உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 5 ஆண்டுகளில் ஆகச்சிறந்த நாடாக மாற்றுவேன்; மாடு மேய்க்கும் போராட்டத்தில் சீமான் பேச்சு

5 ஆண்டுகளில் ஆகச்சிறந்த நாடாக மாற்றுவேன்; மாடு மேய்க்கும் போராட்டத்தில் சீமான் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேனி: ''இந்த நாட்டை 5 ஆண்டுகளில் ஆகச்சிறந்த நாடாக மாற்றுவேன்'' என தேனி நடந்து மாடு மேய்க்கும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில் தெரிவித்தார். தேனி மாவட்டம் போடி, முந்தல் அருகே அடவுப்பாறையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்றhttps://www.youtube.com/embed/ifquUGT5Cfsசீமான் பேசியதாவது: இலங்கையில் எங்களை குண்டு போட்டு கொன்றார்கள், அது இனப்படுகொலை. இங்கு குடிக்க வைத்து கொல்கிறான், இதுவும் இனப்படுகொலை. அவன் ஒன்றரை லட்சம் பேரை ஒரே ஆண்டில் கொன்றான்.

5 ஆண்டுகளில்...!

இவன் 5 லட்சம் பேரை 5 ஆண்டில் கொல்கிறான். இரண்டும் ஒன்றுதான். இந்த நாட்டை உலகத்தின் தலை சிறந்த நாடாக, பூமியின் சொர்க்கமாக மாற்றி படைப்போம். 5 ஆண்டுகளில் ஆக சிறந்த நாடாக மாற்றுவேன். அவ்வளவு திட்டங்கள், சிந்தனைகள் எல்லாம், கோடி கனவுகள் கொண்டோம். அதனை நிறைவேற்ற கூடி வாருங்கள், ஓடி வாருங்கள் என் மக்களே. அவங்களுக்கு தெரியாது. ஆடு, மாடு என்றால் என்ன என்று நினைத்து கொண்டு இருக்கிறான். ஆடு, மாடுகள் மேய்ப்பது தொழில்முறைகள் அல்ல; எங்களது வாழ்க்கை முறை, கலாசாரம், பண்பாடு.

போராட தெரியவில்லை!

மாட்டுப்பொங்கல் என்று கொண்டாடிய பரம்பரை நாங்கள். கூரிய கொம்புகள் இருப்பதை மறந்து மாடுகள் வண்டி இழுத்துக் கொண்டிருக்கின்றன; மாடுகளுக்கு போராட தெரியவில்லை. மேய்ச்சல் நிலம் என்பது எங்களது உரிமை. ஜாதி, மதம் கொடிய நோய், அது நம்மை பிரிக்கும். ஆனால் மொழி உணர்வே நம்மை இணைக்கும். இவ்வாறு சீமான் பேசினார்.

வழக்குப்பதிவு

தேனி மாவட்டம் குரங்கனி வனப்பகுதியில் தடையை மீறி மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

KRISHNAN R
ஆக 04, 2025 10:29

ஒரு வேளை இவருக்கு மாட்டு பாஷை புரியும் போல் தெரிகிறது


N Annamalai
ஆக 04, 2025 08:41

இவருக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு .காசு கொடுக்காமல் தகுதி உள்ளவர்களை நிறுத்தி வோட்டு கேட்கிறார் .கடுமையாக உழைக்கிறார் .அவருக்கு மாற்று கருத்து சொல்ல ஒரு கட்சிக்கும் பதில் இல்லை .இப்படித்த்தான் ஆம் அத்மீ கட்சி பிஜேபி பகுஜன் சமாஜ் கட்சி இருந்தது


Jack
ஆக 04, 2025 08:56

காசு கொடுப்பதில்லை ஆனா பொட்டி வாங்கறாரா என்பது தான் கேள்வி


சாமானியன்
ஆக 04, 2025 07:54

மாட்டுக்கறி சாப்பிடுவதை நிறுத்தினால் நல்லது.


Jack
ஆக 04, 2025 08:57

ஆமை கறி சாப்பிட்டாராம் ..


pmsamy
ஆக 04, 2025 07:31

அவதூறாக பேசிய சீமான் அரசியலில் இறந்து விட்டார்


theruvasagan
ஆக 03, 2025 18:02

அஞ்சறிவு உள்ள பிராணிகள்தானே. நாம என்ன உளறினாலும் கேணத்தனம் செய்தாலும் கண்டுக்காது என்கிற தைரியம்தான்


தத்வமசி
ஆக 03, 2025 17:44

சும்மா வாயால் வடை சுடலாம். ஆட்சி என்பது வேறு, பேச்சு என்பது வேறு. இங்கு நல்ல ஆட்சியை யாரும் விரும்புவதாக தெரியவில்லை. எனக்கு என்ன கிடைக்கும் ? யார் ஆட்சிக்கு வந்தாலும் இலவசம் கிடைக்குமா ? நான் இரண்டு கையாலும் சம்பாதிக்க வேண்டும். ஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பீங்க ? இயற்கை வளத்தை- மண்-ஜல்லி-கிரானைட்-சவுடு மண் என்று எல்லாவற்றையும் சுரண்டிக் கொண்டே இருப்போம். வெளிமாநிலம்-வெளிநாடு அனுப்புவோம். அதை தடுக்கக் கூடாது. கட்டணம் எதுவும் ஏறக் கூடாது, வரி கட்ட இயலாது, வருமானம் இல்லை என்று தான் கணக்கு காட்டுவோம். கடன் தள்ளுபடி கிடைக்குமா ? கடன் வாங்குங்கள் வாங்காமல் போங்கள், எங்களிடம் கேட்கக் கூடாது. நல்ல ரோடு-எப்போதும் மின்சாரம்-நல்ல குடி தண்ணீர் வேண்டும். யார் தருவீர்கள் ? அவர்களுக்கு எங்கள் ஓட்டு. இது தான் தமிழ்நாடு.


அப்பாவி
ஆக 03, 2025 17:41

பாஞ்சி லட்சம் போடுவேன்னவர், புது விடியல் தர்ரேன்னவர் லாமெ ஒண்ணும் செய்ய முடியலை. இதுல இவுரு புது காமெடி.


Jack
ஆக 03, 2025 19:19

கார்த்தாலே கலை கடன்களை பிரச்னையில்லாம போக்கினோமா என்று சந்தோஷமா வாழ பழகிக்கொள்ளுங்கள்


sankaranarayanan
ஆக 03, 2025 16:46

மனிதர்கள் யாரும் சீமான் சொல்லி கேட்பது இல்லையாம் வாக்கு போடுவதும் இல்லையாம் ஆதலால் இனி விலங்குகளையாவது வைத்து ஆடு மாடு இவைகளை வைத்து அரசியல் செய்தாலாவது ஏதாவது வாக்கு கிடைக்குமா என்ற எண்ணம்தான் சீமானுக்கு இப்போது ஞானோதயம் உண்டாயிருக்கிறது வெற்றி கிட்டட்டம் வாழ்த்துவோம் ஊர் ஊர் ஊராக இதேபோன்று தொடரட்டும்


உண்மை கசக்கும்
ஆக 03, 2025 15:43

சிறந்த நாடா? இவர் என்ன முதல்வராக போகிறாரா இல்லை பிரதமராக போகிறாரா?


Kasimani Baskaran
ஆக 03, 2025 15:15

இலங்கை பற்றி பேசினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கலாம்.


புதிய வீடியோ