உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்புமணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டேன்: ராமதாஸ்

அன்புமணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டேன்: ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காததை கண்டித்து அன்புமணி தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகனான கட்சித் தலைவர் அன்புமணிக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, 'நானே தலைவர்' என ராமதாஸ் அறிவித்தார். அன்புமணியையும், அவரது ஆதரவாளர்களையும் நீக்கிவிட்டு, புதிய நிர்வாகக் குழுவை ராமதாஸ் அறிவித்துள்ளார்.அருள் எம்.எல்.ஏ.,வை கொறடா பொறுப்பில் இருந்து நீக்க அன்புமணி, சபாநாயகரிடம் கடிதம் கொடுத்ததை அடுத்து, சட்டசபையில் கட்சி இரண்டாக உடைந்தது. தேர்தல் ஆணையத்தையும் அணுக இரு தரப்பும் முடிவு செய்துள்ளனர்.இந்நிலையில், வன்னியர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்காத தி.மு.க., அரசை கண்டித்து வரும் 20ம் தேதி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அன்புமணி அறிவித்துள்ளார். தனது தலைமையில் போராட்டம் நடக்கும் எனக்கூறியுள்ளார்.இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய ராமதாஸ், ' அன்புமணி தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன், ' எனத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Bhaskaran
ஜூலை 12, 2025 09:14

தாத்தாவுக்கு சுசீலா அழுத்தம் என்ன‌செய்வாரு.


Jagan (Proud Sangi )
ஜூலை 11, 2025 21:07

இது போன்ற ஜாதியை வைத்து கட்டபஞ்சயாத்து செய்யும் கூட்டம் ஒழிந்தால் நாட்டுக்கு நலமே. வன்னிய இளைஞர்களுக்கு ஒரு சிறிய அறிவுரை - இந்தியாவில் இப்போது தன்னலமற்ற மக்கள் சேவையில் எப்போதும் இருப்பது RSS இயக்கம் மட்டுமே என்ற உண்மை அறிவீர்.


nagendhiran
ஜூலை 11, 2025 21:23

இப்படி பதிவு போட மாட்டான்?


KR india
ஜூலை 11, 2025 20:46

வன்னியர்களே , பா.ம.க ராமதாஸ் அணிக்கு வாக்களிப்பதா ? அல்லது பா.ம.க அன்புமணி அணிக்கு, வாக்களிப்பதா என்ற பெரும் குழப்பத்தை, தந்தையும், மகனும் சேர்ந்து ஏற்படுத்தி விட்டனர். குறிப்பாக, சட்டமன்ற தேர்தலுக்கு, இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இவ்வாறு, தந்தையும், மகனும் பிரிந்து இருப்பது, மிகப் பெரிய பிளவை நோக்கி பா.ம.க சென்று கொண்டிருக்கிறது. அன்புமணி, ராமதாஸ்க்கு பின்னர் கட்சியை வழி நடத்த போவது அவர் தான் என்ற நிலை உள்ளது என்பதை உணர்ந்து, இருவரும், சமாதானமாக சென்றால் மட்டுமே கட்சி தேறும் .இல்லையென்றால், குறைந்த பட்சம், 2026 தேர்தலில், இந்த கட்சி தேறுவது கஷ்டம் தான் அதற்கு, பின்பாவது தேறுமா என்பது, அன்புமணி அவர்கள், கட்சியை வழிநடத்தும் விதத்தில் மட்டுமே தெரிய வரும். அன்புமணி அவர்களின் நடை பயணத்தின் மூலம் அவர் செல்வாக்கு கூடுமா என்பதை, பொறுத்து, கட்சியின் எதிர்காலம் கணிக்கப்படும். அதை, காலம் பதில் சொல்லும்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 11, 2025 20:26

உங்க ஐடியா தெரிஞ்சுபோச்சு. நீங்க வருவீங்கன்னு நாலு சேர் எக்ஸ்ட்ராவா போடச்சொல்லி இருக்காரு. நீங்க வராட்டி காலி சேரை எல்லாம் படம்புடிச்சு கேமிராகாரங்க பேப்பர்ல போடுவாங்க. அதைக்காட்டி அன்புமணிக்கு கூ ட்டம் சேரலைன்னு சொல்லிடலாம்தானே. ஆசை தோசை அஸ்க்கு புஸ்க்கு அப்பளம் வடை


hariharan
ஜூலை 11, 2025 19:33

தமிழகத்தின் ஷரத் பவார்.


visu
ஜூலை 11, 2025 19:24

அவருடைய எண்ணம் மக்கள் வழி பேரனுக்கு கட்சியில் செல்வாக்கு ஏற்படுத்துவது அதில் அன்புமணிக்கு உடன்பாடில்லை இதனால் ராமதாஸ் வயதான காலத்தில் தேவையற்ற முயற்சிகளில் இறங்கி கட்சியை அழிக்கிறார்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 11, 2025 21:10

அந்த மாதிரி ஒரு புண்ணாக்கும் கிடையாது. சூட்கேஸு சைசுல சண்டை ரெண்டு பேருக்குமே பெட்ரோமேக்ஸ் லைட்தான் வேண்டுமாம்.


R.MURALIKRISHNAN
ஜூலை 11, 2025 19:08

தொண்டர்கள் இல்லாத கட்சி. எப்படி உடைந்தால் என்ன?.


Anand
ஜூலை 11, 2025 19:07

நீயெல்லாம் உன்னோட மொகரக்கட்டையை வெளியில் காட்டாமல் வீட்டுக்குளேயே வைத்து இருப்பது தான் மக்களுக்கு நல்லது.


Jagan (Proud Sangi )
ஜூலை 11, 2025 19:03

பணம் வரவில்லை என்றால் தாத்தா ஒரு அடி நகர மாட்டார். குடும்ப பிசினெஸ்ஸாக இருந்தாலும் கறார் கறார் தான். "கைல காசு வாயில தோசை" தான் பாலிசி


Anbuselvan
ஜூலை 11, 2025 19:01

அப்போ இவருக்கு வன்னியர்களின் ஐடா ஒதுக்கீடை விட மகனுடன் சண்டை முக்கியமாகி விட்டது போல் தெரிகிறதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை