உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மன்னிப்பு கேட்க மாட்டேன்: சொல்கிறார் கமல்

மன்னிப்பு கேட்க மாட்டேன்: சொல்கிறார் கமல்

திருவனந்தபுரம்: '' தமிழில் இருந்து தான் கன்னடம் தோன்றியது என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்,'' என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல் கூறியுள்ளார்.மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் உருவான 'தக்லைப்' படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இதற்கான 'புரோமோஷன்' நிகழ்ச்சிகளில் கமல் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர்,' தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது,' என்றார்கமலின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. கன்னட மொழிக்கு என்று வரலாறு உள்ளது. அது கமலுக்கு தெரியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.அமைச்சர் சிவராஜ் கூறுகையில், கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவரது படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.அதேபோல், கமலின் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மாநில பா.ஜ., தலைவர் அசோகாவும் கூறினார்.இந்நிலையில் கேரளாவில் நடந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் கமல் பேசியதாவது: கன்னடம் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது. நான் சொன்ன கருத்தை எனது பக்கம் இருந்து பார்த்தால் சரியாக இருக்கும். நான் சொன்னதை உங்கள் பக்கம் இருந்து பார்த்தால் தவறாக தோன்றும். கன்னடம், குறித்து நான் சொன்னது அன்பினால் மட்டுமே. ஏராளமான வரலாற்று ஆசிரியர்கள் எனக்கு மொழிப்பாடம் எடுத்தனர். தமிழகத்தில் தான் 'மேனன்' முதல்வராக இருந்தார். 'ரெட்டியும்' , ' கன்னட ஐயங்காரும்' தமிழகத்தில் முதல்வராக இருந்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்தவரும் முதல்வராக இருந்துள்ளார். நான் உட்பட, எந்த அரசியல்வாதியும் மொழி குறித்து பேச தகுதிபெறவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

உண்மை கசக்கும்
மே 29, 2025 12:33

கமல் பேச்சினால், கர்நாடகாவில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு ஏதாவது ஒரு சின்ன அடி விழுந்தால் கூட, கமல் தான் பொறுப்பு.


Varuvel Devadas
மே 29, 2025 11:38

What Mr. Kamal said is correct. If someone argues incorrectly without knowing the truth, it is his/her foolishness. Kamal does not need to accept an apology at all. Suppose someone from Tamil Nadu supports the stupid politicians, who do not know about the history of Tamil Literature. In that case, that person should be punished very badly through electoral ballots, and thrown out of Tamil Nadu. I strongly support Kamal in this matter.


Sekar
மே 29, 2025 10:37

நாடு இருக்கும் சூழலில் இது தேவை இல்லாத ஒன்று. தமிழை வைத்து நீங்கள் எத்தனை காலம்தான் அரசியல் செய்வீர்கள். தமிழை தமிழர்களை வாழ விடுங்கள். நீங்கள் வாழ்வதற்காக இரு மாநிலத்துக்கு இடையே தேவை இல்லாத பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம். உங்கள் டைம் பாஸுக்காக தமிழை கையில் எடுக்க வேண்டாம். தமிழை உயர்த்தி பிடிக்க நினைத்தால் உங்கள் செல்வாக்கை வைத்து தமிழ் மாணவர்களுக்கு தரமான இலவச கல்வி கொடுங்கள். தமிழகம் நூறு சதவிகிதம் கல்வி பெற்றவர்கள் கூடமாக அமைய வழி செய்யுங்கள்.


MUTHU
மே 29, 2025 09:34

இங்குள்ளவர் இல்லாத திராவிடத்தை வைத்து அரசியல் பண்ணுகிறார். அங்குள்ளவர் கன்னடத்தை வைத்து அரசியல் பண்ணுகிறார். மொழிகளின் வரலாறுகள் தெரிந்த இங்கும் அங்கும் உள்ள மேதாவிகள் இதனை கண்டுகொள்ளாமல் தங்கள் பிழைப்பை பார்க்க சென்று விடுவார்கள்.


Baskar
மே 29, 2025 06:58

ஆகா, கமல் வலையிலே சிக்கிட்டே , நிலைமை தெரியாத அடிமையே


தாமரை மலர்கிறது
மே 29, 2025 01:49

கமல் நல்ல நடிகர். ஆனால் அவருக்கு அரசியல் தெரியாது. திமுக சாக்கடையில் விழுந்த பூமலர். அவ்வப்போது எதையாவது புரியாதபடி பேசுவார். புரிந்தால், இப்படித்தான் சர்ச்சை எழும்.


kumaran
மே 28, 2025 22:27

இப்போது தான் இந்திய தேசமே தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்று திரண்டு இருக்கிறது மேலும் கன்னடர்களும் தமிழர்களும் ஒருவருக்கொருவர் பிரச்சினை இல்லாமல் இருக்கிறார்கள் அது பிடிக்கவில்லையா


Govind
மே 28, 2025 22:23

இதப்பத்தி நம்ம செல்லம் பிரகாஷ்ராஜ் எதுவுமே சொல்லலாமா வாய மூடிக்கிட்டு இருக்காரு. ஏன்? இதான் அந்த ஆளோடோ யோகியதை. இத வடஇந்தியர்கள் சொல்லி இருந்தா அந்த ஆளு என்ன பேசி இருப்பாருன்னு உங்க கற்பனைக்கு விட்டு விடுகிறேன். பா ஜா க பத்தி பேசும் போது தாறுமாறா பேசுவாரு...இந்த வாட்டி வாய குடுத்து மாட்டுனது அவரோட நண்பர் உலக வாய் வீரர் கமல் அவர்கள்.... அதனால கப்சிப் .... கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தை ஒரு ரெட்டியார் ஆண்டார், ஒரு மேனன் ஆண்டார், கடைசியில் கன்னட ஐயங்கார் ஆண்டார் என்று சொல்லி இருப்பது அவர் திருந்த போவது இல்லை என்பதையே காட்டுகிறது. அப்போ ஓங்கோல் குடும்பத்தை மட்டும் சொல்லாமல் போனது ஏன்? மேலும் கன்னட ஐயங்கார் என்று ஜெயலலிதாவை மறைமுகமாக குறிப்பிட்டது என் ? ஜெயா உயிரோடு இருந்தபோது இதை பற்றி இசை கமலுக்கு ஏன் தைரியம் வரவில்லை? ஜெயா தான் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் என்கிற விளக்கத்தை கொடுத்தபிறகும் அவரை அவர்தம் காலம் முடிந்தபிறகு வம்புக்கு இழுப்பானேன் ?


ஆரூர் ரங்
மே 28, 2025 22:03

உண்மையாக இரு‌ந்தாலு‌ம் சிலவற்றைப் பேசாமல் இருப்பது உத்தமம். கன்னட எழுத்துலகில் சூப்பர் ஸ்டார் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், கன்னட நாடக உலகின் தந்தை கைலாசம் போன்ற பல முன்னோடிகள் தமிழர்களே. பெங்களூருவை உருவாக்கிய அரசர் கெம்பே கவுடா தமிழர்.இதனை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள் ஆனாலும் அவர்கள் மனம் கோணும்படி பேசுவது தவறு.


மூர்க்கன்
மே 29, 2025 12:03

அவர் எங்கே கோணும்படி பேசினார் அன்பாகத்தானே பேசினார் கோணல் புத்தி உடையவர்கள் எதை பேசினாலும் கோணலாகவே புரிந்து கொள்வார்கள். மன்னிப்பு அது தமிழ்ல மட்டுமல்ல கன்னடத்திலும் பிடிக்காத வார்த்தை. சத்யராஜ் ,ரஜினிகாந்தை விட கமல் தஃ க் லைப் கொடுத்துட்டாரு?? இதுக்காக மட்டுமே தனியே கொடுக்கணும் ஒரு பூச்செண்டு.


Ramesh Sargam
மே 28, 2025 21:56

என்னாப்பா அண்ணனுக்கு திடீரென்று தமிழ் பற்று. தமிழர்கள் ஆதரவுக்கு ஒரு நாடகமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை