னுதான் நேர்மையான வாக்காளன் நினைப்பான் விஜய் வந்து மாற்றத்தை கொண்டுவந்துடுவார்னா அதுக்கு குறைந்த பட்சம் தகுதியாவது அவருக்கு இருக்கா என்று கொஞ்சம்கூட யோசிக்காத பொழுதுபோகாத ஒரு கூட்டம் அவர் ஐந்து சதவீதம் வோட்டு எடுப்பார், பத்து வரை போகும் , கூட்டணி போட்ட இந்த மாதிரி, போடவில்லை என்றால் இந்த மாதிரி அப்படின்னு வெட்டியா அரட்டை அடிக்கும் . இந்த கேவலமான லட்சணத்தில் இதையும் விவாதம் பண்ண வேலைவெட்டிஇல்லாமால் ஓவென்று ஒலம்போட்டு காட்டுக்கத்தல் பண்ணும் பேச்சாளர்களை கொண்ட தொலைகாட்சி ஊடகங்கள் , அதைவைத்து பொழுதை ஓட்டும் சமூகவலைத்தளங்கள் விஷயங்கள் லோக்கல் கவுன்சிலரை கூப்பிட்டு அடைச்சுக்கிடக்கிற சாக்கடையை கிளீன் பண்ணவைக்க வக்குஇல்லாத ஒரு கூட்டம் தமிழக அரசியல் விமர்சகர்களாம் , நிபுணர்களாம் எல்லாம் மனித உழைப்பை வீணடிக்கும்


Mettai* Tamil
அக் 25, 2024 14:45

மாற்று அரசியலா இல்லை இன்னொரு உலக்கை நாயகனா என்பதை காலம் தான் பதில் சொல்லும்......


Ramesh Sargam
அக் 25, 2024 13:38

அமெரிக்க தேர்தலில் வாக்காளர்களை கவர எலான் மஸ்க் என்பவர் தினம் ஒரு மில்லியன் டாலர் பரிசாக அறிவித்து, கொடுத்தும் வந்தார். அதை கேள்விப்பட்ட அந்நாட்டு நீதிமன்றம் அவரை கண்டித்து அதுபோன்ற செய்லகளை செய்யக்கூடாது என்று மிரட்டி இருக்கிறது. அதுபோன்று நம்நாட்டிலும் நீதிமன்றங்கள் தன்னிச்சையாக செயல்படவேண்டும்.


Ms Mahadevan Mahadevan
அக் 25, 2024 13:30

இதை எல்லாம் பார்க்கும் பொது ஒரே குட்டையில் ஊறிய மட்டை மாதிரிதான் தெரிகிறது. இலவச டீ டோக்கன், இதய வாசல் தமிழகத்தின் வெற்றி போன்ற பில்ட்டப் பார்த்தால் பழைய குறுடிதான் ..


VASANTHA RANI
அக் 25, 2024 13:25

அரசாங்க கடைய அன்று மட்டும் சிக்கிரம் 8 மணிக்கு திறக்கச்சொல் தலைவா வாசலுக்கு தானாக வந்துவிடுவோம் .


HoneyBee
அக் 25, 2024 13:15

யார் டயலாக் எழுதி கொடுத்தது... முதலில் உன் தாய் தந்தையை நீ மதிக்க கற்றுக் கொள். உன் மனைவியே குழந்தைகளுடன் வெளியேறி விட்டாள். நீயெல்லாம் அடுத்த ஹாசன் மாதிரி தான். கேரவன்ல நீஅடிக்கற கொட்டம்... வேஸ்ட் லக்கேஜ்


Anand
அக் 25, 2024 13:52

என்னது, இவனோட மனைவி குழந்தைகளுடன் வெளியேறி விட்டார்களா?


rahmat abdul
அக் 25, 2024 13:06

இதுவும் கடந்துபோகும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை