உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நோக்கம் நிறைவேற்றாமல் பின்வாங்க மாட்டேன்

நோக்கம் நிறைவேற்றாமல் பின்வாங்க மாட்டேன்

என் குழந்தைகளின் படிப்புக்காக, கனடாவில் வசித்து வந்த நிலையில், எட்டு ஆண்டுகளுக்கு முன், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட என் தந்தை வைகோவை கவனித்துக் கொள்வதற்காக தான் இந்தியா வந்தேன். வயதான காலத்தில் பெற்றோரை கவனித்துக் கொள்வது, குழந்தைகளின் அடிப்படை கடமை. மாறாக, அரசியலில் குதிக்கும் எண்ணம் எனக்கு துளிகூட இருந்ததில்லை. என் தந்தை மீது, கட்சியினர் வைத்துள்ள பாசத்தின் வலிமையை உணர்ந்து, அதற்கு மதிப்பளிக்கும் நோக்கில் தான் கட்சிக்கு வந்தேன். நான் அரசியலுக்கு வந்தது விபத்து தான். ஆனால், நோக்கத்தை நிறைவேற்றாமல் பின்வாங்க மாட்டேன்.ம.தி.மு.க., துவங்கி, 31 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், கட்சிக்கான சுய மரியாதை, அங்கீகாரத்தை பெற்றே தீர வேண்டும். அதற்கு, சட்டசபை தேர்தலில், அதிக 'சீட்' வாங்கியே ஆக வேண்டும். பின், வெற்றி பெற்றே ஆக வேண்டும். - துரை வைகோ,முதன்மை செயலர், ம.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 06, 2025 15:10

குழந்தைகளின் படிப்புக்காக,கனடா நாட்டுக்கு ஏன் செல்லவேண்டும். இங்கு படிப்பவர்கள் மனிதர்கள் இல்லையா? புலிகளின் பணத்திற்காகத்தானே கனடாவை தேர்ந்தெடுத்தீர்கள் . நேர்மையாக இருப்பது போன்று சீன் காட்டுவதில் தகப்பனுக்கு மிஞ்சிய பிள்ளை


Bhaskaran
ஜூலை 06, 2025 08:30

நீ மீண்டும் கனடாவுக்கே போ அதுதான் நீ தமிழ்நாட்டுக்கு செய்யும் பெரிய நன்மை அது சரி அடுத்த மில் எங்கே வாங்க போகிறாய்


pv, முத்தூர்
ஜூலை 06, 2025 06:47

கிரீடத்தை சபித்தவன், தன் வாரிசுக்காக ஒன்றை செதுக்கினான் (He who cursed the crown, carved one for his heir)- வைகோ. வாங்கபோர இரண்டு சீட்கு எவ்வளவு பேசவேண்டியிருக்கு.


Mani . V
ஜூலை 06, 2025 05:26

வைகோவை திமுக வை விட்டு விலக்கும் பொழுது அவருக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தை பற்றி நீங்கள் இருவரும் என்றாவது நினைத்துப் பார்த்தது உண்டா? சரி துரை சிகெரெட் வியாபாரம் எல்லாம் எப்படி போகிறது? லாபம் கோடிகளில் கொட்டுகிறதுதானே? கட்சிக்கு உழைத்தவன் தீக்குளித்து இறப்பான். ஆனால், இவர்கள் பிள்ளைகள் மட்டும் கனடாவில் படிப்பார்களாம்.


Mahendran Puru
ஜூலை 06, 2025 08:52

புலிப் பணம் கனடாவில் புழக்கம் அதிகம். பங்கு வாங்குவதற்கு மகனை அங்கேயே அனுப்பி வைத்தார் அப்பா. குளம் வற்றியதும் தாயகம் திரும்பியாயிற்று. இதற்கு இவ்வளவு வீர ஆவேசமாய் பேச வேண்டிய அவசியமில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை