| ADDED : பிப் 08, 2024 02:13 AM
அவிநாசி:திருப்பூர் மாவட்டம், அவிநாசி தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பசாமி பா.ஜ.,வில் இணைவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து, கருப்பசாமி கூறியதாவது:நான் மாற்றுக் கட்சியில் இணைந்ததாக பொய்யான தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.நான் ஒருபோதும் அ.தி.மு.க.,வை விட்டு விலக மாட்டேன். கடந்த 2011ம் ஆண்டு அவிநாசி தொகுதியில் ஜெயலலிதா உத்தரவுப்படி அ.தி.மு.க.,வில் போட்டியிட்டு 62,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். ஜெயலலிதாவிற்கு பின், கட்சியை கட்டி காத்து வரும் பொதுச்செயலர்பழனிசாமி வழிகாட்டுதல் படி பயணிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.